ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) எதனால் ஏற்படுகிறது? அதனை குணப்படுத்த என்ன செய்யலாம்....

ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) எதனால் ஏற்படுகிறது? அதனை குணப்படுத்த என்ன செய்யலாம்....பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                  Bael Fruit
 தலைவலி  என்றாலே உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. அதுவும் பலரிடமும் கைவசம் இருக்கும் தலைவலிக்கு வலி நிவாரணியாக விளங்கும் பிரபல பெய்ன்கில்லர்எல்லாம், உடலுக்கு கேடானது. 

40 வயதைத் தாண்டினால், நரம்புத் தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும் என்பது பலருக்கு தெரிவதில்லைஅதிலும், “மைக்ரேன்என்று சொல்லப் படும், ஒற்றைத் தலைவலி வந்து விட்டால் போதும், உயிரே போகும் அளவுக்கு வலி இருக்கும்.

மைக்ரேன் பிரச்னை ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. 15 ஆண்களில் ஒருவரும் 5 பெண்களில் ஒருவரும் மைக்ரேனால் பாதிக்கப்படுகிறார்.

மைக்ரேன் தாக்குதலை சமாளிப்பதும் ஒரு மிகப்பெரிய விஷயமாகவே இருந்து வருகிறது. சாதாரண தலைவலியை ஒன்று அல்லது இரண்டு பாராசிட்டமால் மாத்திரைகள் மூலம் சமாளிக்க முடியும். ஆனால் மைக்ரேன் தலைவலி சாமானியமாக எப்படிப்பட்ட வலி நிவாரணிகளுக்கும் கட்டுப்படாது.

மைக்ரேன் தலைவலி பிரச்சினைக்கும் மன ஆரோக்கியத்துக்கும் தொடர்பு இருப்பதை மறுக்க இயலாது. இதை சில ஆய்வுகள் நிரூபித்துள்ளன

மைக்ரேனுக்கும் bipolar disorder எனப்படும் இரு துருவ மனச்சோர்வுக்கும் ஆழமான தொடர்புகள் இருப்பதை 2016ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மைக்ரேன் உள்ளவர்களுக்கு பதட்டம் சார்ந்த மன நல பிரச்னை வருவதற்கு இரண்டரை மடங்கு வாய்ப்பு அதிகம் உள்ளது

மன அழுத்த பிரச்னை இருப்பவர்களுக்கு மைக்ரேன் வாய்ப்புகள் மும்மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
நீங்கள் மைக்ரேனால் பாதிக்கப்பட்டிருந்தால் அதனுடன் மற்ற நோய்களும் சேர்ந்துகொள்ளும் என்கிறார் ஒரு மருத்துவர்.

பெரும்பாலானோரை மைக்ரேனால் பாதிக்கப்பட்ட நிலையில் அது குறித்த புரிதலும் ஆய்வுகளும் மிகவும் குறைவாகவே உள்ளன. நரம்பியல் துறையிலும் சமூகத்திலும் பலர் மைக்ரேன் தலைவலியை ஒரு ஆபத்தற்ற நோயாகவே பார்க்கின்றனர்.

நரம்பியல் பிரச்சினை உள்ள நோயாளிகளில் தலைவலி என்பது பொதுவாக காணக்கூடிய விஷயமாக உள்ளது. ஆனால் நரம்பியல் நிபுணர்கள் இப்பிரச்னையை பற்றி குறைவாகவே உணர்ந்துள்ளார்கள். இது ஒரு எலக்ட்ரீஷியனுக்கு மின்சார பல்பு பற்றி தெரியாதது போல் உள்ளது.

 மைக்ரேனை முழுவதுமாக சரி செய்ய வேண்டுமென்றால் சாதாரண தலைவலி வந்தவுடன் மாத்திரைகள் போட்டு தலைவலியை சரிசெய்வது போல் மைக்ரேனை சரி செய்ய முடியாது. உங்களுக்கு மைக்ரேன் இருப்பது ஏற்கேனவே உறுதி செய்யப்பட்டிருந்தால் வெறுமனே நீங்கள் எடுத்துக் கொள்ளும் வலி நிவாரண மாத்திரைகள் தற்காலிக நிவாரணம் மட்டுமே தரும். நிரந்தரமாக மைக்ரேனை குணப்படுத்த நீங்கள் குறைந்தது மூன்று மாதங்களாவது சித்த, ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொண்டால் மைக்ரேனின் கொடுமையான வலியிலிருந்து தப்பிக்கலாம்.


தலைவலிக்கான காரணங்கள்:

தலைப்பகுதியில் இருக்கும் இரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் சீரற்று இருப்பதன் காரணமாகவே, தலைவலி ஏற்படுகிறது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், தலைவலி  வராது. பெரும்பாலும், மன அழுத்தம் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, தலைவலி அதிகமாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், முதலில் இரத்த அழுத்தத்தைச் சோதிக்க வேண்டும்.

கணினி, மொபைல் என எலக்ட்ரானிக் பொருட்களுடன் பெரும்பாலான நேரத்தைச் செலவழிப்பவர்களுக்குகண்களில் உள்ள நரம்புகள் பாதித்து, பார்வை மங்கலாகும். அதன் அறிகுறிதான் தலைவலி.

கண்களில்  ஏற்படும் பிரச்னைகளால்தான் தலைவலி வருகிறது. அரை மணிநேரத்துக்கு ஒரு முறையேனும்இரண்டு நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு தரவேண்டும். கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுத்தாலே, தலைவலி வராமல் தடுக்க முடியும்.

சைனஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு, காலை எழுந்ததும் தலைபாரம் ஏற்படும். நேராக நின்றால் தலை வலிக்காதுஆனால், குனிந்தால் தலைவலி ஏற்படும். சைனஸ் பிரச்னையால் ஏற்படும் தலைவலி நீங்க, மாத்திரை மருந்துகளைக் காட்டிலும், அலர்ஜியைத் தவிர்ப்பதும், யூகலிப்டஸ் தைலம் கலந்து, ஆவி பிடிப்பதும் நல்ல பலன் தரும்.


தலைவலிக்கான தீர்வுகள்:

மூன்று  நாட்களுக்கு மேல் தலைவலி இருந்தால், மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மைக்ரேன் தலைவலி ஏற்பட குறிப்பிட்டு எந்தக் காரணங்களையும் சொல்ல முடியாது, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் பிரச்னை வந்தாலோ, மூளையில் இருக்கும் வேதியியல் ரசாயனங்கள்  சரியான விகிதத்தில் சுரக்கவில்லை என்றாலோ, மைக்ரேன் தலைவலி வரும்.

தினமும் காபி அருந்தினால் தலைவலி நிற்கிறது என்று, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் காபி அருந்திக்கொண்டே இருப்பதும் தவறு.  இது சுழற்சியாக மாறி, காபி அருந்தாவிட்டால் தலைவலி ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கிவிடும்

சிறு வயதில் இருந்தே சரிவிகித உணவை உட்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதையும், எட்டு மணி நேர முறையான தூக்கத்தையும் கடைப்பிடித்தால், எப்பொழுதுமே மலச்சிக்கல் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்து கொண்டால் தலைவலி வராமல் தடுக்க முடியும்.

தலைவலி என்பது அலட்சியப்படுத்தக்கூடிய நோய் அல்ல. உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம். மைக்ரேன் வராமல் தடுக்கக்கூடிய மருந்துகளை தகுந்த மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.


 மேற்கண்ட மூலிகைகள் மற்றும் மருந்துகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...