Posts

Showing posts with the label பக்கவாதம்

பக்கவாதம் சித்த மருத்துவம், பக்கவாதம் மூலிகை, paralysis cure treatment, paralysis cure in ayurveda, stroke cure medicine

Image
  பக்கவாத நோயும், சித்த மருத்துவ முறைகளும்   இதைப் பக்ஷவாதம், பாரிசவாதம், பாரிசவாயு என்றும் ஜீவரட்சாமிர்தம் என்னும் சித்த மருத்துவ நூல் குறிப்பிடுகிறது. இந்நோய் தனி நோயாகவோ அல்லது மற்ற நோயின் தொடர் நோயாகவோ வரலாம்.    பக்கவாத நோயில் மூன்று வகைகள் உள்ளன. 1.        உடலின் வலது அல்லது இடது பக்கத்தையோ அல்லது பாகத்தையோ செயலிழக்கச் செய்துவிடுகிறது. அதாவது ஒரு கால் ஒரு கை அசைக்கமுடியாமல் போய்விடுகிறது இது ஒரு வகை. 2.        ஒரு காலோ அல்லது ஒரு கையோ மட்டும் அசைக்கமுடியாமல் செயலிழந்து விடுவது மற்றொரு வகையாகும். 3.        இரண்டு கால்களுமே அசைக்க முடியாமல் போவது மூன்றாவது வகையாகும்.   பக்கவாதத்திற்கு அடிப்படையான மூல காரணம் பக்கவாதநோய் வரக்காரணம் காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவையுள்ள உணவு வகைகளை அதிகமாக உண்ணுதல், அளவுக்கதிகமாக குளிரால் தாக்கப்படுதல், மிதமிஞ்சியச் சிற்றின்பம், தொடர்ந்து போதைப் பொருள்களை உபயோகிப்பது, குறிப்பாகப் போதை மயக்கத்தில் அடிக்கடி உடலுறவு கொள்ளுதல், ஆகிய காரணங்களால் பக்கவாதம் வரலாம். மேலும் முதுகுத் தண்டில் அடிபடுவதால் நரம்புகள் கெட்டிப்பட்டுக் கட்டிகள

பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி?, பக்கவாதத்தை தடுக்கும், பக்கவாதத்தை தடுக்க

Image
பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி?   இரத்த அழுத்தம் அதிகமானால்… இதயம், சிறுநீரகம் பாதிக்கப்படக் கூடும்.  பக்கவாதமும் ஏற்படும். பக்கவாதம் என்பது மூளைக்குச் செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது இரத்த கசிவு ஏற்பட்டாலோ மூளையில் உள்ள செல்களுக்கு ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்படுகிறது. மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டால் மூளையில் உள்ள செல்கள் பாதிப்பு அடைகிறது. இந்த நிலையில் தான் மயக்கம், தலைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படும். எந்த பக்கம் பாதிப்பு அடைகிறதோ அந்த பக்கம் கண் அசைவும் இருக்காது. முக வாதமும் தென்படும். இரத்த கசிவு ஏற்படுவதால் மூளையின் முக்கியமான பாகங்களும் பாதிப்பு அடைகிறது. உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது.    மூளையின் இடது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் வலது பக்கம் உள்ள வலது கை, கால்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாது. அதே போல் மூளையின் வலது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் இடது பக்கம் உள்ள இடது கை, கால்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாமல் போய் விடுகிறது. மனித உடலில் 72,000 நரம்புகள் உள்ளன. அனைத்து நரம்புகளிலும் இரத்த ஓட்டம் சீரான முறையில் இருந்தால் தான் உடல் உறுப்பு