மாவிலை, பல நோய்களுக்கான மாமருந்து!!!

மாவிலை, பல நோய்களுக்கான மாமருந்து!!!

கோடையில் மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் இன்பம் வேறு லெவல்லாக இருக்கும், ஆனால் மாம்பழம் மட்டுமின்றி அதன் இலைகளும் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றன. இதன் இலைகளில் பல அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன. இதனை உட்கொள்வதன் மூலம் புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய்களில் இருந்து நீங்கள் விலகி இருக்க முடியும்.

மாவிலை பயன்கள்: 
கோடை காலத்தை மக்கள் அதிகம் விரும்பாவிட்டாலும், இந்த சீசனில் மாம்பழங்கள் அதிகளவில் கிடைப்பதால், இந்த சீசனுக்காக மக்கள் காத்திருக்கின்றனர். ஜூஸி மாம்பழங்கள் எவ்வளவு சுவையானவையோ அதே அளவு நன்மை பயக்கும்... ஆனால் மாம்பழம் மட்டுமல்ல அதன் இலைகளும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மாவிலையில் உடலுக்குத் தேவையான பல வைட்டமின்கள் உள்ளன. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீனால்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களும் காணப்படுகின்றன. மா இலைகளை சாப்பிடுவதன் மூலம் பல நோய்களை விரட்டலாம். எனவே எந்தெந்த நோய்களில் இந்த இலை நன்மை பயக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.

மாவிலைகளில் இருந்து தண்ணீர் தயாரிப்பது எப்படி:

இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும். அதை கேஸ் அடுப்பில் வைக்கவும், பிறகு அதில் 2 முதல் 4 மா இலைகளை போடவும். தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்க விடவும். பின் அதனை வடிகட்டி ஆறவைத்து அதனுடன் தேன் சேர்த்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

மாவிலைகளின் நன்மைகள் என்னென்ன?

1. வயிற்றுப் புண்கள் :

மாவிலைகள் வயிற்றுப் புண்களுக்கான சிகிச்சையில் ஒரு சஞ்சீவியாக விளங்கும். இது வயிற்றுப் புண்களின் சிகிச்சையில் பெரிதும் உதவுகிறது.

2. இரத்த அழுத்தம் :

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மா இலைகளின் நீரை உட்கொள்ளலாம். இரத்த நாளங்களை வலுப்படுத்த உதவுகிறது.

3. சர்க்கரை நோய் :

சர்க்கரை நோயாளிகள் மா இலைகளை வேகவைத்து அருந்துவது மிகுந்த நிவாரணம் தரும். அவற்றில் அந்தோசயனிடின் என்ற டானின் உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

4. ஆஸ்த்துமா :

மாவிலைகளை வேகவைத்து குடிப்பது ஆஸ்துமா அல்லது சுவாச நோய்களிலும் நன்மை பயக்கும். இது இருமல் மற்றும் தொண்டை வலி பிரச்சினையில் இருந்து நிவாரணம் அளிக்கும். மா இலையை கஷாயம் செய்து குடிப்பது நன்மை பயக்கும்.

5. புற்று நோய் :

மா இலைகளில் புற்று நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. புற்றுநோய் போன்ற நோய்களுக்கு மூல காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம்.

6. கூந்தலுக்கு நன்மை பயக்கும் :

மா இலைகள் முடி பிரச்சினைகளை குணப்படுத்தும். இந்த இலைகளில் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, அவை முடி முன்கூட்டியே நரைப்பதை தடுக்க உதவும். மேலும், அவற்றில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது, இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.