இலுப்பை நெய்யின் அற்புத மருத்துவ பலன்கள் !!!

இலுப்பை நெய்யின் அற்புத மருத்துவ பலன்கள் !!!

பண்டைய காலங்களிலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களின் புதையலாக இந்தியா கருதப்படுகிறது இந்த இலுப்பை.

ஏராளமான நன்மைகளைக் கொண்ட இந்த இலுப்பையை வெண்ணெய் மரம் என்றும் அழைப்பர்.

இது நடுத்தர முதல் பெரிய அளவில் வளரக்கூடிய இலையுதிர் மரம். இது சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதி, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிராவின் ஆதிவாசி சமூகங்களின் முக்கியமான அம்சமாகும்.

இப்பதிவில் இலுப்பை எண்ணெய்யின் மருத்துவ நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.

சரும பிரச்சினைகள் :

எந்தவித ரசாயனப் பொருட்களும் கலக்காத இலுப்பை எண்ணெய் தோல் பராமரிப்புக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது.

ஏனெனில், இதனை தோலில் தேய்த்து வந்தால் ஒளிரும் சருமத்தை அளிக்கிறது. மேலும், இது சருமத்தில் உள்ள அனைத்து விதமான முகப்பருக்கள் மற்றும் கறைகளை நீக்குகிறது.

பூச்சிக்கடி :

இலுப்பை எண்ணெய்யை சத்தீஸ்கரில் பல பழங்குடி சமூகங்கள் பயன்படுத்துகின்றன.

சத்தீஸ்கரின் ஆழமான காடுகளில், பூச்சி கடித்தல் என்பது ஒரு பொதுவான நிகழ்வு.

எனவே, அவர்கள் உடனடியாக நிவாரணம் வழங்கும் இலுப்பை எண்ணெய்யைப் பயன்படுத்துகிறார்கள்.

பூச்சி கடித்தால் ஏற்படும் எந்தவிதமான தடிப்புகள் அல்லது சிவத்தல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற வெளிப்புற தோலில் இலுப்பை எண்ணெய்யைப் பயன்படுத்துங்கள்.

மலச்சிக்கல் :

இலுப்பை எண்ணெய் மொத்த மலமிளக்கியாக இருக்கிறது. எந்த வடிவத்திலும் இரவில் அதை உட்கொள்ளும்போது, அது வயிற்றிலிருந்து தண்ணீரை உறிஞ்சி, மலக்குடல் வழியாகச் செரிமானமான உணவை வெளியேற்ற உதவுகிறது.

இது தவிர, இலுப்பை விதைகளும் ஒரு மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், அவை மல விறைப்பைக் குறைக்க உதவுகின்றன.

மூட்டு வலி :

இலுப்பை எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது, அவை எந்தவொரு நோய்க்கிருமிகள் உங்கள் உடலுக்குள் நுழைந்து தொற்றுநோயை ஏற்படுத்த முயற்சிக்கும் உங்கள் உடலைப் பாதுகாக்க முனைகின்றன, இதனால் வலி ஏற்படுகிறது.

எனவே, நன்றாகக் காய்த்த இலுப்பை எண்ணெய்யை நீங்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் தேய்த்து, அதற்கு மேல் உப்பு ஒத்தடம் கொடுத்தால், உடனடியாக மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். இதனுடன் சேர்த்து நரம்பு குறைபாடுகளும் தீரும்.

கொசு விரட்டி :

கொசுக்களிலிருந்து விடுபடுவதற்கு இலுப்பை எண்ணெய் எரிக்கப்பட்டு அதனை விரட்டுகிறார்கள்.

தீங்கு விளைவிக்கும் கொசு விரட்டிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, கொசுக்கள் ஓடிப்போவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும், மேலும் இது நமது நுரையீரலுக்கு எந்தப் பிரச்சினையையும் மற்றும் வேறு எந்த உடல்நலப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது.

தலைமுடி பிரச்சினைகள் :

இலுப்பை எண்ணெய் கூந்தலுக்கு சிறந்தது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

சிறந்த பலன்களைப் பெற, இலுப்பை எண்ணெய்யில் ஒரு சில துளிகள் கற்பூர எண்ணெய்யைச் சேர்த்து உங்கள் உச்சந்தலையில் தடவவும் நன்கு ஒத்தடம் கொடுக்கும் போது, ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து, உங்கள் தலைமுடியைச் சரியாகக் கழுவ வேண்டும்.

இதனை வாரம் இரு முறை செய்து வந்தால், உங்கள் தலைமுடி நன்றாக வலுப்பெற்று அடர்த்தியாக வளரும்.

விரை வீக்கம் :

விரை வீக்கம் என்பது ஒரு சின்னக் குறைபாடு. பொதுவாக, ஆண்களுக்கு வரக்கூடியது. ஆண்களின் உறுப்பு பகுதியில் நீர் கோர்த்தல் அல்லது நீர் சேர்ந்துவிட்டால் விரை வீக்கம் ஏற்படும்.

இதற்கு இலுப்பை எண்ணெய்யைக் கொதிக்க வைத்து, அதனைக் கை விரல்களிலும், விரை வீக்கம் உள்ள பகுதிகளிலும் தேய்த்துக் கொண்டு வந்தால், அதாவது ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை தேய்த்து வந்தால் காலப்போக்கில் இந்த விரை வீக்கம் பிரச்சினைகள் முற்றிலுமாக குணமடையும்.

வயிற்று வலி :

நாம் சாப்பிட்ட சாப்பாட்டினால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டால் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டால் அல்லது புளித்த ஏப்பம் அடிக்கடி வந்து கொண்டு இருந்தால், இந்த இலுப்பை எண்ணெய்யைச் சிறிது புளி சேர்த்து நன்றாக காய்த்து, வெறும் வயிற்றில் தினமும் உட்கொள்ளவும் அல்லது தொப்புளில் ஒரு சொட்டு இலுப்பை எண்ணெய்யைப் போட்டுக் கொண்டு வந்தால், வயிற்று வலி மற்றும் வயிற்று சம்பந்தப்பட்ட குறைகள் நீங்கும்.

கண் பிரச்சினைகள் :

கண் பார்வை பிரச்சினை உள்ளவர்கள் இலுப்பை எண்ணெய்யை நன்றாக காய்த்து வெதுவெதுப்பானச் சூட்டில் உச்சந்தலையில் நன்றாக தேய்த்து வந்தால் உடம்பில் உள்ள சூடு தணிந்து கண்ப் பார்வை தெளிவாக மாறிவிடும். வாரம் ஒரு முறை இலுப்பை எண்ணெய்யை தலையில் தேய்த்து வந்தால் கண் பிரச்சினைகள் முற்றிலுமாக குணமடையும்.

காச நோய் :

காச நோய் இருப்பவர்களுக்கு, இந்த நோய் தொற்று கிருமிகள் அதிகமாக இருக்கும். எனவே, இந்த இலுப்பை எண்ணெய்யைத் தினமும் காலையில் இரண்டு சொட்டு சூடுத் தண்ணீரில் போட்டுக் குடித்து வந்தால், அனைத்து தொற்று கிருமிகளும் அழிந்து போய்விடும். இந்த காச நோய் முற்றிலுமாக மட்டுப்படும்.

இதனால் அவதிப்படுகிறவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக காச நோய்யிலிருந்து விடுப்பட்டு விடுவார்கள்.

பல் பிரச்சினைகள் :

ஆரோக்கியமான ஈறுகளை பராமரிப்பதற்கும் தொண்டை வீக்கத்திலிருந்து விடுபடுவதற்கும் இலுப்பை மிகவும் நன்மை பயக்கும்.

பாரம்பரியமாக, இலுப்பை மரத்தின் பட்டைகளிலிருந்து சாறு பிழிந்து அதனைத் தண்ணீரில் கலந்து உட்கொள்ளும் போது இரத்தபோக்கு மற்றும் ஈறுகளில் உள்ள வீக்கத்திலிருந்து நிவாரணம் பெறப் பயன்படுத்தப்படுகிறது.

கடுமையான தொண்டை வீக்கம் மற்றும் தொண்டை அழற்சி போன்ற அழற்சி நிலைகளின் அறிகுறிகளைப் போக்க இதே மருந்தைப் பயன்படுத்தலாம்.

நீரிழிவு நோய் :

நீரிழிவு என்பது அதிக சர்க்கரை அளவு நிலையைப் பிரதிபலிக்கும். நோய்கள் சிகிச்சையளிக்கப் படாவிட்டால், அது உடலின் முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டைப் பாதித்துவிடும்.

இலுப்பை மரத்தின் சாறுகள் நீரழிவு நோயை எதிர்க்கும் சக்தி உடையது. இது உடம்பில் உள்ள கணையநீர் சுரப்பை அதிகரிப்பதுடன் தேவையற்ற கொழுப்பைக் கரைத்து ரத்தக் கொதிப்பை குறைக்கும்.

வலிப்பு நோய் :

இலுப்பை இலைகளில் வலிப்பு நோயை குணமாக்கும் சத்துகள் இருக்கின்றன. இலுப்பை இலைகளைச் சாறு பிழிந்து சுடு தண்ணீரில் போட்டுக் குடித்து வர வலிப்பு நோய் சரியாகிவிடும்.