வாழைப்பூ மருத்துவம்

 வாழைப்பூ மருத்துவம்

 

Home



பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்
             Bael Fruit
 


மங்கலகரமான வாழையின் ஒவ்வொரு பாகமும் பயன்படுகின்றது (வாழையிலை, வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பழம்). வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் தெரிந்தால் அதைச் செய்வது கடினமாகினும் அடிக்கடி செய்வோம்.

1.
இரத்தத்தைச் சுத்தப்படுத்த

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் கிரகிப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

2.
சர்க்கரை நோயாளிகளுக்கு

இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

3.
வயிற்றுப்புண் நீங்க

இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

4.
மூலநோயாளிகளுக்கு

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

5.
பெண்களுக்கு

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும் .வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும்.

6.
உடல் அசதி, வயிற்று வலி குறையும். வாழைப்பூவைப் பருப்புடன் சேர்த்து உண்டால் கை,கால் எரிச்சல் குணமாகும்.வயிற்றில் இருக்கும் புழுக்களைக் கொல்லும் சக்தி வாழைப்பூவிற்கு உண்டு. ஆண்களுக்கு தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும்.

ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு சக்தி, வாழைப்பூ பலவிதப் பிரச்சினைகளைப் போக்கும் வல்லமை கொண்டது. அப்படிப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூவை உசிலியாக, அடையாக, வடையாக, கூட்டாகப் பல வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

தொடர்புக்கு

K7 Herbo Care, 

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147