கொடாம்புளி

கொடாம்புளி





பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி


1. மூலிகையின் பெயர் :- கோடம்புளி.
2. தாவரப்பெயர் :- GARCINIA CUMBOGIA.
3. தாவரக்குடும்பம் :- CLUSIACEAE.
4. வேறு பெயர்கள் :- கொறுக்காய்புளி, Brindal Berry, &
Tom Rong முதலியன.
5. பயன்தரும் பாகம் :- பழம் மட்டும்.
6. வளரியல்பு :- கோடம்புளி மரவகையைச் சேர்ந்தது. இதற்கு கரிசல் மற்றும் செம்மண்ணில் நன்கு வளரும். மூன்று ஆண்டுகளிக்கு மேல் பலன் தர ஆரம்பிக்கும். இது இந்தியா மற்றும் இந்தோனேசியாவைத் தாயகமாகக் கொண்டது. இது வடகிழக்கு ஆசியா மத்திய மேற்கு ஆப்பிரிக்காவில் அதிகமாகப்பயிரிடப்படுகிரது.கேரளாவில் அதிகம் வளர்க்கப்படுகிறது. பல வருடங்கள் பலன் தரும். இதனுடைய காய் உருண்டையாக ஆப்பிள் பழம் போல் இருக்கும். இதன் பழம் மஞ்சள் நிறமாக இருக்கும். உருவத்தில் பூசணிக்காய் போல் இருக்கும் முற்றியபின் 5 நாட்கள் நிழலில் உலர வைக்க வேண்டும். விதைமூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.
7. மருத்துவப்பயன்கள் :- கோடம்புளி பழத்தைக் காய்ந்தபின் பொடி செய்து சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள் மேலும் மருத்துவத்திற்கும் பயன்படுத்திகிறார்கள். இதில் ‘சி’ வைட்டமின் உள்ளது. இதில் Hepatotoxic hydroxycitric acid என்ற அமிலசத்துக்கள் உள்ளது. இது உடலின் எடையைக்
குறைக்க மிகவும் பயன்படுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இருதயம் பலம் பெற்று நோய் வராமல் காக்கிறது. இது தொண்டை, மூத்திரப்பாதை மற்றும் கர்ப்பப் பைகளில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துகிறது. மருத்துவர் கொடுக்கும் அளவான பொடிகளை அருந்த வேண்டும். இது தோல் தொடர்பான வியாதிகள், வெளிப்புண்கள்,
உதடு வெடிப்பு, கைகால் வெடிப்பு, குடல்புண் நோய்கள், அஜீரணத்திற்கும் நல்ல மருந்து.இந்த மருந்துகள் வெளிநாட்டில் அதிகம் பயன் படுத்துகிறார்கள்.

நன்றி: மூலிகைவளம்

மேற்கண்ட கொடாம்புளி வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...