Posts

இலுப்பை நெய்யின் அற்புத மருத்துவ பலன்கள் !!!

இலுப்பை நெய்யின் அற்புத மருத்துவ பலன்கள் !!! பண்டைய காலங்களிலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களின் புதையலாக இந்தியா கருதப்படுகிறது இந்த இலுப்பை. ஏராளமான நன்மைகளைக் கொண்ட இந்த இலுப்பையை வெண்ணெய் மரம் என்றும் அழைப்பர். இது நடுத்தர முதல் பெரிய அளவில் வளரக்கூடிய இலையுதிர் மரம். இது சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதி, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிராவின் ஆதிவாசி சமூகங்களின் முக்கியமான அம்சமாகும். இப்பதிவில் இலுப்பை எண்ணெய்யின் மருத்துவ நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம். சரும பிரச்சினைகள் : எந்தவித ரசாயனப் பொருட்களும் கலக்காத இலுப்பை எண்ணெய் தோல் பராமரிப்புக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. ஏனெனில், இதனை தோலில் தேய்த்து வந்தால் ஒளிரும் சருமத்தை அளிக்கிறது. மேலும், இது சருமத்தில் உள்ள அனைத்து விதமான முகப்பருக்கள் மற்றும் கறைகளை நீக்குகிறது. பூச்சிக்கடி : இலுப்பை எண்ணெய்யை சத்தீஸ்கரில் பல பழங்குடி சமூகங்கள் பயன்படுத்துகின்றன. சத்தீஸ்கரின் ஆழமான காடுகளில், பூச்சி கடித்தல் என்பது ஒரு பொதுவான நிகழ்வு. எனவே, அவர்கள் உடனடியாக நிவாரணம் வழங்கும