Posts

சிறுநீரகத்தில் கற்கள் சேராமல் தடுப்பது எப்படி?

சிறுநீரகத்தில் கற்கள் சேராமல் தடுப்பது எப்படி?   மனித உடலில் வயிற்றின் மேல்பகுதியில் முதுகுப்புறமாக அவரை விதை வடிவில் 2 சிறுநீரகங்கள் உள்ளன. இந்த சிறுநீரகங்களின் முக்கிய பணியே இரத்தத்தை சுத்திகரிப்பது தான். பொதுவாக 20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு இரத்தத்தில் ஆக்சலேட் உப்பு அதிகமாக காணப்படும். இந்த வயதினருக்கு டெஸ்டோஸ்டிரான் சுரப்பு அதிகமாக இருக்கும். எனவே இந்த வயதுடைய ஆண்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. சிறுநீரக கற்களால் ஏற்படும் வலி தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். ஆனால், சிறுநீரக கற்களை நீக்க அல்லது வெளியேற்ற, சரிசெய்ய நவீன சிகிச்சைகள் உள்ளன. சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரின் நிறம் மஞ்சளாக இருந்தால் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு போதவில்லை என்று அர்த்தம். எனவே, தண்ணீர் நிறத்தில் சிறுநீர் போகும் அளவுக்கு தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதோடு முக்கியமாக சிறுநீரை வெகுநேரம் அடக்கி வைக்கக்கூடாது, இப்படி செய்வதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். சிறுநீரகத்தில் கற்கள் இருந்த

நச்சுக்களை முறிக்கும் மஞ்சள் + மிளகு நீர்

நச்சுக்களை முறிக்கும் மஞ்சள் + மிளகு நீர் நம் உடலில் பல்வேறு வழிகளில் நச்சுக்கள் வந்து சேருகின்றன. அந்த நச்சுக்களை Toxins என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். உணவுகளில் கலக்கப்பட்டுள்ள ரசாயனங்கள், சுவையூட்டிகள், கலப்படங்கள், நிறமூட்டிகள், கிருமிநாசினிகள் போன்ற இன்னோரன்ன விஷங்கள் தினம் தினம் நம் உடலில் வந்து சேர்கின்றன. அதனை சுத்திகரிக்க கல்லீரலானது மிகவும் கஷ்டப்படுகின்றது. இப்படி உடலில் சேரும் நச்சுக்களை முறியடிக்கும் ஒரு சிறந்த பொக்கிஷமாக திகழ்கிறது மஞ்சள் மற்றும் மிளகு.  தினமும் காலையில் வெறும் வயிற்றிலும் மற்றும் இரவு உறங்க முன்னரும் ஒரு கிளாஸ் சூடான நீரில் அரை தேக்கரண்டி மஞ்சள், கால் தேக்கரண்டி மிளகு சேர்த்து குடித்து வர வேண்டும். மஞ்சளில் உள்ள curcumin மற்றும் மிளகில் உள்ள piperine இரண்டும் ஒரு சேர இணையும் பொழுது நச்சுக்கள் வெளியேறுவது மட்டுமன்றி பல நல்ல மாற்றங்கள் உண்டாகும். உடலின் ஜீரண உறுப்புக்களின் இயக்கம் சீராக அமைகிறது. இதனால் குடல் புண், உணவு எதுக்களித்தல், நெஞ்செரிவு போன்ற பல நோய்கள் குணமாகும். மஞ்சள், மிளகில் உள்ள சில கனிமங்கள் உடலில் உள்ளும், புறமும் ஏற்படும் வீக்கங்களை