சிறுநீரக நோய்களின் அறிகுறிகள்

 சிறுநீரக பிரச்சினைகளும் அதனை சரி செய்யும் வழிமுறைகளும்
பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்              Bael Fruit
 

இன்றைக்கு சிறுநீரக பிரச்சினை அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய பிரச்சினை ஆகி விட்டது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே வந்த பிரச்சினை இப்போது சிறு குழந்தைகளுக்கு கூட வர ஆரம்பித்து விட்டது. இதற்கு அடிப்படை காரணம் இன்று நாம் எடுத்துக் கொள்ளும் அதிக சக்தி வாய்ந்த மருந்துகள் மற்றும் நாம் அன்றாடம் குடிக்கின்ற நீரும் கூட சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு காரணம். 

  சிறு சளி, காய்ச்சல் என்றால் கூட அதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அந்த நோய்க்கான அறிகுறிகளை உடனே சரி செய்ய வேண்டி நாம் எடுத்துக் கொள்ளும் சக்தி வாய்ந்த மருந்துகள் நம் கல்லீரலையும் சிறுநீரகத்தையும் உடனடியாக மிகத் தீவிரமாக பாதிக்கின்றன.

    நாம் சாப்பிடும் உணவிலுள்ள ரசாயன நச்சுப் பொருட்களும் நம் சிறுநீரகத்தை பாதிக்கின்றன. இன்று நாம் தினமும் குடிக்கும் கேன் வாட்டர், மினரல் வாட்டர், RO வாட்டர் என்றெல்லாம் அழைக்கப்படும் சப்பைத் தண்ணீரும் நமது சிறுநீரக நோய்களுக்கு ஒரு நேரடி காரணமாகும். 

    இன்று நாம் அனைத்து சிறுநீரக பிரச்சினைகளை பற்றி பேசினாலும், அனைத்து சிறுநீரக நோய்களையும் மருந்துகளால் குணப்படுத்தும் மருத்துவம் எது என்பதே ஒரு முக்கியமான விஷயம். ஏனென்றால் சாதாரண சிறுநீரக கற்களையே கரைக்க முடியாமல் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யும் ஒரு மருத்துவ முறையினால், மிகவும் பாதிக்கப்பட்ட அல்லது முற்றிய செயல்படாத நிலையில் இருக்கும் சிறுநீரகத்தை செயல்பட வைக்க முடியுமா என்பதை நாம் தான் சிந்தித்து பகுத்துணர்ந்து சரியான மருத்துவ முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். 

    நமது சித்த, ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் சாதாரண சிறுநீரக கற்களிலிருந்து செயல்படாமல் இருக்கும் சிறுநீரகங்களை திரும்பவும் ஆரோக்கியமாக செயல்பட வைப்பதற்கு தேவையான அனைத்து மருந்துகளும் உள்ளது.

   சிறுநீரக பாதிப்புகள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் அவற்றின் அறிகுறிகளைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

சிறுநீரக செயலிழப்பு என்றால் என்ன?
முக்கியமாக சிறுநீரகங்கள், கழிவுப் பொருட்களை வடிகட்டி இரத்தத்திலிருந்து பிரித்து எடுத்து உடலுக்கு வெளியே தள்ளுகிறது. உபரியான திரவங்களையும் அது வெளியேற்றுகிறது. மின்கடத்தும் திரவங்களின் நிலையையும் சமநிலையாக்கி அமிலங்களின் அளவையும் சரியான நிலையில் வைக்கிறது. இந்த வேலையை அது சரிவரச் செய்ய முடியாத நிலைக்குத் தான் சிறுநீரகங்கள் செயலிழப்பது என்கிறோம்.

குறுகியகால சிறுநீரக செயலிழப்பு

இதில் சிறுநீரகங்களின் செயல் மிகக் குறைந்த காலத்திற்கே இழக்கப்படுகிறது. இது பல்வேறு காரணங்களினாலும், உடலுக்கு ஏற்படும் பலவித தாக்கங்களினாலும் ஏற்படுகிறது. இவ்வகை செயலிழப்பு பெரும்பாலும் தாற்காலிகமானதாக இருக்கிறது. முறையான சிகிச்சையால், சிறுநீரகங்கள் வெகு சீக்கிரத்தில் சாதாரண நிலைக்குத் திரும்பி விடுகின்றன.

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு

பல மாதங்களுக்கு,  தொடர்ந்து மோசமாகிக் கொண்டு, சாதாரண நிலைக்குத் திருப்ப முடியாத வகையில் சிறுநீரகங்கள் செயலிழப்பதற்கு நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என்று பெயர். CRF என்று சொல்லுவர். குணப்படுத்த முடியாத இந்த நோயின் தாக்குதலால் சிறுநீரகத்தின் செயல்பாடு மெல்லமெல்லக் குறைந்துவரும். வெகுநாட்களுக்குப் பிறகு சிறுநீரகங்கள் முற்றிலுமாக செயலிழக்கும் நிலைக்கு  தள்ளப்படும். இந்த மிக முற்றிய நிலையை, முடிவு நிலை சிறுநீரக நோய் (End stage kidney disease (ESKD)) என்று சொல்லுவர்.

சிறுநீரக நோய்களின் அறிகுறிகள்
 
முகம் வீங்குதல்

முகம் வீங்குதல், அல்லது பாதங்களும் அடிவயிறும் வீங்குதலும் இந்த நோய்களைக் காட்டிக் கொடுத்து விடும். இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், வீக்கங்கள் முதலில் முகத்தில் ஆரம்பித்து கண் இமைகளைத் தொட்டு விட்டு முக்கியமாக காலை வேளையில் மிகவும் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும் நிலைகளாகும்.

பசியின்மை மற்றும் வாந்தி எடுத்தல்

பசியின்மை, அசாதாரண வாய் ருசி, மற்றும் மிகக் குறைவாக உணவில் நாட்டம் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். இது மேலும் மேலும் பழுதாகும்பொழுது, விஷப் பொருட்களின் அளவு இரத்தத்தில் அதிகமாகும்பொழுது,  சம்பந்தப்பட்ட நோயாளிக்கு வாந்தி மற்றும் அடிக்கடி விக்கல்கள் வரும்.

உயர் இரத்த அழுத்தம் - ஹைப்பர் டென்ஷன்

சிறுநீரகங்கள் பழுதடைந்தவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருவது சகஜம். இளம் வயதில் அதாவது 30 வயதிற்குள் இது ஏற்பட்டால் அல்லது மருத்துவர் சோதிக்கும்பொழுது உயர் இரத்த அழுத்தம் உறுதியானால், சிறுநீரகக் கோளாறுகளே அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இரத்தசோகையும் உடல் நலிவாதலும்

உடல்நலிவு, ஆரம்ப வலிகள், கவனக் குறைபாடு ஆகியவை இரத்த சோகை உள்ளவர்களுள் தென்படும் பொதுவான அறிகுறிகளாகும். மிக மிக மோசமாக சிறுநீரக நோய்கள் தாக்கும் பொழுது இது போன்ற அறிகுறிகள் ஆரம்பமாகலாம். பொதுவான சிகிச்சைகள் மூலம் இரத்த சோகையை குணப்படுத்த முடியவில்லையெனில், சிறுநீரக செயலிழப்பு என்பதை உறுதி செய்யலாம்.

எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத தாக்கங்கள்

கீழ் முதுகில் வலி, உடல் வலி, அரிப்பு மற்றும் கால்களில் பிடிப்பு போன்றவை பொதுவாக சிறுநீரக நோய்களின் பிரதிபலிப்பு ஆகும்.
வளர்ச்சி குன்றுதல் மற்றும் உயரம் குறைவாக இருத்தல் மற்றும் கால் எலும்புகள் வளைந்து கொடுத்தல் - இவை எல்லாம் சிறுநீரக நோய்கள் குழந்தைகளைத் தாக்கும்பொழுது வரக் கூடிய அறிகுறிகள்.

சிறுநீரகங்களின் நோய்களை கண்டறிதல்
 
மிக மோசமான சிறுநீரக நோய்களைக் குணப்படுத்த முடியாது. இதன் மிக மோசமான நிலைகளை குணப்படுத்துவது என்பது ஒரு சில மருத்துவ முறைகளில் மிக மிகச் செலவு மிக்க ஒன்றாகும். இவ்வகை மோசமான நோயை உடையவருக்கு எந்தவித அறிகுறியும் வெளிப்படையாகத் தெரியவே தெரியாது. அப்படி ஒருவேளை ஆரம்ப காலங்களிலேயே அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், அதை மருத்துவத்தால் குணப்படுத்த வாய்ப்பு உண்டு. ஆகவே சிறுநீரகக் கோளாறுகள் இருப்பதாக சந்தேகப்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு தன்னை உட்படுத்திக் கொள்வது சாலச்சிறந்தது.

யார் சிறுநீரகக் கோளாறுகள் வருவதற்கான அபாயம் உள்ளவர்கள்?

எவருக்கும் சிறுநீரகக் கோளாறுகள் வரலாம். ஆனால் அதிகமான அபாயத்திற்கு உள்ளாகக்கூடியவர்கள் யார் என்றால்
  • சிறுநீரக நோயின் அறிகுறிகள் ஏற்கனவே காணப்பட்டவர்கள்
  • ஏற்கனவே நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள்
  • குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்கள் இருந்தால் அல்லது இரத்த அழுத்தம் இருந்தால்
  • புகை பிடிப்பவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள் அல்லது 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்
  • வெகு பல வருடங்களாக வலி நிவாரணி மருந்துகளை உபயோகிப்பவர்கள்
  • பிறப்பு முதலே சிறுநீர்ப் பாதையில் பிரச்னை உடையவர்கள்
ஆரம்ப காலத்திலேயே அறிகுறிகளைக் கண்டு கொள்வது இம்மாதிரியான நபர்களுக்கு சிகிச்சைகளை துவங்க நன்மை பயக்கும்.


  தொடர்புக்கு...
For Contact...