ஆகாயத்தாமரை

ஆகாயத்தாமரை
பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி


1. மூலிகையின் பெயர் -: அந்தரத்தாமரை.
2. தாவரப் பெயர் -: PISTIA STRATEUTES.
3. தாவரக்குடும்பம் -: ARACEAE.
4. வேறு பெயர்கள் -: ஆகாயத்தாமரை
5. பயன் தரும் பாகங்கள் -: இலைகள் மட்டும்.
6.வளரியல்பு -: அந்தரத்தாரமரை நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறு செடிகள். சுத்தமான தண்ணீரில் வளரக்கூடியது. இலைகள் நீளம் சுமார் 13 செ.மீ. இருக்கும். இலைகள் எதிர் அடுக்கில் ஜோடியாக இருக்கும். இதற்கு காம்புகள் (ஸ்டெம்) கிடையாது. கூடை வடிவ இலை இளம்பச்சை நிறமாக இருக்கும். அதில் மொசுப்பான முடிகள் இருக்கும். இது முதன் முதலில் ஆப்பிரிக்காவில் ‘Lake Victoria’ என்ற ஏரியில் தோன்றியதாகச் சொல்வர். இது அமெரிக்காவில் 1765 ம் ஆண்டில் ‘புளோரிடா’ என்ற இடத்தில் ஏரிகளில் கண்டு பிடிக்கப்பட்டதாகச் சொல்வர். இதை ஆங்கிலத்தில் ‘Water Cabbage’ மற்றும் ‘Water Lettuce’ என்றும் கூறுவார்கள். இதன் வேர்கள் குஞ்சம் போல் இருக்கும். தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்வது. பூக்கள் செடி நடுவில் மிகச் சிறிதாகத் தென்படும். இது இன விருத்திக்கு தாய் செடியுடன் சிறு குட்டிச் செடிகள் நூல் இழை போன்று தொடர்ந்து பெருகிக் கொண்டே போகும்.
+
7.மருத்துவப் பயன்கள் -: இது வெப்பு தணித்து தாகங் குறைக்கும் மருந்தாகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றை துவளச் செய்யும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
இலையை அரைத்துக் கரப்பான், தொழு நோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டி வர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டி வர வெளி மூலம், ஆசனக் குத்தல் ஆகியவை தீரும்.
25 மி.லி. இலைச்சாற்றை சிறிது தேனுடன் காலை, மாலை 5 நாட்கள் கொடுக்க மார்பிலும் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மேலும் நீர்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.
அந்தரத் தாமரையிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசன வாயில் பிடித்து வர மூல மூளை அகலும்.
இதன் இலைச்சாறு அரை லிட்டர், நல்லெண்ணைய் 1 லிட்டர் ஆகியவற்றைக் கலந்து சிறு தீயில் காய்ச்சி வண்டல் மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத்தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள் சாம்பிராணி வகைக்கு 10 கிராம் போடித்துப் போட்டு இறக்கி வடித்து (ஆகாயத்தாமரைத் தைலம்) வாரம் 1 முறை தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும்.

நன்றி: மூலிகைவளம்

மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...