Posts

வெள்ளரிக்காய் தினமும் சாப்பிட்டு வந்தால் ஒரே மாதத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்....

வெள்ளரிக்காய் தினமும் சாப்பிட்டு வந்தால் ஒரே மாதத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.... வெள்ளரிக்காய் ஜூஸில் வைட்டமின் கே அதிக அளவில் உள்ளது. இந்த ஜூஸை ஒரு நாளைக்கு ஆண்கள் 3 கப்பும், பெண்கள் 2.5 கப்பும் சாப்பிட்டால், ஒரு கப் காய்கறிகளை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளானது கிடைக்கும். மேலும் இந்த ஜூஸ் பல்வேறு நோய்களை சரிசெய்யக் கூடியவை. கோடை காலத்தில் தாகத்தை தணிப்பது போல், பல நன்மைகளை உடலுக்கு செய்கிறது. விட்டமின் சி அதிகம் உள்ளது. நீர்சத்தும் நிறைந்தது. ஆன்டி ஆக்ஸிடென்ட், பொட்டாசியம், கால்சியம் என நிறைய சத்துக்களை கொண்டிருக்கிறது. கூந்தல் சருமம் மற்றும் நகங்களின் அழகை அதிகமாக்குகிறது. தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால், ஒரு மாதத்தில் மேனி மெருகேறும். வேண்டுமென்றால் முயன்று பாருங்கள். கண்களின் கருவளையத்தை காணாமல் போகச் செய்யும். சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும். அதேபோல், வெள்ளரிக்காயில் உள்ள சிலிகான் என்ற மினரல் உடலின் இணைப்புத் திசுக்களுக்கு போஷாக்கு அளிக்கும். இதனால் சருமம் பொலிவாக, சுருக்கங்கள் இல்லாமல் இருக்கும். நம் உடலிலுள்ள நச்சுக்கள் மற்றும் கொழுப்பு செல்களே பல பாதி