ஹார்மோன்கள் ஏற்ற இறக்கத்தினால் உடல் எடை கூடுகிறதா? அதற்கு காரணங்களும் தீர்வுகளும்!

ஹார்மோன்கள் ஏற்ற இறக்கத்தினால் உடல் எடை கூடுகிறதா? அதற்கு காரணங்களும் தீர்வுகளும்!
பிரண்டை உப்பு                          Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                           Bael Fruit
 உடல் எடை இன்ன காரணம் தெரியாமல் திடீரென சிலருக்கு அதிகரிக்கும். கடுமையான பயிற்சி மற்றும் டயட் இருந்தாலும் உடல் எடை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே சிலருக்கு போகும். இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருப்பார்கள்.

சாதாரணமாகவே உடல் எடையை கூட்டுவது எளிது. ஆனால் குறைப்பது மிகவும் குறைவு. அதிக சாப்பாட்டால் அல்லது வேலை அல்லது உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால், உடல் எடை கூடுகிறது என தெரியவந்தால் எப்பாடு பட்டாவது முயற்சிக்கலாம்.

இதில் இன்ன காரணம் என்று அறியாமல் உடல் எடை கூடினால் கஷ்டம்தான். அந்த சமயத்தில் நீங்கள் பரிசோதனை செய்து அந்த பிரச்சனைக்குரிய சிகிச்சையை தகுந்தாற்போல் எடுத்துக் கொண்டால் உடல் எடையை குறைத்திடலாம். என்ன மாதிரியான காரணங்கள் உங்கள் உடல் எடைக்கு காரணம் என பார்க்கலாம்!

ஹார்மோன்கள்:

உங்கள் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் மொத்த உறுப்புகளையும் சூப்பர்வைசர் போல் கண்காணிக்கிறது. ஒழுங்குபடுத்துகிறது. முறையாக வேலை செய்ய தூண்டுகிறது. ஹார்மோன்களை சுரப்பிகள் சுரக்கின்றன.

அந்தந்த சுரப்பி சுரக்கும் ஹார்மோன் அந்தந்த உறுப்பை கண்காணித்து ஒழுங்குபடுத்துகிறது. உதாரணத்திற்கு கணையம் சுரக்கும் இன்சுலின் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது. இந்த ஹார்மோன்கள் சுரப்பதில் பிரச்சனையானால் பலவித பாதிப்புகள் உண்டாகும்.

அதன் முக்கிய அறிகுறியே உடல் எடை கூடுவது அல்லது குறைவதுதான். அப்படி உடல் எடை கூடுவதற்கு எந்த ஹார்மோன் காரணம் என பார்க்கலாம்.

இன்சுலின்:

இன்சுலினை கணையம் சுரக்கிறது. இது இரத்தத்தில் குளுகோஸின் அளவை கட்டுப்படுத்துகிறது. அதிகமாக சாப்பிடும் துரித உணவுகள், அதிக கார்போஹைட்ரேட் உணவுகள் இன்சுலின் சுரப்பில் பாதிப்பை உண்டாக்குவதால் இன்சுலின் சுரந்தாலும் வேலை செய்யாமல் போகும். அதுவே டைப் 2 டயாபடிஸ்.

எப்படி சரி செய்யலாம்?

குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். வெந்தயம், பாகற்காய், போன்ற துவர்ப்பு பொருட்களை தினமும் சாப்பிட வேண்டும். ராகி, கோதுமை உணவுகளை அளவோடு சாப்பிட வேண்டும். நீர் அதிகம் குடிக்க வேண்டும். இப்படி செய்தால் உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.

தைராய்டு:

பெண்களுக்கு உண்டாகும் பெரிய பாதிப்புகளில் இதுவும் ஒன்று. தைராய்டு சுரப்பு குறையும் போது உடல் எடை கூடும். இதுவே தைராய்டு சுரப்பு அதிகரிக்கும்போது உடல் எடை குறைந்து கொண்டே போகும். உடல் பருமன், மலச்சிக்கல், சோர்வு போன்றவை ஹைப்போ தைராய்டின் அறிகுறிகள்.

தீர்வு என்ன?

உணவுகளை பச்சையாக சாப்பிடக் கூடாது. நன்றாக சமைத்தே சாப்பிட வேண்டும். பூசணி விதைகள், விட்டமின் டி, மீன் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக ஹைப்போ தைராய்டிற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஈஸ்ட்ரோஜன்:

ஈஸ்ட்ரோஜன் பெண்களின் மிக முக்கியமான செக்ஸ் ஹார்மோன். இது மாதவிடாயை ஏற்படுத்தி பெண்மைக்கான குணங்களையும், உருவமைப்பையும் தருகிறது. அது மட்டுமல்லாமல், ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் இதய நோய்கள், மார்பக புற்று நோய், என பல வியாதிகள் தடுக்கப்படுகின்றன.

ஈஸ்ட்ரோஜன் சுரப்பதில் பிரச்சனை உண்டாகும்போது உடல் எடை கூடும். அதே போல் 50 வயதிற்கு பின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பது நின்று விடும். அந்த சமயத்தில் உடல் எடை கூடும்.

தீர்வு:

அதிக கொழுப்பு உணவுகள் சாப்பிடக் கூடாது. பெண்கள் துரித உணவுகளை தொடவே கூடாது. நிறையா காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும். பழங்களை சாப்பிட்டால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு சீராக இருக்கும்.


கார்டிசால்:

கார்டிசால் அட்ரினல் சுரப்பி சுரக்கிறது. நீங்கள் அதிக மன அழுத்தத்தால், மனச் சோர்வு, கோபம், பதட்டம் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது தான் இந்த கார்டிசால் சுரக்கும்.

இந்த கார்டிசால் உடலில் கிடைக்கப் பெறும் சக்தியை சீராக்குகிறது. ஆனால் மோசமான உணவுப் பழக்கத்தால், அல்லது எப்போதும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது கார்டிசால் தொடர்ந்து சுரந்து கொண்டேயிருக்கும். இதனால் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

தீர்வு:

மன அழுத்தத்தை குறைக்கும் வழிகளை தேட வேண்டும். நல்ல உணவுகளை சாப்பிட வேண்டும். யோகா, மனதிற்கு பிடித்த இசை என மனதை ரிலாக்ஸாக வைத்திருந்தால் சில வாரங்களில் இந்த ஹார்மோன் கட்டுக்குள் வரும், உடல் எடையும் குறையும்.

டெஸ்டோஸ்டீரான்:

ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் பெண்களுக்கு குறைந்த அளவு சுரக்கிறது. இது எலும்பின் அடர்த்தியை வலுப்படுத்துகிறது. தசையை உறுதிப்படுத்துகிறது. ஆனால் வயதின் காரணமாக சிலருக்கு டெஸ்டோஸ்டீரான் சுரக்காது. இதனால் எலும்பு பலவீனமாகும். உடல் பருமன் உண்டாகும்.

தீர்வு:

ஆளிவிதைகள், முழு தானியங்கள், விட்டமின் சி, நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். ஜிங்க் அதிகம் காணப்படும் உணவுகளை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து டெஸ்டோஸ்டீரான் அளவை கண்காணித்துக் கொண்டே வர வேண்டும்.

மெலடோனின்:

நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்றால் சிலர் இரவு முழுவதும் சரியாக தூக்கமில்லாமல் இருப்பார்கள் ஒரு சில நாட்களிலேயே உடல் ஊதியிருப்பது போலத் தோன்றும்.

காரணம்மெலடோனின் தூக்கத்தை தரும் ஹார்மோன். மாலையிலிருந்து இரவு முழுவதும் இந்த ஹார்மோன் சுரப்பது அதிகரிக்கும். இருளான நேரங்களிலே இந்த மெலடோனின் அதிகமாக சுரக்கும். ஆகவே நமக்கு தூக்கம் வருகிறது.

ஆனால் அது சுரக்கும் சமயத்தில் நீங்கள் தூங்கவில்லையென்றால் மெலடோனின் சுரப்பதில் பாதிப்பு உண்டாகும். விளைவு உடல் பருமன்.

தீர்வு:

சரியான நேரத்தில் தூங்கி எழப் பழக வேண்டும். நல்ல தூக்கம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும். இதனால் ஒட்டுமொத்த உறுப்புகளும் தத்தம் பணியை சீராக செய்து, உடல் எடையை சரியாக வைத்திருக்க உதவுகிறது.


 மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...