வன்னிமரம் பயன்கள்

வன்னிமரம் பயன்கள்




பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்              Bael Fruit
 

நமக்கு அருகில் எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மூட்டுவலி, வீக்கத்தை சரிசெய்ய கூடியதும், ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டதுமான வன்னி மரத்தின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். பல்வேறு நன்மைகளை கொண்டது வன்னி மரம்.

இது, சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. உடலில் உள்ள கொழுப்பு சத்தை குறைக்கும். தோல்நோய்களை குணப்படுத்த கூடியது. தலை சுற்றலுக்கு அற்புதமான மருந்தாகிறது. பல நோய்களுக்கு மருந்தாகி பயன்தருகிறது. வன்னி இலைகளை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மற்றும் தலைசுற்றல், மயக்கத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வன்னி இலைகள், சீரகம், தனியா, பனங்கற்கண்டு. செய்முறை: பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர்விடவும்.

இதனுடன் வன்னி இலைகள், சிறிது தனியா, சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும்.  இதை வடிகட்டி குடித்துவர நரம்புகள் பலப்படும். தலைசுற்றல், மயக்கம் சரியாகும். நரம்பு மண்டலத்துக்கு பலம் தருகிறது. ரத்தகசிவை நிறுத்த கூடியதாக விளங்குகிறது. வன்னிமர இலைகள் தொட்டா சுருங்கியை போன்று காணப்படும். தட்டையான உருவம் கொண்ட இதன் காய்கள் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. வன்னி மரப்பட்டையை பயன்படுத்தி மூட்டுவலி, வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: வன்னி மரப்பட்டை, சுக்குப்பொடி, பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் நசுக்கி வைத்திருக்கும் வன்னி மரப்பட்டை, சுக்குப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி குடித்துவர முடக்குவாதம் சரியாகும். மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் குணமாகும். எலும்புகள் பலவீனத்தால் ஏற்படும் வலி, வீக்கம் இல்லாமல் போகும். வன்னிமர பூக்களை பயன்படுத்தி மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் அதிக ரத்தபோக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: வன்னி பூக்கள், திரிபலா சூரணம், பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதில், நசுக்கி வைத்திருக்கும் வன்னி பூக்கள், திரிபலா சூரணம், பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துர ஈறுகளில், மூக்கில் ரத்தம் வடிதல் பிரச்னைகள் சரியாகும். மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் அதிக ரத்தபோக்கை கட்டுப்படுத்தும்.

அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது வன்னி மரம். ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உடைய இதை பயன்படுத்தி மூட்டுவலி, மாதவிலக்கு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாணலாம். கொழுப்பை கரைக்கும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். உடலில் கொழுப்பை குறைத்தால் இதயத்துக்கு நல்லது. உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இஞ்சி, பூண்டு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை வெந்நீரில் கலந்து குடித்துவர கொழுப்பு சத்து கரையும். உடல் எடை குறைந்து ஆரோக்கியம் ஏற்படும்.

நன்றி: தினகரன்


 மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...