Posts

Showing posts with the label சைனஸ் குணமாக

சைனஸ் அறிகுறிகள்

  சைனஸ் பிரச்சினை சில எச்சரிக்கை அறிகுறிகள்!   இன்று ஏராளமானோருக்கு சைனஸ் பிரச்சினை உள்ளது. ஆனால் பலருக்கும் நமக்கு இருப்பது சைனஸ் என்று சரியாக தெரிவதில்லை. பொதுவாக சைனஸ் பிரச்சனையை, சாதாரண சளி, இருமலுடன் சரியாக கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். சிலர் சாதாரண சளி, இருமலுக்கு உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் சைனஸ் பிரச்சனை பொதுவாக சந்திக்கும் சளி பிரச்சனையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ஒவ்வொரு வருடமும் சைனஸ் பிரச்சினையால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.   சைனஸ் பிரச்சினையானது சைனஸ் சுரப்பி அல்லது சுவாச பாதையில் அழற்சி மற்றும் வீக்கமடைந்து, அன்றாடம் சுவாசிப்பதில் சிக்கலை உண்டாக்கும். ஒருவர் தங்களுக்கு இருக்கும் சைனஸ் பிரச்சனையை சரிசெய்யாமல் விட்டுவிட்டால், அதனால் உடல் ஆரோக்கியம் பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாகும். சில சமயங்களில் சைனஸ் பிரச்சினையால் காது கேட்கும் திறன் கூட பாதிக்கப்படலாம் மற்றும் சில சமயங்களில் பார்வை பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.     ஒருவருக்கு சாதாரண சளி என்றால் ஒரு வாரத்தில் குணமாகிவிடும். ஆனால் ஒரு வாரம் ஆகியும் சளி சரியாகா