மகிழம்பூ - மருத்துவம்

மகிழம்பூ - மருத்துவம் 





பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்              Bael Fruit
   

உஷ்ணம் தணிய...

கோடை வெயிலின் கடுமையைத் தணிப்பதில் மகிழம்பூ முன்னோடியாய்த் திகழ்கிறது. நான்கு மகிழம்பூக்களை ஒரு டம்ளர் வெந்நீரிலிட்டு (இரவில்) மூடிவைக்கவும். மறுநாள் காலையில் பூக்களை எடுத்துவிட்டு தண்ணீரை மட்டும் பருகி வரவும். இதனால் உடல் உஷ்ணம் தணியும். சிறுநீர் சார்ந்த நோய்கள் விலகும்.

வியர்க்குருக்கள் மறைய...

புத்தம் புதிய மகிழம்பூக்களை ஒரு கைப்பிடியளவு எடுத்து, அத்துடன் ஒரு கையளவு பாசிப்பயறு, மூன்று வேப்பிலை, சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து உடம்பெல்லாம் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிக்க, வியர்க்குருக்கள் மறையும். மேலும் தொடர்ந்து பயன்படுத்திவர அழுக்குத் தேமல் அடியோடு மறையும்.

நல்ல தூக்கம் உண்டாக...

நான்கு மகிழம் பூக்கள், ஒரு தேக்கரண்டி தனியா விதை (கொத்தமல்லி) ஆகியவற்றைச் சேர்த்து, கொதிக்க வைத்து வடிகட்டி தினசரி இரவில் சாப்பிட்டு வாருங்கள். நிம்மதியான தூக்கம் உண்டாகும்.

மனபயம் விலக...

மகிழம்பூ, ரோஜாப்பூ, தாமரைப்பூ, தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் சுக்கு, ஏலக்காய் வகைக்கு 10 கிராம் சேர்த்து அனைத்தையும் ஒன்று கலந்து தூள் செய்யுங்கள். இதில் காலை- மாலை இருவேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டுவர மனபயம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை தீரும். மன அழுத்த நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இதனைச் சாப்பிட்டுவர அளப்பரிய பலன்களைப் பெறலாம்.

கற்றாழை நாற்றம் விலக...

மகிழம்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, கிச்சிலிக்கிழங்கு, வெந்தயம், பாசிப்பயறு, வெட்டிவேர், நன்னாரி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சந்தனம், சிவப்புச் சந்தனம் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி, அனைத்தையும் ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதனை உடம்பெல்லாம் பூசி குளித்து வர, உடலில் காணும் கற்றாழை நாற்றம் முற்றிலும் விலகிவிடும்.

தலைமுடி வளர...

மகிழம்பூ, மருதாணிப்பூ, ஆலந்தளிர், அரச இலைத்தளிர் ஆகியவற்றை வகைக்கு ஒரு கையளவு எடுத்து விழுதாய் அரைத்து, தலை முழுவதும் மயிர்க்கால்களில் படும்படி தேய்த்து, அரைமணி நேரம் ஊற வைத்துக் குளித்துவரவும். தொடர்ந்து 21 நாட்கள் இம்முறையைப் பின்பற்றினால் பலன் நிச்சயம். முடி உதிரல், செம்பட்டை முடி, முடி வெடித்தல், இளநரை போன்ற குறைபாடுகள் நீங்கி, முடி அடர்த்தியாய்- கருமையாய்- தாராளமாய் வளரும்.

பாலுணர்வு சக்தி மேம்பட...

மகிழம்பூ மனதை மயக்கி புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும். நமது மனத்தில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அறவே களைந்து நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்தும். மகிழ மர நிழலில் ஒரு குட்டித் தூக்கம் போட்டுப் பாருங்கள். அதன் சுகமே அலாதியானது.
குளுகுளு ஏசியைவிட, இயற்கை தரும் அரிய பரிசு மகிழ மரத்தின் கீழ் தூங்குவதுதான். மனம் புத்துணர்ச்சி பெறும். நமது உடம்பை இயக்கும் நாளமில்லா சுரப்பிகளை ஒழுங்காக இயங்கச் செய்யும் வல்லமை மகிழ மரத்திற்கே உண்டு.
நான்கு மகிழம் பூக்களை ஒரு டம்ளர் நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டிவிடவும். பின்னர் இத்தண்ணீருடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து அருந்த, நரம்பு மண்டலத்தை முறுக்கேற்றி பாலுணர்வு சக்தியை இருபாலருக்கும் மேம்படுத்தும். முழுமையான பலனைப் பெற இம்முறையை 48 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரவேண்டும்.

வெள்ளைப்படுதல் குணமாக...

மகிழம்பூ, பாதாம் பிசின், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில் காலை- மாலை இருவேளையும் அரை தேக்கரண்டியளவு சாப்பிட, ஏழு தினங்களில் வெள்ளைப்படுதல் குணமாகும். ஆண்- பெண் மர்ம உறுப்புகளில் உண்டாகும் புண் குணமாகும்.

படை, அரிப்பு தீர...

மகிழம்பூ அரை கிலோ, கருஞ்சீரகம் 100 கிராம்- இரண்டையும் சேர்த்தரைத்துக் கொள்ளவும். இதனை அரை தேக்கரண்டி அளவுக்கு உள்ளுக்குச் சாப்பிட்டு, பாதிக்கப்பட்ட இடத்தில் வெளிப்பூச்சும் செய்துவர படை, அரிப்பு தீரும். தொடை இடுக்குகளில் உண்டாகும் படை, அரிப்பு போன்ற தோல் வியாதிகளை முழுமையாகக் குணப்படுத்தும்.

தலைவலி குணமாக...

மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, தனியா, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை வகைக்கு 25 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில் காலை- மாலை இருவேளையும் அரை தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட, தலைவலி, நாள்பட்ட தலைவலி, தலைபாரம், ஒற்றைத் தலைவலி போன்ற குறைபாடுகள் தீரும்.

உடல் வலுவடைய...

மகிழம்விதை, நாயுருவி விதை ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து சேர்த்தரைத்துக் கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டியளவு காலை- மாலை இருவேளையும் சாப்பிட்டுவர உடல் வலுவடையும். ஆண்மை சக்தி உண்டாகும்.

வெட்டைநோய் தீர...

பட்டமரம் போலாக்கும் வெட்டை மேகத்தை விரட்டுவதில் மகிழம்பூ மிக முக்கிய பங்காற்றுகிறது. வெட்டைச் சூட்டினால் பாதிக்கப்பட்ட தேகம் மெலிந்து- கருத்து- களையிழந்து காணப்படும். முகப்பொலிவிழந்து 20 வயதுடையோர் 60 வயதைப்போல் காட்சியளிப்பர். அவர்களை மீட்டெடுத்து புத்துணர்ச்சி உண்டாக்கும் மகிழம் பூக்களை தலை வணங்கி, அதன் பாதம் பணிவதில் தவறில்லை.

மகிழம்பூ, கடுக்காய் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேர்த்து, அரை லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து கொள்ளவும். இதை காலை- மாலை இருவேளையும் சாப்பிட்டு வர வெட்டைச்சூடு விலகும். மேலும் பால்வினை நோய்களும் மறையும்.

பல் நோய்

மகிழம்பூ கசாய நீர் பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்களில் கொப்பளிப்பாக பயன்படுகிறது. இதனைக் கொண்டு வாய்க்கொப்பளிக்க பற்களும், ஈறுகளும் கெட்டிப்படும். மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய் கொப்பளிக்க வாய் புண் ஆறும். மகிழங்காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப் படும்

மகிழம் வழங்கும் பிற பயன்கள்...

மகிழமரப் பட்டையால் உடல் உஷ்ணம் தீரும். மகிழமரப் பட்டையை மருந்தாகப் பயன்படுத்தி வர முத்துப்போல் குழந்தை பிறக்கும். மகிழம் வேரை கொட்டைப் பாக்களவு உள்ளுக்குச் சாப்பிட, சீழ்பிடித்த புண்கள் ஆறும். மகிழம்பூக்களை கண்களில் கட்டிவர, கண்பார்வை கூர்மையாகும்.

மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...