மாதவிலக்கு நின்ற, மாத விலக்கு நிற்கப்போகும் பெண்களுக்கான மருத்துவம்…


மாதவிலக்கு (Menopause) நின்ற, மாத விலக்கு நிற்கப்போகும் (Perimenopause)  பெண்களுக்கான மருத்துவம்…
பிரண்டை உப்பு                          Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                           Bael Fruit
 பெண் பருவமடைய ஆரம்பித்ததிலிருந்து தொடங்கும் மாதாந்திர பிரச்னையான மாதவிலக்கு முழுமையாக நின்று விடுவதற்கு "மெனோபாஸ்" என்று பெயர்.

"
மெனோபாஸ்" என்ற வார்த்தை பெண்களின் மகப்பேறு வாழ்க்கை வரலாற்றில் காணப்படும் இறுதியான அத்தியாயம். சுருங்க கூற வேண்டுமாயின் "கருப்பை" முற்றிலுமாக எடுத்துக் கொள்ளும் ஓய்வு நேரம் ஆகும்.

இந்நிகழ்ச்சி உள்ளுறுப்புகளில் நடந்தாலும், வெளிப்படையாக அறிந்து கொள்வது எப்படி?

எப்படி என்றால், வழக்கமாக வரும் மாதவிலக்கு, முற்றிலுமாக நின்று விடும் கட்டம் தான் "மெனோபாஸ்" என்று கூறப்படுவதாகும். பேருந்தில் பிரயாணம் பண்ணும்போது நிறைய நிறுத்தங்கள் வந்தாலும் சில இடங்களில் மட்டும்தான் `ஸ்டேஜ்' வருகிறது. அங்கு தான் சோதனை செய்யப்படும். அது போலவே பெண்களின் வாழ்க்கையிலும் ஒன்று உண்டு. அதுதான் இந்த மெனோபாஸ் பருவம் சிலருக்கு பெரிய போராட்டமாகி விடுகிறது.

முதலாவதாக மெனோபாஸ், இயற்கையாக வருவது உண்டு இது பொதுவாக 45-55 வயதுக்குள் வருவதாகும். இந்த வயதில், கருப்பை வழக்கமாக சுரக்கும் ஹார்மோனாகிய "ஈஸ்ட்ரோஜன்" இயற்கையாகவே, குறைந்த அளவில் சுரக்க ஆரம்பிக்கிறது. இதனால் மாதவிலக்கு முன் போல வருவதில்லை. முதலில் குறைந்த அளவு மாதவிலக்கு ஏற்பட்டு பிறகு விட்டு விட்டு மாதவிலக்கு ஏற்படும். பின் அதிக அளவு மாதவிலக்கு ஏற்பட்டு சுத்தமாக மறைந்து விடும்.

இப்படி படிப்படியாக ஒரு நிலையை அடைவது தான் இயற்கையான மெனோபாஸ் என்பது. இதில் எல்லோருக்குமே எல்லா நிலைகளும் கண்டிப்பாக காணப்படும் என்ற கட்டாய நிலையும் இல்லை. சிலருக்கு சில நிலைகள் மட்டுமே அதிகமாக தோன்றும். எதுவுமே தாங்கக்கூடிய அளவில் இருக்கும் போது இயற்கையான மெனோபாஸில் மருந்து உண்ணும் நிலை ஏற்படாது. மாறாக சில கட்டங்களில் தாங்க முடியாத மாதவிலக்கு ஏற்பட்டால், உடனடியாக நிறுத்தக் கூடிய மருந்துகளை உட்கொள்வது நல்லது.

இரண்டாவது செயற்கையான மெனோபாஸ் என்பது மற்றொன்று. இது அறுவை சிகிச்சைக்கு பின்னோ அல்லது அதிக அளவு கதிர்வீச்சுக்குப் பின்னோ ஏற்படும் மெனோபாஸ் ஆகும். ஆகவே, இந்த மெனோபாஸில், மேற்கூறியது போல பல கட்டங்கள் தோன்றாமல் திடீரென மாதவிலக்கின்மை காணப்படுதல் மட்டுமே வெளியே தோன்றும் அறிகுறியாகும். இதற்கு ஈஸ்ட்ரோஜன் மாத்திரைகளே போதுமானதாகும்.

மூன்றாவது, தவறுதலான மருந்துகளை அளவுக்கு மீறி உட்கொள்வதாலும், எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்காக சாப்பிடும் மாத்திரைகளாலும் மாத விலக்கு வருவது முற்றிலும் நின்று விடுகிறது.


மெனோபாஸின் போது ஏற்படும் பொதுவான, அதிகப்படியான கோளாறு,

1.
அதிக அளவு வெள்ளை படுதல்
2.
அதிக அளவு இரத்தப்போக்கு

இவை இரண்டுமே, வயதான நேரங்களில் மட்டுமல்லாது, மற்ற நேரங்களிலும் காணக்கூடிய கோளாறுகளாகும். வெள்ளை படுதல், தண்ணீர் போல ஒழுகி வருவது உண்டு. சிலருக்கு பால் போல , சளி போல இருக்கும். பாதி வேக வைத்த முட்டையின் வெள்ளை கரு போலவும் இருக்கும். நிறத்தை பார்க்கும் போது முதலில் வெள்ளை என்பது வெள்ளை நிறமாக இருந்தாலும், அது நாள்பட, நாள்பட சற்று மஞ்சள் நிறமாகவும், பிறகு மஞ்சள் கலந்து பச்சை நிறமாகவும் காணப்படுவதுண்டு. "மணத்தை" நோக்கும் போது புளித்த மணம், பாலாடை போன்ற மணம், மீன் நாற்றம் போன்று, இன்னும் சில தாங்க முடியாத மணங்களும் உண்டு.

மேற்கூறியவைகள், கர்ப்பப்பையில் சிறிது () அதிக அளவு வேக்காடு இருந்தாலும், பல கிருமி தொற்று இருந்தாலும், கர்ப்பப்பையில் அரிப்பு இருந்தாலும், கர்ப்பப்பையில் கட்டி இருந்தாலும், தண்ணீர் பை போல் இருந்தாலும் காணக்கூடிய கோளாறுகள். இவற்றிற்கு தகுந்த நேரத்தில், தகுந்த மருத்துவரை அணுகி, மருந்துகளை உட்கொள்ளுதல் வேண்டும்.

மேற்கூறியவைகள் பொதுவாக மெனோபாஸ், நேரத்தின் போது காணப்பட்டாலும், முட்டி வலி, பாலுணர்வு மாற்றம் போன்றவைகளும் ஏற்படுவது உண்டு. உலர்ந்த பெண் உறுப்பு பாலுணர்வு குறைந்து விடுதல் அல்லது அதிக அளவு பாலுணர்வு ஆசை ஏற்படுதல் மார்பகங்களில் வலி, மூத்திர பையில் அழற்சி சிறிதளவு உயர்ந்த இரத்த அழுத்தம் நடு முதுகெலும்பு வலி, இடுப்பெலும்பு வலி போன்றவைகள் எல்லாமே இந்த மெனோபாஸில் அடங்கும். அதனால் தான் மெனோபாஸ் என்பது பல அறிகுறிகளை ஒன்று சேர்த்து கூறப்படும் ஒரு வார்த்தையாகும்.

இந்த மெனோபாஸ் நேரத்தில் பலர் கர்ப்பப்பையில் வரக்கூடிய பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமலோ அல்லது எளிதான தீர்வை எதிர்பார்த்து மருத்துவமனைகளை அணுகும்போது அவர்களுக்கு கொடுக்கப்படும் அறிவுரை என்னவென்றால் கர்ப்பப்பையை எடுத்து விடுங்கள் என்று மிக எளிதாக நம்ப வைக்கப்படுகிறார்கள்.

பெண்களே ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள், பெண்மையின் அடையாளமே கர்ப்பப்பைதான். கர்ப்பப்பை உங்களுக்குள் இருக்கும் வரை மட்டுமே நீங்கள் ஒரு பெண், ஒரு தாய். அதை நீக்கி விட்டால் உங்களின் பெயர் என்ன?

கடவுள் நம் உடலில் எந்த உறுப்பையும் தேவை இல்லாமல் படைக்கவில்லை, ஒவ்வொரு உறுப்பிற்கும் நம் ஆயுட்காலம் உள்ள வரையில் வேலை இருக்கிறது. அதை விடுத்து நாம் பாதியிலேயே ஒரு உறுப்பை உடலை விட்டு நீக்கும் போது, நமது உடல் அதன் நிலைதன்மையை இழந்து அதன் பின் வரும் நாட்களில் பேர் சொல்ல முடியாத அளவிற்கு பலவிதமான நோய்கள் தாக்குகின்றன..

பாதியிலேயே இது போல் உறுப்புகளை கழற்றி எறியும் மருத்துவத்தையும், மருத்துவமனைகளையும் விட்டு விட்டு இயற்கையான முறையில் நம் கர்ப்பப்பையையும் ஆரோக்கியத்தையும் காப்பாற்றி கொடுக்கும் சித்த ஆயுர்வேத மருத்துவத்தை பின்பற்றுவோம்.

மேற்கண்ட பிரச்சினைகள் மட்டுமல்லாமல் ஆஸ்டியோபோரோஸிஸ் போன்ற எலும்பு தேய்மான நோய்களும் மற்றும் ஹார்மோன் சம்பந்தப்பட்ட நோய்கள், மனச்சிதைவு மற்றும் மனக்கோளாறுகள் போன்றவையும் மாதவிலக்கு நிற்றலின் தொடர்ச்சியாகும். வீட்டுவிலக்கு (மாதவிலக்கு) நின்றபின் ஏற்படும் சில உடல் மனக்கோளாறுகளுக்கான சித்த ஆயுர்வேத மருந்துகள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் நல்ல பயனளிக்கும்.

 மேற்கண்ட மூலிகைகள் மற்றும் மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...