மாசிக்காய் மருத்துவ பயன்கள்

மாசிக்காய் மருத்துவ பயன்கள்




பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்              Bael Fruit
 


சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும், ஓர் அற்புதமான மருந்து, மாசிக்காய். இக்காய் மற்ற மரங்களின் காயைப் போல், பூவிலிருந்து காயாகாது. இந்த மரத்தின் கிளைகளை ஒருவித பூச்சிகள், துளையிடும்போது, கிளையிலிருந்து பால் வடிந்து அது உறைந்து திரண்டு கெட்டிப்படும். இதுவே மாசிக்காயாகும்.
மாசிக்காயை பொடி செய்து வெந்நீரில் போட்டு, 10 நிமிடம் சென்ற பின் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும். மாசிக்காயை பொடி செய்து, அதனை சிறிதளவு தினம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு மாத விடாயின்போது ஏற்படும், அதிக ரத்தப் போக்கு கட்டுப்படும். மாசிக்காயை பொடித்து, 50 கிராம் எடுத்து, 800 மி.லி., நீருடன் கலந்து, 10 நிமிடம் நன்கு காய்ச்சி பின்னர் வடிகட்டி அதனை, 30 மி.லி., முதல் 60 மி.லி., வீதம் அருந்தி வந்தால், பெண்களுக்கு ஏற்படும்
வெள்ளைப்படுதல், நாட்பட்ட இருமல், பெருங்கழிச்சல் முதலியவை குணமாகும்.

பொதுவாக குழந்தைகளுக்கு, உரைத்துக் கொடுக்கப்படும், உரை மருந்து வகைகளில் மாசிக்காயும் ஒன்றாகும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, பச்சை பச்சையாக பேதியாகும். இதற்கு புது மண்சட்டியை வாங்கி வந்து கவிழ்த்துப் போட்டு, அச்சட்டியின் மேல் மாசிக்காயை தாய்ப்பால் விட்டு இழைத்து குழந்தையின் நாவில் தடவி வந்தால் பேதி நிற்கும்.

மாசிக்காயிலிருந்து ஒருவகை மஞ்சளும், வெண்மையும் கலந்த நிறம் உடைய, துவர்ப்புச்சுவை கொண்ட உப்பை எடுக்கிறார்கள். இது சிறந்த துவர்ப்பியாகவும், ரத்தப்போக்கை நிறுத்துவதற்கும் பயன்படுகிறது. நாள்பட்ட மேக நோய்களுக்கு மாசிக்காயை குடிநீரிலிட்டு, 30 மி.லி., முதல் 60 மி.லி., வீதம் அருந்தி வந்தால், பலன் கிடைக்கும். தொண்டை வலி, டான்சிலைட்டிஸ் எனப்படும் தொண்டை அழற்சி நோய் உடையவர்கள் இதன் குடிநீருடன், 3 மில்லி கிராம் படிகாரமும், தேவையான அளவு தேனும் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் குணம் தெரியும்.

மாசிக்காயையோ, மாசிக்காய் மரப்பட்டையையோ நீரில் ஊற வைத்து, ஊறல் குடிநீரை வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும். அல்லது கஷாயம் வைத்தும் பயன்படுத்தலாம். 30 60 மி.லி., வரை அதையே உள்ளுக்கும் அருந்தி வரலாம். இதன் மரப்பட்டையை சாதாரண கழிச்சல், ரத்த வாந்தி, சிறுநீரில் ரத்தம் போகுதல், மாதவிலக்கின்போது அதிக ரத்தம் வெளியாதல், மேக நோய், ஈறுகளிலிருந்து ரத்தம் வடிதல், சீதக்கழிச்சல் முதலிய பிரச்னைகள் தீரவும் கொடுக்கலாம். தக்க மருத்துவரின் ஆலோசனையை கேட்டு, பின்பற்றுவது நல்லது.

பொதுவாக குழந்தைகளுக்கு உரைத்துக் கொடுக்கப்படும் உரை மருந்து வகைகளில் மாசிக்காயும் ஒன்றாகும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பச்சை பச்சையாக பேதியாகும். இதற்கு புது மண்சட்டியை வாங்கி வந்து கவிழ்த்துப் போட்டு அச்சட்டியின் மேல் மாசிக்காயை தாய்ப் பால் விட்டு இழைத்து குழந்தையின் நாவில் தடவி வர பேதி நிற்கும்.

மயில் துத்தம், பூநீறு உப்பு, சுண்ணாம்பு நீர், அபினி, நாபி, எட்டி முதலியவற்றை அளவுக்கு மீறி உட்கொண்டதால் உண்டான நஞ்சுக்கு சிறந்த முறிவாக மாசிக்காய் பயன்படுகிறது.

மாசிக்காயையோ, மாசிக்காய் மரப்பட்டையையோ நீரில் ஊற வைத்தால் ஊறல் குடிநீராகவும் அல்லது கஷாய மிட்டும் வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும். 

30 முதல் 60 மி.லி. வரை அதையே உள்ளுக்கும் அருந்தி வரலாம். இதன் மரப்பட்டையை சாதாரண கழிச்சல், ரத்த வாந்தி, சிறுநீரில் ரத்தம் போகுதல், மாதவிலக்கின்போது அதிக ரத்தம் வெளியாதல், மேக நோய், ஈறு களிலிருந்து ரத்தம் வடிதல், சீதக்கழிச்சல் முதலியவைக ளுக்கும் கொடுக்கலாம்.
குழந்தை மருத்துவத்தில் மாசிக்காய் பல காலமாக மருந்தாக பயன்படுத்தப் பட்டு வருவதை நமது பாட்டிமார்களை கேட்டுப் பார்த்தால் கதை கதையாக சொல்வார்கள்.

சித்த மருத்துவத்திலும் மிக முக்கியமான பங்கினை பெறுவதை அனுபவமிக்க சித்த மருத்துவர்களின் குறிப்புகளை படிக்கும் போது நன்கு உணரலாம்.
சித்த மருத்துவத்தில் மாசிக்காய் குடிநீர் ஒரு சிறந்த மருந்தாகும். மகளிர் மருத்துவத்தில் இந்த மாசிக்காய் மருந்து பெரும் நன்மையினை தரக்கூடியதை நமது முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தனர்.
விஞ்ஞானம் முன்னேறாத அந்த காலக் கட்டத்தில் மாசிக்காய்தான் பெண்களுக்கு வரும் வெளியே சொல்லக்கூடாத நோய்களுக்கு மருந்தாக இருந்து வந்தது.


மூலத்தை குணப்படுத்தும் மாசிக்காய்
புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டதும், மூலத்துக்கு மருந்தாக பயன்படுவதும், முகப்பருவை மறைய செய்வதும், ரத்த கசிவை போக்க கூடியதும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியதுமானது மாசிக்காய். பல்வேறு நன்மைகளை கொண்ட மாசிக்காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
மாசிக்காய் கடினமாக இருக்கும் என்பதால், அதன் பொடியை வாங்கி பயன்படுத்தலாம். 

மாசிக்காயை பயன்படுத்தி முகப்பருக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
மாசிக்காய் பொடி, சாதிக்காய் பொடி, எலுமிச்சம் பழம்.சிறிதளவு
மாசிக்காய் பொடியுடன் சிறிது சாதிக்காய் பொடி, சிறிது எலுமிச்சம் பழம் சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை இரவு நேரத்தில் முகப்பருவின் மீது பூசவும். பின்னர், காலையில் முகம் கழுவினால் முகப்பரு மறையும்.
மாசிக்காய் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. தசையை இறுகச் செய்வதுடன் நோய்களை தடுக்கிறது. புற்றுநோய், அல்சர் வராமல் பாதுகாக்கிறது.
மாசிக்காயில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் மற்றும் இரும்பு சத்து, கால்சியம் சத்து, நார்ச்சத்து உள்ளது. ரத்த கசிவை போக்குகிறது. புண்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை பெற்றது. மாசிக்காயை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்.
ஒரு ஸ்பூன் மாசிக்காய் பொடியுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். ரத்தமூலம் இருப்பவர்கள், மாதவிலக்கு சமயத்தில் அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்.  வாய் புண் தொண்டை புண் குணமாகிறது.


மாசிக்காய் பொடியை பயன்படுத்தி மூலத்துக்கான வெளிபூச்சு மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
மாசிக்காய் பொடி, அகத்தி கீரை, விளக்கெண்ணெய்.
ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் ஊற்றவும். இதில் அகத்தி கீரையை போட்டு வதக்கவும். கீரை பொறிந்ததும் மாசிக்காய் பொடியை சேர்க்கவும். இந்த தைலத்தை வடிக்கட்டி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதை மேல்பூச்சாக ஆசனவாயில் பயன்படுத்தும்போது, மூலம் சரியாகும். மூலத்தை சுருக்கி இயற்கை நிலைக்கு கொண்டுவரும்.
வெள்ளைப்போக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
மாசிக்காய் பொடி, பனங்கற்கண்டு, காய்ச்சிய பால். ஒரு ஸ்பூன்.
மாசிக்காய் பொடியுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டிய பின்னர் பால் சேர்க்கவும். இதை குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும்.
மாசிக்காயில் உன்னதமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது, உள் மற்றும் வெளி மருந்தாக விளங்குகிறது.
பூஞ்சை காளான்களை போக்குவதுடன், நுண் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. ‘மாயபலா’ என்ற வடமொழி பெயரை கொண்ட மாசிக்காய், வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய மருத்துவ பொருளாகும்

மாதவிலக்கு பிரச்னைக்கான மருத்துவ முறைகள்:-

மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள் :-
அத்திமரப்பட்டை, மாமரப்பட்டை, மாதுளை, பனங்கற்கண்டு.
அத்திமரப்பட்டை, மாமரப்பட்டை ஆகியவற்றை சுத்தப்படுத்தி ஒரு கைப்பிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் மாதுளம் பழத்தின் தோல், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலை என இருவேளை 100 மில்லி அளவுக்கு குடித்துவர அதிக உதிரப்போக்கு கட்டுக்குள் வரும்.
இந்த தேனீர் மூலம் நோய்க்கு மருந்தாக அமைகிறது. மாமரம் மற்றும் அத்தி மரத்தின் பட்டை, மாதுளை ஆகியவை மாதவிலக்கு பிரச்னைக்கு நல்ல பலன் தருவதாக அமைகிறது.


வில்வ இலையை பயன்படுத்தி அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
வில்வ இலை, செம்பருத்தி.
50 முதல் 100 மில்லி அளவுக்கு குளிர்ந்த நீர் எடுக்கவும். இதில், சிறு நெல்லிகாய் அளவுக்கு வில்வ இலை பசை சேர்க்கவும். சிறு நெல்லிக்காய் அளவுக்கு செம்பருத்தி பூ பசை சேர்க்கவும். பின்னர், நன்றாக கலந்து காலை, மாலை என இருவேளை குடித்துவர அதிக உதிரப்போக்கு நிற்கும்.
செம்பருத்தி துவர்ப்பு சுவை உடையது. பல்வேறு நன்மைகளை கொண்ட செம்பருத்தி மாதவிலக்கு பிரச்னையை சரிசெய்கிறது. துவர்ப்பு சுவை உடைய பொருட்கள் ரத்தத்தை கட்டுப்படுத்த கூடியது. ரத்தத்தை கெட்டிப்படுத்தும் தன்மை கொண்டவை.


மாசிக்காயை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
மாசிக்காய், தேன். அரை ஸ்பூன் அளவுக்கு
மாசிக்காய் பொடி எடுக்கவும். இதனுடன் தேன் சேர்த்து கலந்து காலை, மாலை சாப்பிட்டுவர அதிக உதிரப்போக்கு கட்டுக்குள் வரும்.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மாசிக்காய் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.
இது துவர்ப்பு சுவை உடையது. மாதவிலக்கு பிரச்னைக்கு அற்புதமான மருந்தாக விளங்குகிறது

நன்றி: தினமலர்

  மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
 To Buy the Herbals and also For Contact...