சென்னா

சென்னா
பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி


1. மூலிகையின் பெயர் :- சென்னா
2. தாவரப்பெயர் :- CASSIA ANGUSTIFOLIA.
3. தவரக்குடும்பம் :- LEGUMINOSAE.
4. பயன்தரும் பாகங்கள் :- இலை மற்றும் காய்கள்.
5. வேறுபெயர்கள் :- அவுரி, நிலாவாரை மற்றும் நிலாவக்காய்.
6. வகைகள் :- கோசியா அங்குஸ்டிப்ரியா, C.acutifolia, C.obovata. C.itlica. ALFT – 2 சோனா ஆகியவை.
7. வளரியல்பு :- சென்னா தென்அரேபியாவைப் பிறப்படமாகக் கொண்டது. இந்தியா, தென் அரேபியா, யேமன் நாடுகளில் வளர்கிறது. இது செம்மண், களிமண், வளம் குறைந்த மணற்பாங்கான நிலம் மற்றும் களர், உவர், தரிசு நிலங்களில் வளர்வது. காரத்தன்மை 7-8.5 வரை இருக்கலாம். 3வது மாதத்திலிருந்து இலை பறிக்கலாம் இவ்வாறு மூன்று மூறை பறிக்கலாம். இது 2 அடி உயரம் வரை வளரக்கூடியது. இது 18 வது நூற்றாண்டில் தமிழ் நாட்டிற்கு வந்தது. இது கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லியிலும் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம், சேலம், திருச்சிராப்பள்ளி, விருதுநகர் மாவட்டங்களிலும் கடப்பா, புனேயிலும் பயிரிடப்படுகிறது. ஆசியாவில் கிட்டத்தட்ட 500 சிற்றினங்களில் 20 வகையான சிற்றினங்கள் இந்தியாவைச் சார்ந்தவை. செடியின் இலைகள் காய்கள் மற்றும் செனோசைடு விழுது ஆகியவை ஜெர்மனி, ஹாங்கேரி, ஜப்பான், நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் ருசியா நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதையினை விதைக்கும் மூன்பு 12 மணி நேரமேனும் நீரில் ஊறவைத்த பின் விதைக்க வேண்டும். விதைத்த ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கும்.
8. மருத்துவப்பயன்கள் -: சென்னா இலைகளை முழுவதும் முதிர்ந்து கருநீல நிறமுள்ள இலைகளைப்பறிக்க வேண்டும். காய்களி இளமஞ்சள் நிறமாக மாறும் போது காய்களை அறுவடை செய்யலாம். பூப்பதற்கு முன்பு மொட்டாகத் தேவைப்படும் மருத்துவத்திற்கு மொட்டுகளைப்பறித்துக் கொடுக்கலாம். மருத்துவத்தில் சென்னா இலை, இலைத்தூள்,அதன் கிளை சிறு நறுக்குகள், விதை மற்றும் ஒவ்வொன்றின் பொடிகள் மருந்தாகவும், டீ தயாரிக்கவும் பெரிதும் பயன் படுகின்றன. சருமத்தில் ஏற்படும் சிரங்குகள், மலச்சிக்கலுக்கு நல்ல மருந்து. மலம் இளக்கியாகப் பயன்படுவதுடன் நச்சுக் கொல்லியாகவும் பயன்படுகிறது. கர்ப்பமாக உள்ளவர்களும், பெண்கள் தூரமான போதும் இந்த மருந்துகளைச் சாப்பிடக்கூடாது. 12 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது. இரத்தக் கொதிப்பக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. ஒரு நாளைக்கு இரு வேளை மட்டும் 10 நாட்களுக்கு மேல் சாப்பிடக் கூடாது. உடலின் எடையைக் குறைக்க இந்த மருந்து பயன்படுகிறது. வெளிநாடான சைனா,ஜப்பான், அமரிக்கா போன்ற நாடுகளில் இதன் ‘டீ’ விரும்பிக் குடிக்கிறார்கள். வெளிநாட்டிற்குத்தான் இந்தச்செடியின் பாகங்கள் அதிகமாக ஏற்றுமதியாகிறது.

நன்றி: மூலிகைவளம்

மேற்கண்ட சென்னா வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...