சங்கு இலை
சங்கு இலை
பிரண்டை உப்பு Pirandai Salt
சீந்தில் சர்க்கரை Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி
1. மூலிகையின் பெயர் :- சங்கிலை
2. .தாவரப்பெயர் :- AZIMA TETRACANTHA.
3. தாவரக்குடும்பம் :- SALUADORACEAE.
4. பயன் தரும் பாகங்கள் :- இலை, வேர், பால், மற்றும் பழம் முதலியன.
5. வேறு பெயர்கள் :- முட்சங்கஞ்செடி, மற்றும் இசங்கு ஆங்கிலத்தில் “Needle bush.”
6. வளரியல்பு :- சங்கிலை மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும்.
தமிழகமெங்கும் புதர் காடுகளிலும், மலைகளிலும், ஆற்றங்கரை, கடற்கரைகளிலும்
வளர்கிறது. இதன் பூர்வீகம் தென் ஆப்பிரிக்கா. பின் காங்கோ, சோமாலியாவில்
பரவிற்று, பின் மடகாஸ்கர், இந்தியாவில் பரவிற்று. இது 8 மீட்டர் வரை
வளர்ந்து படரக்கூடியது. இதன் இலைகள் பளபளப்பானவை. எதிர் அடுக்கில்
அமைந்திருக்கும். கூர்மையான நுனிகளையுடையது. இலைகோணங்களில் நீண்ட நான்கு
முட்களையுடையது. முட்கள் 5 செ.மீ. நீளமுடையது. இதன் பழங்கள் மஞ்சளாக
இருந்து பின் வெள்ளையாக மாரும். உண்ணக்கூடியது. செப்டம்பர் மார்ச்சு
மாதங்களில் பூக்கும். விதையிலிருந்து எண்ணெய் எடுப்பர் அதற்கு ‘Fatty acid’
என்று ம். விதையில் ‘Ricinoleic Acid 9.8 %’ மற்றும் ‘Cyclopropenooid
fatty acid 9.6 %’ உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
7. மருத்துவப்பயன்கள் :- சங்கிலை சிறுநீர்ப் பெருக்கியாகவும், இலை உடல் பலம் பெருக்கியாகவும், வேர் கோழையகற்றும், இருமல் தணிக்கும், ஆஸ்த்துமா, சர்க்கரை வியாதி போக்கும் மருந்தாகவும் செயற்படும்.
சங்கிலை, தூதுவேளை இரண்டும் ஒரு பிடி அரைத்து நெல்லிக்காயளவு பசும் பாலில் கொள்ள கபரோகம் தீரும்.
சங்கிலை, வேப்பிலை, சமன் அரைத்து நெல்லிக்காயளவு காய்ச்சி ஆறிய நீருடன் பிரசவ நாளிலிருந்து கொடுத்து வரக் கற்பாயச அழுக்குகள் வெளியேறிச் சன்னி, இழுப்பு வராமல் தடுக்கும்.
சங்கிலை, வேர்பட்டை சமனளவு அரைத்து சுண்டைக்காயளவு வெந்தீரில் காலை, மாலை கொள்ள 20 நாள்களில் ஆரம்பப் பாரிச வாதம் வாயு, குடைச்சல் பக்கவாதம் தீரும்.
சங்கிலை, வேம்பு, குப்பைமேனி, நொச்சி, நாயுருவி ஆகியவற்றில் வேது பிடிக்க வாத வீக்கம், வலி, நீர் ஏற்றம் கீல் வாயு தீரும்.
சங்கம் வேர்பட்டைச்சாறு 20 மி.லி. 100 மி.லி. வெள்ளாட்டுப் பாலில் குடித்து வர சிறுநீர்த் தடை தீங்கும்.
வர அரிசி மாவுடன் ஒரு கட்டு சங்கிலை, நீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய பின் ஒரு டம்ளர் காலை மாலை குடிக்க இருமல் குணமாகும்.
மேற்கண்ட சங்கிலை வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...