மார்பகம் வளர்ச்சி அடைய எழுத்தாணிப் பூண்டு

மார்பகம் வளர்ச்சி அடைய எழுத்தாணிப் பூண்டு..





பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி
 

1. மூலிகையின் பெயர் -: எழுத்தாணிப் பூண்டு.
2. தாவரப் பெயர் -: PRENANTHES SARMENTOSUS.
3. தாவரக்குடும்பம் -: COMPOSITAE.
4. வேறு பெயர் -: முத்தெருக்கன் செவி என்பர்.
5. பயன்தரும் பாகங்கள் -: செடியின் இலை மற்றும் வேர்.
6. வளரியல்பு -: எழுத்தாணிப் பூண்டு ஒரு குறுஞ்செடி. பற்களுள்ள, முட்டை வடிவ, காம்புள்ள இலைகளையும், உருண்ட தண்டுகளில் (எழுத்தாணி போன்ற) நீல நிறப் பூக்களையும் உடைய நேராக வளரும் செடி.. எல்லா வளமான இடங்களிலும் வளரும். நஞ்சை நிலங்களில் வரப்புகளில் தானே வளர்வது. இதற்கு முத்தெருக்கன் செவி என்ற பெயரும் உண்டு. மல மிளக்கும் குணமுடையது. விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. தமிழ் நாட்டில் எங்கும் காணப்படும்.
7. மருத்துவப் பயன்கள் -: எழுத்தாணிப்vபூண்டின் இலைகள்
5-10 கிராம் எடுத்து நன்கு அரைத்துச் சற்று தாராளமாக
மலம் போகும் அளவாகக் காலை, மாலை கொடுத்துவரக் குடல் வெப்பு நீங்கிப் புண் ஆறும். சீதபேதி குணமாகும்.
இதன் இலைச் சாற்றுடன் சமன் நல்லெண்ணைய் கலந்து பதமுறக் காய்ச்சி உடம்பில் தடவி வரச் சொறி, சிரங்கு முதலியவை குணமாகும்.
இதன் 5 கிராம் வேரை பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை, மாலை உண்டு வர மார்பகம் வளர்ச்சியுறும். இத்துடன் கருடக்கல் பற்பமும் 1 மண்டலம் சாப்பிட்டு வந்தால் எலும்பு வெட்டை, கணை, ஈளை ஆகியவை சரியாகி நல்ல மார்பக வளர்ச்சி உண்டாகும்.  கரப்பான், பருவு, பிளவை ஆகியவை தீரும்.
“பழமலங்கள் சாறும் பருங்குடற்சீ தம்போ
மெழுமலச்சீ கக்கடுப்பு மெகு-மொழியாக்
கரப்பான் சொறிசிரங்குங் காணா தகலு
முரப்பா மெழுத்தாணிக் கோது.”
பொருள் -: எழுத்தாணிப் பூண்டுக்கு பழ மலக்கட்டு, குடலின் சீதளம், கிரகணி, கரப்பான், புடை, சிரந்தி போம் என்க.

நன்றி: மூலிகைவளம்

மேற்கண்ட எழுத்தாணிப் பூண்டு வேர், கருடக்கல் பற்பம் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...