சிறுநீரக பிரச்சனை அறிகுறிகள், சிறுநீரக பிரச்சினைகள் அறிகுறிகள்
சிறுநீரக பிரச்சனையை கண்டறியும் வழிமுறைகள், அதை குணப்படுத்தும் வழிமுறைகள் என்ன? சிறுநீரக நோய் நமக்கு வலி மிகுந்ததாகவும், கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக் கூடிய ஒரு நோயாக இருக்கும். இந்நோய் இருந்தால் சிறுநீரகங்களில் நீர்க்கட்டிகள் ஏற்படும். திரவம் நிறைந்த நிறைய கட்டிகள் சிறுநீரகத்தில் உருவாகக் கூடும். இந்த நிலையில் இந்நோய் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு உடல் வலி, வயிறு வீக்கம், மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல விதமான உடல் பிரச்சினைகள் தோன்றி அவர்களை மிகவும் சிரமத்திற்கு உண்டாக்கும். இந்த நோயை நீங்கள் கண்டு கொள்ளாமலும், சிகிச்சையளிக்காமலும் இருந்தால் இது கல்லீரலில் அதிகப்படியான நீர்க்கட்டிகளை உருவாக்கி பக்கவாதம் போன்ற நோய்கள் வர வழிவகுக்கிறது. இதனால் இந்த நோய் ஏற்பட்டவருக்கு சிறுநீரக செயலிழப்பு உண்டாகும். அதனால் இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இந்த நோயின் அறிகுறிகள்: • சிறுநீர் கழிப்பதில் சிரமம் தான் இந்த நோயின் முதல் அறிகுறியாகும். பின்பு இடுப்பு பக்கத்தில் அலை போல வலி உண்டாக...