கோடை காலத்திற்கு ஏற்ற ஜில் ஜில் மோர்
கோடை காலத்திற்கு ஏற்ற ஜில் ஜில் மோர்
தயிர் , மோர் சாப்பிடும் முறைகள் என்ன...? எப்படி கையாள வேண்டும்..?
பிரண்டை உப்பு Pirandai Salt
சீந்தில் சர்க்கரை Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி Bamboo Rice
வில்வம் பழம் Bael Fruit
இந்தியர்களின் உணவில் பால், தயிர், மோர் இவை மூன்றும் தவிர்க்க முடியாத பதார்த்தங்கள். அதிக ஊட்டச்சத்து உள்ள உணவாக மட்டுமில்லாமல், ஆரோக்கியமான உணவாகவும் உள்ளது. அதே நேரத்தில் பால் பொருட்களை அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு உபாதைகளும் உண்டு. கொலஸ்ட்ரால் போன்ற பல பிரச்னைகள் வரவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, தயிர் சாப்பிடும் போது அளவாக பயன்படுத்த வேண்டும்.
தயிரை விட மோர் பயன்படுத்துவது சிறந்ததாகும். தயிர் குளிர்ச்சி என,நினைத்து பலர் சாப்பிடுகின்றனர். அதை பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக்கியும் சாப்பிடுகின்றனர். ஆனால், அது உண்மை இல்லை. தயிர் உடல் சூட்டை அதிகமாக்கும். பிரிட்ஜில் வைத்தால் சூடு மேலும் அதிமாகும்.
தயிரில் உள்ள நன்மைகள் குறைவு. தயிர் சாப்பிட்டால் மலச்சிக்கல் வரும். உடலில் கொழுப்பைக் கூட்டி, ஏகப்பட்ட உபாதைகளைக் கொடுக்கும். ஹார்மோன்களின் சுரப்பை அதிகமாக்கும். கண்டிப்பாக தயிரை இரவில் சாப்பிடக்கூடாது.
பனி கொட்டும் புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாதங்களிலும், கோடை துவங்கும் தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களிலும் சாப்பிடக்கூடாது. ரொம்ப ஜில்லென்றும் சாப்பாட்டில் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. சரியாக உறையாத அல்லது புளித்துப்போன தயிரையும் சாப்பிடக்கூடாது.
மோர் தயார் செய்யும் முறை
தயிரை விட மோர் சிறந்ததாகும். வெறுமனே தயிரில் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டால், அது மோர் ஆகிவிடாது. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில், சரிபங்கு தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கினால்தான் மோர் கிடைக்கும். மோர்
எளிதாக ஜீரணமாகிற உணவு. சாப்பிட்ட பிறகு மோர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
மூல நோய்க்கு மருந்து
மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து. வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளுக்கும் மோர் சிறந்த மருந்து. மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும்.
வெய்யில் நேரத்தில் சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலுக்கு
வெயிலால் உடம்பு சூடாகி, சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால் அதற்கும் நல்ல மருந்து மோர்தான். ரத்தசோகைக்கும் மோர் நல்லது. நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம், உடலில் சேரும் விஷத்தை அகற்றும் சக்தி மோருக்கு உண்டு. சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மோர் சாதம் சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டுத் தாளித்து, அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சீரகப் பொடியும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இந்த தண்ணீர் ஆறியதும், இதில் மோரைக் கலந்து குடிக்கலாம். ஆனால், மோரை நேரடியாகச் சூடு பண்ணக்கூடாது. தினம் மதிய வேளை, 200 மில்லி மோர் அருந்தினால் உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகும்.
வெய்யில் காலத்திற்கு ஏற்ற பானம் என்றால் அது மோர்தான்
மோரில் உள்ள சத்துக்கள்
மோரில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது.
தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், விட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
மருத்துவ பயன்கள்
செரிமானத்தை எளிதாக்கும்
தயிரில் செரிமானத்துக்கு உதவும் புரோபயோடிக்ஸ் (Probiotics) பாக்டீரியாக்கள் உள்ளன. தயிரை மோராக மாற்றும்போதும் இதே நன்மைகள் கிடைக்கின்றன. அதிகளவில் ஏப்பம் விட்டுக்கொண்டே இருக்கும் பிரச்னைக்கும் மோர் தீர்வு தருகிறது. காரசாராமான உணவுகளை உட்கொண்ட பின்னர் ஒரு டம்ளர் மோர் குடித்தால் வயிறு எரிச்சல் அடங்கும். வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு கொழுப்பையும் கரைக்கும். மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
கால்சியம் குறைபாடு நீக்கும்
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையை சிலரது உடலால் ஜீரணிக்க முடியாது. இந்தப் பிரச்னை லாக்டோஸ் இன்டோலரன்ஸ் (Lactose intolerance) எனப்படுகிறது. இத்தகைய பிரச்னை உள்ளவர்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இவர்கள் மோர் குடிப்பதன்மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பெற முடியும். ஒரு கப் மோரில் 350 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. ஆனால், பாலில் 300 மில்லி கிராம் கால்சியம்தான் இருக்கிறது.
வயிற்றுப்புண் குறைக்கும்
வயிறு சம்பந்தமான எல்லாப் பிரச்னைகளுக்கும் மோர் தீர்வு தரும். இதை தொடர்ந்து குடித்துவர வயிற்றுப்புண் நீங்கும்.
வாய்ப்புண் நீக்கும்
தினமும் இரண்டு அல்லது மூன்று கப் மோர் குடிக்க வாய்ப்புண் குணமாகும். மோரை விழுங்குவதற்கு முன்பாக சில நொடிகள் வாயிலேயே வைத்திருந்து பிறகு விழுங்குவது விரைவான பலன் தரும்.
எடை குறைக்கும்
குறைவான உணவைச் சாப்பிட்டு எடையைக் குறைக்க முயலும்போது நீரிழப்பு, சோர்வு போன்றவை ஏற்படும். ஆனால் மோர் குடிக்கும்போது இந்தப் பிரச்னைகள் ஏற்படாது. மோர் எளிதில் பசியைத் தணிக்கக்கூடிய உணவு. அதேநேரத்தில் இதில் புரதம், மினரல், வைட்டமின், கால்சியம், மக்னீசியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துகளும் உள்ளன. பால், தயிரைவிட இதில் கொழுப்பும் குறைவு.
முக அழகைக் கூட்டும்
இது உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதால் முகம் அழகாக மாறும். இதைப் பயன்படுத்தி ஃபேஷியல் செய்யலாம். இது சருமத்தைப் பிரகாசமாக்குவதோடு, மென்மையாகவும் மாற்றக்கூடியது. முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையவும் இது உதவும். குறைந்த வயதில் வயதான தோற்றம் அடையும் பிரச்னைக்கு இது தீர்வு தரும். இதில் லாக்டிக் அமிலம் இருப்பதால், இதை தொடர்ந்து பயன்படுத்திவர முகத்தில் உள்ள புள்ளிகள் மறையும்.
நீரிழப்பைத் தடுக்கும்
தயிருடன் தண்ணீர், உப்பு கலந்த மோர்க்கலவையைக் குடித்தால் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படாது. இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். மோரில் இரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோஆக்டிவ் புரோட்டீன், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல்மற்றும் ஆன்டி-கேன்சர் பொருள் நிறைந்துள்ளதாக தெரிவிக்கிறது.
மேலும் நிபுணர்களும் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கின்றனர். மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் என்பது தான். மோர் வயிற்றைகுளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.
சருமத்திற்கு உகந்த மோர்
1. சருமத்தில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு மோர் சிறந்த மருந்தாக உள்ளது. முகத்தில் தயிர், பால் ஏடு தேய்த்து வந்தால் நல்ல பலன் தெரியும்.
2. சருமத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை மோரில் நனைத்த துணியால் கட்டுப் போட்டு வருவதன் மூலம் சரும பாதிப்புவிரைவில் குணமடைவதைக் காணலாம்.
3. தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.
மோர் புளிக்காமல் வைத்திருக்க சிறுகுறிப்பு
கோடை காலத்தில் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசி வரைக்கும் புளிக்காமல் இருக்கும். ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும் போது மோர் சாப்பிடக்கூடாது. மோர்சாதமும் கூடாது.
மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...