லாவண்டர்

லாவண்டர்




பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி


1.மூலிகையின் பெயர் :- லாவண்டர்
2. தாவரப்பெயர் :- LAVENDULA OFFICINALIS.
3. தாவரக்குடும்பம் :- LABIATAE.
4. பயன்தரும் பாகங்கள் :- இலை மற்றும் பூக்கள்.
5. வளரியல்பு :- அனைத்து வகை வளமான மண்களிலும் வளரும். ஆனால் 3000 அடி உயரத்திற்கு மேல் நன்கு வளமாக 3 அடி உயரம் வரை வளரும். எதிர் அடுக்கில் இலைகள் அமைந்திருக்கும். நேராக வளரும். பூக்கள் நீல நிறமாக இருக்கும். இலைகளும், பூக்களும் வாசனையாக இருக்கும். பிரான்ஸ், மெடிட்டரேனியன் மேற்கிலிருந்து இங்கிலாந்திற்குப் பரவியது. அதை வாசனைக்காகவும், குளிக்கவும் பயன் படுத்தினர். பழைய கிரேக்கர்களால் சிரியாவில் இதை NARD என்று அழைத்தனர். இதை கிரீக் NARDUS என்றும் ரோமன் ASARUM என்றும் அழைத்தனர். அமெரிக்கா, ஐரோப்பா, பிரான்ஸ், பல்கேரியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யாவில் விளைவிக்கப்பட்டது. இதன் வயது 3,4 வருடம். விதையிலிருந்து நாற்றங்கால் அமைத்து சிறு செடியாக வேர் விட்ட பின் எடுத்து நடலாம். ஆனால் 10 செ.மீ. நீளமான தண்டுகளை நாற்றங்காலில் பசுமைக்குடிலில் நட்டு வேர் விட்டவுடன் எடுத்து 4 அடிக்கு 2 அடி என்ற இடைவெளி விட்டு நட்டுத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இது தான் சிறந்த முறை. தேவையான பொழுது களை எடுக்க வேண்டும். தேவைக்கேற்ற நீர் பாய்ச்ச வேண்டும். அறுவடை மற்றும் விளைச்சல் வருடத்திற்கு 200 கிலோ இலைகள் மற்றும் பூக்கள் பற்றும் 50 கிலோ எண்ணையும் கிடைக்கும். பூச்சி நோய் தாக்குதலுக்குத் தேவைக்கேற்ப மருந்தடித்துக் கட்டுப்படுத்த வேண்டும். பூக்கள் மற்றும் இலைகளை பறித்தவுடனே அனுப்ப வேண்டும். செலவு வருடம் ரூ.25,000, வரவு ரூ.65,000, வருமானம் ரூ.40,000 கிடைக்கும்.
6. மருத்துவப்பயன்கள் :- லாவண்டர் நரம்பு சம்பந்தமான மற்றும் செரிமான சம்பந்தமான நோய்கள் தீரும். அழகு சாதன பொருள் மற்றும் வாசனைத் திரவியம் தயாரிக்கப் பயன்படுகிறது. இரண்டாவது உலகப்போரின் போது காயம் பட்ட இராணுவ வீரர்களுக்கு புண் ஆற்ற லாவண்டர் எண்ணெயைப் பயன் படுத்தினார்கள். இங்கிலாந்தில் குளிக்கும் நீரில் இதன் எண்ணெயைக் கலந்து வாசனைக்காகப் பயன் படுத்தினர். டாய்லெட்டுகளைக் கழுவ, வீடு கழுவ, புண்களைக்கழுவ, தீக்காயம் கழுவப் பயன் படுத்தினர்.
லாவண்டர் எண்ணெய் பயன் படுத்தினால் டென்சன் குறையும், தலைவலி குணமாகும். ஆஸ்த்துமா சரியாகும், குளிர், இருமல் குறையும், தொண்டைவலி குணமாகும். ஜீரணமாகப் பயன்படும், விழையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் போது அல்லது போட்டியின் போது தொடையில் ஏற்படும் பிடிப்பை குணப்படுத்தும். தோல் வியாதிகள் அனைத்தும் குணமாகும். பூச்சிக் கடியால் ஏற்படும் அறிப்பு இதைத் தடவ குணமாகும். பல்வலி, சுழுக்கு, வீக்கம் ஆகியவை இதனால் குணமடையும். ரோமானியர்கள் இந்த எண்ணெயை நல்ல விலை கொடுத்து வாங்கினர். வெளிநாட்டில் லாவண்டர் பூவினை டீ தயாரிப்பில் பயன் படுத்துகிறார்கள்.

நன்றி: மூலிகைவளம்

மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...