டைபாய்டு காய்ச்சல்- குணப்படுத்துவதற்கான வழிமுறைகள்


டைபாய்டு காய்ச்சல்- குணப்படுத்துவதற்கான வழிமுறைகள்




பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                              Bael Fruit




டைபாய்டு
சாதாரண காய்ச்சலே மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் டைபாய்டு காய்ச்சலாக இருக்கமோ என்ற அச்சம் தொற்றிக் கொள்கிறது. அந்த அளவுக்கு பரவலாக குறிப்பாக சுகாதாரம் குறைவான நாடுகளில் இந்நோய் காணப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் தாக்ககூடியது, சால்மோனெல்லா டைபை(Salmonella typhi) என்னும் பாக்டீரியாவால் இது வருகிறது. அசுத்தமான குடிநீர், உணவு மூலமாக இந்த கிருமிகள் உடலுக்குள் ஊடுருவுகின்றன.
முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலியுடன் நோய் தொடங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும்.


அறிகுறிகள்
  • ஒரு மாதத்திற்கு மேலாக காய்ச்சல் நீடிக்கும்.
  • மிகவும் சோர்ந்த நிலை, வயிறு வலி, வயிறு உப்புதல்.
  • எடை குறைவு, வேகமாக மூச்சுவிடுதல்.
  • எலும்பு மூட்டுகளிலும் தலையிலும் கடுமையான வலி, பசியின்மை.
  • குமட்டல், வாந்தி, வயிற்றுவலி.

பரிசோதனை
  • WIDAL TEST என்பது டைபாய்டை கண்டுபிடிக்க உதவும் ஆய்வக பரிசோதனை.
  • நோய் தாக்கப்பட்டு 7 நாட்கள் கழித்தே இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும், இல்லையென்றால் இது Positive என்று வரும்.

உணவு முறை
  • காரம் இல்லாத எளிதில் செரிக்க கூடிய உணவை மட்டுமே தரவேண்டும்.
  • பட்டினி போடவே கூடாது, வயிற்றில் உணவு இருந்தால் மட்டுமே குடல் புண் சீக்கிரம் ஆறும்.
  • நீர் சத்து உடலில் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
  • சரியாக கண்டுபிடித்து மருந்து சாப்பிட வேண்டும், இருப்பினும் காய்ச்சல் குறைந்த பின் ANTIBIOTIC மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
  • புழுங்கல் அரிசி கஞ்சியை வடிகட்டி கஞ்சித் தண்ணீரை மட்டும் சிறிது உப்பு சேர்த்து காலையில் மற்றும் மதிய வேளையில் சாப்பிடுவது நல்லது.
  • நிலவேம்பு, நன்னாரி, சீந்தில், திராட்சை, நெல்லி வற்றல், அதிமதுரம், விளாமிச்சம்வேர் கஷாயம் நல்ல குணம் தரும்.

தடுப்பு முறைகள்
  • கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிலும் கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
  • குடிநீரை நன்கு கொதிக்கவைத்து ஆறவைத்துக் குடிக்க வேண்டும்.
  • காய்கறி மற்றும் பழங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்திய பிறகே சமையலுக்கும் சாப்பிடவும் பயன்படுத்த வேண்டும்.
  • சமைத்த உணவுகளை திறந்துவைக்கக் கூடாது. ஈக்கள் மொய்க்காமல் பாதுகாக்க வேண்டும். திறந்தவெளிகளில் ஈக்கள் மொய்க்கும் வகையில் விற்கப்படும் உணவுகளையும் சாப்பிடக் கூடாது.
  • வீடுகளிலும் தெருக்களிலும் சுற்றுப்புறச் சுகாதாரம் காக்கப்பட வேண்டும்.

 மேற்கண்ட மூலிகைகள் மற்றும் மருந்துகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...