அல்சருக்கு மருந்தாகும், ஹீமோகுளோபினைக் கூட்டும், ஆண்மை பெருக்கும் ரோஜா “குல்கந்து”


அல்சருக்கு மருந்தாகும், ஹீமோகுளோபினைக் கூட்டும், ஆண்மை பெருக்கும் ரோஜாகுல்கந்து




பிரண்டை உப்பு                          Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                           Bael Fruit
 



ரோஜா பூக்கள் காதலுக்கு மட்டும் அடையாளமான மலரல்ல. இது மருத்துவ குணம் நிறைந்தது. ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும்குல்கந்துஇதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும்குல்கந்துநாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.  நாட்டு மருந்து கடைகளில் தயாராக கிடைக்கும் குல்கந்தில் உபயோகப்படுத்திய அல்லது பழைய ஊட்டி ரோஜாவின் காய்ந்த பூக்களினால் செய்யப்பட்ட குல்கந்தே கிடைக்கிறது. வீட்டிலேயே கலப்படமில்லாமல் சுத்தமான நாட்டு பன்னீர் ரோஜா பூக்களின் மூலமாக குல்கந்தை  நாம் தயாரிக்கலாம்.

குல்கந்து செய்முறை

நல்ல, தரமான, சிவந்த நிறமுடைய நாட்டு ரோஜாவின்  நன்கு பூத்த பூக்களிலிருந்து இதழ்களை ஆய்ந்து கொள்ளவும். இதழ்களை நன்கு கழுவி, சுத்தம் செய்து, ஈரம் போக துடைத்து / நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். சேகரித்த இதழ்களின் எடையைப் போல, மூன்று மடங்கு கற்கண்டை எடுத்துக் கொள்ளவும். பன்னீர் ரோஜா இதழ்களையும், கற்கண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடித்துக் கொள்ளவும். ஜாம் போல வரும் வரை இடிக்கவும். இதனை ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போடவும்.

இந்த ஜாம் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனை விட்டு நன்றாக கிளறவும். இத்துடன் வெள்ளரி விதை, கசகசா சேர்க்கவும். குல்கந்து தயார்.

அனைத்தையும் சுத்தமான, உலர்ந்த கண்ணாடி ஜாடி ஒன்றில் போட்டு, வாயை துணியால் கட்டி இரண்டு நாட்கள் வெயிலில் வைக்கவும். ஒவ்வொரு தடவையும் உபயோகிக்கும் முன் நன்றாக கிளறவும்.
அடிக்கும் வெய்யிலைப் பொறுத்து நான்கு அல்லது ஐந்து நாட்களில் ரோஜா இதழ்கள் பதமாகி இருக்கும். அதன் பின்னர், சீசாவை இறுக்கமாக மூடி வைத்து தேவையான போது பயன்படுத்தலாம். எடுப்பதற்கு எப்பொழுதும் சுத்தமான உலர்ந்த கரண்டியைப் பயன்படுத்தவும்.

ஜீரணக் கோளாறு நீங்கும்

குல்கந்து வயிறு கோளாறுகளை நீக்கும். உடலின் பித்த அளவை சீராக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும். மலமிளக்கியாக செயல்பட்டாலும், குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.

உடல் துர்நாற்றம்

அதிகம் வியர்வை சுரக்கும் நபர்களுக்கு உடல் துர்நாற்றம் அதிகம் இருக்கும். அவர்களது நாற்றம் போக்க குல்கந்து மிகவும் உதவியாக இருக்கும். அது வியர்வையினால் உண்டாகும் விஷ தன்மையை உங்கள் உடலில் இருந்து நீக்கி உங்கள் உடலை குளிர வைக்கிறது. இதனால் இதை வெயில் காலங்களில் அதிகம் சாப்பிடுவது நல்லது.

வாய்ப்புண்

குல்கந்து உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது வாய் புண் உருவாவதை குறைகிறது, மற்றும் வாய் புண்கள் காரணமாக வாயில் வரும் எரிச்சல் உணர்வு மற்றும் வலி குறைக்க உதவுகிறது.

ஆண்மை பெருக்கி

குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் காதலர்கள் மற்றவர்களை விட, ரோஜாவை பயன்படுத்து கின்றனர் என்று கூறப்படுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

இதயத்திற்கு ஏற்றது

ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்தாக செயல்படுகிறது.
இது மன அழுத்தத்தை போக்குகிறது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் காய்ச்சி ஆறவைத்த பாலில் அரை ஸ்பூன் குல்கந்து சேர்த்து சாப்பிடலாம் நன்றாக உறக்கம் வரும்.

தோல்

இது தோல் எரிச்சலை கட்டுப்படுத்தி அதன் அறிகுறியைக் குறைக்க உதவுகிறது. மேலும் பருக்கள், கறைகள் போன்ற தோற்றத்தை சரிசெய்கிறது.

மேலும் சில பயன்கள்

  • அரிப்பு, கொதிப்பு, கொப்புளங்கள், சுருக்கங்கள், முகப்பரு மற்றும் இன்னும் பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்.
  • இது உங்களுக்கு வயதான தோற்றம் வராமல் செய்கிறது.
  • இது குறைவான அல்லது பலவீனமான விந்தணுக்கள் உள்ள ஆண்களில் விந்து குறைபாடுகளை சரிசெய்கிறது.
  • இது சுடும் வெயிலால் ஏற்படும் மயக்கத்தை குறைக்கிறது. வெளியே செல்லும் முன் 2 தேக்கரண்டி குல்கந்து சாப்பிடுங்கள்.

குல்கந்தை சிறுவர்கள் 1/2 தேக்கரண்டியும் பெரியவர்கள் 1 தேக்கரண்டியும், தினமும் காலை இரவு உறங்கும் முன்பும் சாப்பிட்டு வரலாம். ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

 மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...