பசியால் நோய்களை குணப்படுத்தலாம்

 பசியால் நோய்களை குணப்படுத்தலாம்

பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                              Bael Fruit
 


நான் சமீபத்தில் Whatsapp மூலம் நல்ல ஒரு Message-ஐ படித்தேன். நல்ல அருமையான விளக்கத்துடன் சிவகங்கையை சேர்ந்த ஒரு மருத்துவர் எழுதியிருந்தார். அதை இக்கட்டுரையுடன் இணைத்திருக்கிறேன். அந்தக் கட்டுரைதான் என்னை இந்த பதிவு எழுத தூண்டியது.

நான் பெரும்பாலும் என்னிடம் வரும் நோயாளிகளிடம் முதலில் கேட்கக் கூடிய கேள்வி அவர்களுடைய உணவுமுறை எப்படிப்பட்டது என்பதை பற்றிதான், அதிலும் முக்கியமாக வயிற்று பிரச்சினை என்று வருபவர்களிடம் முதலில் கேட்கும் கேள்வி கடந்த இரண்டு நாட்களுக்குள் என்ன சாப்பிட்டார்கள் என்பதே, இந்த ஒரு கேள்வியிலேயே அவர்களுடைய வயிற்று பிரச்சினைக்கான காரணம் தெரிந்து விடும், இதற்கு பிறகு சின்ன கவுன்சிலிங்க், ஒன்றிரண்டு மருந்துகளில் அவருக்கான சிகிச்சை முடிந்து விடும்…

ஆனால் கிளம்பும் போது நோயாளிகள் கேட்கும் கேள்வி நம்மை தூக்கி வாரிப் போட்டு விடும், சார் அடுத்த வேளை உணவாக என்ன சாப்பிடலாம், அடுத்த முறை இதே பிரச்சினை திரும்ப வந்தால் அப்போது என்ன சாப்பிடலாம் என்பது தான்…

சாதாரணமாக வயிற்றுக்கு வரும் எந்த ஒரு பிரச்சினைகளையும் சரி செய்வதற்கான எளிய வழி அடுத்த ஓரிரு வேளைகள் வயிற்றை பட்டினியாக காயப் போடுவதுதான். இதிலேயே திடீரென ஏற்படும் 99% வயிற்று பிரச்சினைகள் சரியாகி விடும். ஆனால் இதற்கு நடைமுறையில் யாரும் தயாராக இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அஜீரண பிரச்சினைக்கோ, வயிற்றுப்போக்கு பிரச்சினைக்கோ, அசிடிட்டி பிரச்சினைக்கோ மருத்துவரை சந்தித்து மருந்து பெற்றுக் கொண்டவுடன் அடுத்து கேட்கும் முதல் கேள்வியே இதுதான்.. சார் அடுத்த வேளை உணவாக என்ன சாப்பிடலாம்…

நான் இதற்கு சொல்லும் ஒரே பதில்… ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்தால் கூட கண்டிப்பாக இறந்து விட மாட்டோம், அதனால் தைரியமாக இரண்டு மூன்று வேளைகள் பட்டினியாய் இருக்கலாம், தைரியமாக செல்லுங்கள் என்பதுதான்…

உணவுதான் உடலை வளர்க்கிறது, ஆரோக்கியத்தை கூட்டுகிறது, நோய்களையும் வரவழைக்கிறது. உணவை உங்களால் கட்டுப்பாடாக சாப்பிட தெரிந்தால், நீங்கள் உங்கள் வாழ்நாளில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாது…

உண்மையை உரக்க சொல்ல வேண்டும் என்றால் இப்போது யாருமே பட்டினியாய் இருப்பதற்கு தயார் இல்லை, விரதம் என்ற வார்த்தையையே இப்போது யாரும் விரும்புவதில்லை. பசித்து உண்பதற்கும், நோய் வந்தால், உண்ணாமல் இருப்பதற்கும் யாரும் தயார் இல்லை…

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு தோல் நோய்க்காக சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த என்னுடைய நண்பரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம், அப்போது அவர் வெளிநாட்டில் வாங்கிய ஒரு புத்தகத்தை (HASHIMOTO’S THYRODITIS--  Lifestyle Interventions for finding and Treating the Root Cause- Written By Izabella Wentz) குறிப்பிட்டு சொல்லி அதில் எல்லா நோய்களுக்கும் தீர்வாக சொல்லப்பட்ட விஷயத்தை பற்றி சொன்னார், அது என்னவென்றால் எல்லா நோய்களையும் மருந்தில்லாமல் குணப்படுத்த ஒரு எளிய வழி என்னவென்றால் பனிரெண்டு நாட்கள் எந்த உணவும் உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்தாலே போதும், இப்போதுள்ள போன்களில் Factory Reset செய்வது போல நம் உடலும் அனைத்து நோய்களையும் தன்னிச்சையாக சரிசெய்து கொண்டு ஆரோக்கியமான நிலைக்கு சென்று விடும் என்பதுதான்.
இந்த சிகிச்சை முறையை பற்றிச் சொல்லி விட்டு அவர் என்னிடம் கேட்ட கேள்வி ஏன் இந்த மாதிரி ஒரு சிகிச்சை முறை தமிழ் மருத்துவத்தில் இல்லை என்பதுதான், நான் அவரிடம் ஏன் இல்லை இருக்கிறது என்று சொன்னேன்…

ஐப்பசியில் தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் மிக மிக்கியமான விரத முறையே கந்தசஷ்டி விரதமாகும். பெரும்பாலும் நீண்ட நாள் நோயுள்ளவர்கள், குழந்தை பேறு இல்லாமல் இருப்பவர்களை கந்தசஷ்டி விரதம் இருக்கச் சொல்வது வழக்கம். இந்த விரதம் கடைபிடிப்பவர்களுக்கு பெரும்பாலும் நோய்களும் சரியாகி விடும், குழந்தை பேறும் கிடைத்து விடும். நம் தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுகின்ற விரத முறைகளில் இது மிகவும் முக்கியமானதாகும். வெறுமனே சாப்பிடாமல் இருக்கச் சொன்னால், இருக்க மாட்டார்கள் என்பதற்காக கடவுளின் பேரைச் சொன்னால் கட்டுப்பாட்டுடன் செய்வார்கள் என்ற காரணத்திற்காக சொல்லப்பட்ட நல்ல விஷயங்கள் இவை. ஆனால் இவற்றையெல்லாம் ஆன்மிகம், பகுத்தறிவு, மூடப்பழக்க வழக்கங்கள் என்று ஒதுக்கி வைத்தோம். 

வெறுமனே உண்ணாவிரதம் இருந்தாலே சரியாகும் பிரச்சினைகளுக்கு இன்றைக்கெல்லாம் தெருவிற்கு தெரு மருத்துவமனைகளும், செயற்கை கருத்தரிப்பு மையங்களும் பெருகிவிட்டன. 

வாரத்திற்கு ஒரு நாளாவது காலை, மதியம் உணவைத் தவிர்த்து (இரவு உணவு மிதமாக சாப்பிடலாம்) உண்ணாவிரதம் இருப்போம், நோய்களை தீர்ப்போம், செயற்கை கருத்தரிப்பு மையங்களை தவிர்த்து ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்.

இப்போது இந்த கட்டுரை எழுதுவதற்கு காரணமாய் இருந்த Whatsapp கட்டுரையை படியுங்கள்.

தாய்லாந்து குகை சம்பவம்..

தாய்லாந்தில் கடந்த ஜீன் 23 ஆம் தேதி புட்பால் விளையாடச் சென்ற 12 மாணவர்கள்  மற்றும் அவர்களது கோச் அடங்கிய "Wild Boars" எனும் அணி அங்கு புட்பால் பயிற்சி முடித்ததும் சும்மா சுத்திப்பார்ப்போமே என்று அங்குள்ள பெரிய குகைக்குள் நடந்து சென்றுள்ளனர்.. நடந்து நடந்து உள்ளே 4 கிலோ மீட்டர் சென்று விட்டனர்..தீடீரென வெளியே காட்டு மழை பொழிய அதனால் எழுந்த வெள்ளமானது குகைக்குள் வந்து நிரம்பிவிட்டது..உள்ளே சென்ற 13 பேரும் குகைக்குள்ளேயே சிக்கிவிட்டனர்..  கும் இருட்டு..  சாப்பிட ஒன்றுமில்லை.. 
 
 
இதுபோன்ற வொர்ஸ்ட் கேஸ் சினாரியோக்களை தலைவர் பியர் க்ரில்ஸ் டிஸ்கவரி சேனிலில் விளக்கியிருந்தாலும்இந்த குகைக்குள் தீ மூட்டவோ, மிருகங்களை வேட்டையாடி சாப்பிடவோ முடியாது. ஆகவே உள்ளே சென்றவர்கள் அலிபாபா குகைக்குள் மாட்டியதைப்போல் தங்கள் கதை முடியப்போகிறது என்று நினைத்து இறுதிக் கதைகள் பேசி இருந்திருப்பார்கள் போல…  ஆனால் தெய்வாதீனமாக அங்கு உள்ளே டைவிங் சென்ற பிரிட்டிஷ் டைவிங் வீரர்கள் இவர்கள் சிக்கிக்கொண்டிருப்பதை கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டறிந்து உலகின் மிக சிக்கலான மீட்பு பணியை செய்து வெற்றிகரமாக 13 பேரையும் மீட்டுள்ளனர்.   
 
இந்த மீட்பு பணியில் இறந்து போன முன்னாள் கடல் படை வீரருக்கு அஞ்சலிகளை செலுத்தி விட்டு..இந்த 13 பேரும் எப்படி உயிர் பிழைத்தார்கள் என்ற விளக்கத்துக்கு போவோம்.. அவர்களை உயிர் பிழைக்க வைத்ததுஇரண்டு விசயங்கள் தான்ஒன்று  மழை பொழிந்ததால் குகைக்குள் வந்த சுத்தமான மழை நீர்   இரண்டுகீடோசிஸ்
சுத்தமான மழை நீர் கிடைத்ததால் அவர்கள் உள்ளே சிக்கியிருந்த 17 நாட்களும் தண்ணீருக்கு குறைவில்லை. தங்களுக்கு தேவையான தண்ணீரை மட்டும் குடித்தால் போதும் . உடல் 70 நாட்கள் வரை கூட உணவின்றி தாக்குபிடிக்கும் என்பது தெரியுமா?? 
 
இதை இந்தியா சுதந்திரம் பெறும் முன்னரே அறிந்த ஒரு தியாகி கிட்டத்தட்ட 21 நாட்கள் உணவில்லாமல் தண்ணீர் மட்டும் பருகி உண்ணாவிரதம் இருந்தார் .இது தெரியுமா?
அவர்தான் மஹாத்மா காந்தி அவர்கள்.
நாமெல்லாம் ஒரு வேளை சாப்பிடாவிட்டாலும் கொலைப்பசியா இருக்கு மாப்ள.. ரெண்டு வேளை சாப்பிடாவிட்டால் சுருண்டு விழுவது போல் உணர்வது எல்லாம் நமது மூளை காட்டும் பாவ்லா வேலை தான்.. இப்போது நாம் உணவின்றி நீருடன் பட்டினி இருக்கும் போது  சிறிது சிறிதாக நமது உடலில் நடக்கும் மாற்றங்களை படிக்கும் போது மூக்கில் விரலை வைப்பீர்கள் பாருங்கள்
 
உணவு முடித்த நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்குள்
நம் உணவில் உள்ள க்ளூகோஸ் அனைத்தும் மூளை மற்றும் மற்ற செல்கள் உபயோகித்து விடும்.. ஆகவே மூளை தனக்கான எரிபொருளான க்ளூகோசை கேட்கும். இதுவே நமது "பசி உணர்வு" அதற்கு பிறகும் நாம் சாப்பிடாவிட்டால் நமது கல்லீரலில் தேவைக்காக சேமித்து வைத்திருக்கும் க்ளைகோஜெனை உடைத்து க்ளூகோசாக மாற்றி மூளைக்கு கொடுக்கும் நமது உடல்.
இது இரண்டு - மூன்று நாட்கள் வரை தாங்கும்  அதற்கு பிறகும் நாம் உணவு உண்ணவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
 
நாள் மூன்று - 72 மணிநேரம்  நமது உடல் " கீடோசிஸ் " எனும் நிலைக்கு செல்லும். இதில் நமது மூளை 30 சதவிகிதம் கீடோன்கள் மூலமும் 70 சதவிகிதம் க்ளூகோஸ் மூலமும் இயங்கும்
 
நாள் நான்கு  நமது மூளை 70 சதவிகிதம் கீடோன்கள் மூலமும் 30 சதவிகிதம் க்ளூகோஸ் மூலமும் இயங்கும்  72 மணிநேர உண்ணாவிரதத்திற்கு பிறகு நமது மூளைக்கான க்ளூகோஸ் தேவை ஆட்டோமேட்டிக்காக தினசரி 30 கிராம் போதும் என்ற நிலைக்கு வந்துவிடும் தசைகளை உருக்கி கிடைக்கும் புரதச்சத்தின் மூலம்  புதிதாக க்ளூகோஸ் உருவாக்கப்படும். இதை gluconeogenesis என்போம். இதை செய்வது நமது கல்லீரல். ஆக, 72 மணிநேரத்திற்கு பிறகு  உங்களின் கொழுப்பும் தசைகளும் சேர்ந்து கீடோன்களையும் க்ளூகோசையும் உற்பத்தி செய்யும். இது சுமார் மூன்று வாரங்கள் முதல் 70 நாட்கள் வரை தாங்கும். இப்படி தான் அந்த மாணவர்கள் உயிர் பிழைத்தார்கள்.. அவர்கள் புளியோதரை, எலும்பிச்சை சாதம் கட்டிக்கொண்டு உள்ளே சென்றிருந்தால் கூட அதில் இருந்து கிருமித்தொற்று வந்து வயிற்றுப்போக்கு வாந்தி என நீரிழப்பு ஆகி இறந்திருப்பார்கள்
 
கீடோசிஸ் மற்றும் தண்ணீர் அவர்களை காப்பாற்றிவிட்டது. இப்படி தொடர் உண்ணாவிரதத்தில் அல்லது பட்டினியில் கிடப்பவர்களுக்கு என்ன உணவு கொடுக்கப்பட வேண்டும்??? சந்தேகமே இல்லாமல் முதலில் அதிக கொழுப்புள்ள மற்றும் புரதம் கலந்த உணவு தான் கொடுக்கப்பட வேண்டும். காரணம் பட்டினி கிடந்த உடல் மற்றும் மூளை இப்போது 90 சதவிகிதம்  கொழுப்பினால் இயங்கிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு கொழுப்பு புரதம் நிறைந்த முட்டை மாமிசம் போன்றவற்றை கொடுப்பது நல்லது. அதையும் சிறுக சிறுக கொடுக்க வேண்டும்.
 
மீறி பட்டினியா இருந்துருக்கான்…போடு பாயாசத்தோட ஃபுல் மீல்ஸ் என்றால் அவர்கள் அனைவரும் அடுத்த சில நாட்களில் இறந்திடுவார்கள்… காரணம்
Re - Feeding syndrome
ஆம்.. உண்ணாவிரதத்தில் இருந்த உடலுக்கு அதிகமான மாவுச்சத்து உள்ள உணவுகள் கொடுக்கப்படுமாயின் அல்லது அளவுக்கு அதிகமாக உணவு கொடுக்கப்படுமாயின் , அவர்களது உடல் அந்த மாற்றத்தை தாங்காமல் கொத்து கொத்தாக சாவார்கள். இப்படி மக்கள் சாவதை நேரில் பார்த்தவர்கள்.. ரஷ்யாகாரர்கள்.. இரண்டாம் உலகப்போரின் இறுதியில் போலந்தில் காண்சண்ட்ரேசன் வதை முகாம்களில் அடைபட்டிருந்த அகதிகளை விடுவித்தனர் சோவியத் படையினர். வெளியே வந்த அகதிகள் அனைவரும் பல வாரங்கள் பட்டினி போடப்பட்டிருந்தனர்.  மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு அதிகமான உணவை வழங்கினர். அகதிகளும் தங்கள் பசியை போக்க நன்றாக சாப்பிட்டனர். அடுத்த இரண்டு நாட்களில் மட்டும் முக்கால்வாசி பேர் இறந்தனர்.  காரணம் ReFeeding syndrome தான். பட்டினி கிடந்த ஒருவருக்கு சிறந்த உணவு கொழுப்பு மற்றும் புரதம். அதுவும் சிறுக சிறுக அதிகமாக்க வேண்டும். மாவுச்சத்து நிறைந்த   உணவுகளை சாப்பிடக் கொடுக்க கூடாது..  ஆனாலும் கொழுப்பின் மீதுள்ள பயத்தால் அவர்களுக்கு சிறிதளவு பிஸ்கட் கொடுக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. வெளியே வந்த அனைத்து மாணவர்களும்  "உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்"
 
கீடோஸிஸ் உயிர் காக்க வல்லது.. இவ்வுலகில் தனிமையில் விடப்பட்டாலும் சரி ..உணவு இல்லாமல் இருந்தாலும் சரி..யார்  நம்மை கைவிட்டாலும், கீடோசிஸ் எனும் நண்பன் நம்மை கைவிட மாட்டான்..உயிர் காப்பான் தோழன்

தொடர்புக்கு...
For Contact...