அரளி

அரளி

பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்              Bael Fruit
 

அரளி நச்சுத் தன்மை வாய்ந்த தாவரம். நீளமான இலைகளுடன் காட்சியளிக்கும் அரளி தாவரத்தில் செவ்வரளி, வெள்ளரளி
ஆகிய வகைகள் உள்ளன. இதன் மலர் மாலைகளைக்
கோயில்களில் தெய்வ உருவங்களுக்குச் சார்த்துவர்.
திருக்கரவீரம், திருக்கள்ளில் முதலிய திருக்கோயில்களில்
தலமரமாக அலரி உள்ளது. மலர்கள் காட்சிக்காக
இங்கு வைக்கப்பட்டுள்ளன.

விஷச்செடியில் உள்ள வீரிய மருத்துவ குணம்!

அரளி விஷத் தன்மை வாய்ந்த தாவரம்.
இதன் மலர்களின் அலங்கார மதிப்புக்காக வளர்க்கப்படுகிறது.
அரளி, செவ்வரளி என்றழைக்கப்படும் இந்த தாவரம்
இந்தியா முழுவதும் தோட்டங்களிலும் கோவில்
பூந்தோட்டங்களில் அன்றாட பூஜைகளுக்குப்
பயன்படுத்துவதற்கென வளர்க்கப்படுகிறது.
மலர்கள், சிவப்பு அல்லது மஞ்சள், வெள்ளை
நிறத்தில் காணப்படுகின்றன. இத்தாவரம்
தற்கொலைக்கான முயற்சியுடனும், கருக்கலைப்புடனும்
தொடர்பு படுத்தப்பட்டதாகும். ஆனால் இதில் மருத்துவப் பயனும் அடங்கியுள்ளது.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் இருந்து எடுக்கப்பட்ட
செயல்படும் வேதிப்பொருட்களின் கராபின், நீரியோடெரின், நீரியோமோசைடுகள், நீரியாசைடு,
புளூமெரிசின்,கிளைகோசைடு, ஆகியவை முக்கியமானவை.


மருத்துவப்பயன் உடைய பகுதிகள்

தாவரத்தின் எல்லா பகுதிகளிலும் மேல்
பூசும் மருந்தாகப் பயன்படுகின்றன.
குறிப்பாக இலைகள், வேர் மற்றும்
வேர்ப்பட்டை மிக முக்கியமானவை.
தோல்நோய்களுக்கு மருந்து
இலைகளின் கசாயம் வீக்கம் குறைப்பான் ஆகும்.
இலைகளின் சாறு பால்வினை நோய் புண்களுக்கு
மேல் பூச்சாகப் பயன்படுகிறது. கண்நோய்களுக்கும்
இலைகளின் புதிய சாறு மருந்தாகும். வேர்ப்பட்டை
 மற்றும் இலைகளின் களிம்பு படை மற்றும் தோல்
 நோய்களில் பயன்படுத்தப்படுகிறது.
வேர் மட்டும் வேர்பட்டை நல்லதொரு கழலை
கரைக்கும் பூச்சு ஆகும். உடல்மெலிவிற்கு உதவுகிறது.
கருச்சிதைவினை தோற்றுவிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இதன் களிம்பு தொழுநோய் நாட்பட்ட புண் மற்றும் ரத்தம் கட்டியுள்ள இடங்களில் மருந்தாக தடவப்படுகிறது. இந்திய மருத்துவத்தில் காரவீரதியதைலம், தோல்நோய்களுக்கு முக்கிய மருந்தாக பயன்படுகிறது.


புற்றுநோயை குணப்படுத்தும்


'நைகோபோடிஸ் போடிடா" என்ற தாவரவியல் பெயர் கொண்ட அரளியின் இலை, வேர்களில் இருந்து கிடைக்கும் மூலிகைப் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து தயாரிக்க உகந்தது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும்.

நஞ்சாகும் அரளிச் செடி

இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் பயன்படுத்தினால் தலை எரிச்சல் காய்ச்சல், பித்தக் கோளாறுகள் போன்றவை நீங்கும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.
அரளி தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, நினைவிழப்பு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். அரளி நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் ஏற்படவில்லை எனில் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.
அரளி நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும், செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.

விஷம் மிக்க அரளி செடி ஒரு நல்ல மூலிகை -- எத்தனை பேருக்கு தெரியும்..?


*எங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி! அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல்கிப் பெருகும் இயல்புடையது. இதனுடைய இலையையோ, வேரையோ யாரும் மருத்துவ நோக்கில் யாரும் பயன்படுத்த மாட்டார்கள், பயன்படுத்தக்கூடாது. *ஏனெனில் அவை கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை.

அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும். *இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் யன்படுத்தினால் தலை எரிச்சல், சுரம், பித்தக் கோளாறுகள் போன்றவை அகலும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.

*வறண்ட நிலத்தில் கூட அரளி அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். *தூசு, இரைச்சல் இவற்றையெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் அரளி தாவரம் வளர்க்கப்படுகிறது.
*அரளி தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, நினைவிழப்பு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். அரளி நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி. *

அரளி நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும், செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.

 மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
 To Buy the Herbals and also For Contact... 

நன்றி: http://www.ziotamil.com/2016/03/very-very-dangeros-and-more-poisonous.html