Posts

பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி?, பக்கவாதத்தை தடுக்கும், பக்கவாதத்தை தடுக்க

Image
பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி?   இரத்த அழுத்தம் அதிகமானால்… இதயம், சிறுநீரகம் பாதிக்கப்படக் கூடும்.  பக்கவாதமும் ஏற்படும். பக்கவாதம் என்பது மூளைக்குச் செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது இரத்த கசிவு ஏற்பட்டாலோ மூளையில் உள்ள செல்களுக்கு ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்படுகிறது. மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டால் மூளையில் உள்ள செல்கள் பாதிப்பு அடைகிறது. இந்த நிலையில் தான் மயக்கம், தலைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படும். எந்த பக்கம் பாதிப்பு அடைகிறதோ அந்த பக்கம் கண் அசைவும் இருக்காது. முக வாதமும் தென்படும். இரத்த கசிவு ஏற்படுவதால் மூளையின் முக்கியமான பாகங்களும் பாதிப்பு அடைகிறது. உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது.    மூளையின் இடது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் வலது பக்கம் உள்ள வலது கை, கால்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாது. அதே போல் மூளையின் வலது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் இடது பக்கம் உள்ள இடது கை, கால்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாமல் போய் விடுகிறது. மனித உடலில் 72,000 நரம்புகள் உள்ளன. அனைத்து நரம்புகளிலும் இரத்த ஓட்டம் சீரான முறையில் இருந்தால் தான் உடல் உறுப்பு

பக்கவாதம் யோகா, பக்கவாதம் வராமல் இருக்க யோகா

Image
  பக்கவாதத்தை கட்டுப்படுத்தும் யோகா!   யோகா என்பது ஒழுக்கம் என்ற பொருளைக் குறிக்கும். நாம் நமது மனதைக் கட்டுப்படுத்தி நம் உள்ளே இருக்கின்ற 'இறை சக்தி'யை அல்லது 'இறை தன்மை'யை அறிய உதவும் பயிற்சி தான் யோகா பயிற்சியாகும். முறையாகத் தொடர்ந்து செய்யப்படும் யோகா மூளைக்கு சீரான இரத்த ஒட்டத்தையும் மூளைக்கு புத்துணர்ச்சியையும் தரக் கூடியது. இதனால் மூளையில் செயல் திறன் அதிகரிக்கின்றது. உடலின் செயல்பாடுகள் சீராகுகின்றன.   தூக்கமின்மை, ஒய்வின்மை கவனக் குறைவு குழப்பமான மனநிலை தேவையற்ற பயம் ஆகியவை மூளையின் செயல்பாட்டிற்கு இடையூறு தரக் கூடியவை. யோகா இவற்றை போக்கி இத்தகைய பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான மனநிலையையும் நல்ல மூளைச் செயல்பாட்டையும் ஞாபக சக்தியையும் தருவதாக யோகா பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.   முதுமை காரணமாக பக்கவாதம் தாக்கியவர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டால் எளிதில் அவர்களின் உடல்நிலை சரியாவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பக்கவாத நோய் தாக்கியவர்கள் சிலருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டதில் 35 சதவிகிதம் வரை அவர்கள் நோயிலிருந்து மீண்டிருப்பதாக ஆய்