Posts

மாவிலை, பல நோய்களுக்கான மாமருந்து!!!

மாவிலை, பல நோய்களுக்கான மாமருந்து!!! கோடையில் மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் இன்பம் வேறு லெவல்லாக இருக்கும், ஆனால் மாம்பழம் மட்டுமின்றி அதன் இலைகளும் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றன. இதன் இலைகளில் பல அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன. இதனை உட்கொள்வதன் மூலம் புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய்களில் இருந்து நீங்கள் விலகி இருக்க முடியும். மாவிலை பயன்கள்:  கோடை காலத்தை மக்கள் அதிகம் விரும்பாவிட்டாலும், இந்த சீசனில் மாம்பழங்கள் அதிகளவில் கிடைப்பதால், இந்த சீசனுக்காக மக்கள் காத்திருக்கின்றனர். ஜூஸி மாம்பழங்கள் எவ்வளவு சுவையானவையோ அதே அளவு நன்மை பயக்கும்... ஆனால் மாம்பழம் மட்டுமல்ல அதன் இலைகளும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மாவிலையில் உடலுக்குத் தேவையான பல வைட்டமின்கள் உள்ளன. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீனால்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களும் காணப்படுகின்றன. மா இலைகளை சாப்பிடுவதன் மூலம் பல நோய்களை விரட்டலாம். எனவே எந்தெந்த நோய்களில் இந்த இலை நன்மை பயக்கும் என்பதை அறிந்து கொள்வோம். மாவிலைகளில் இருந்து தண்ணீர் தயாரிப்பது எப்படி: இதற