சளியை முழுமையாக குணப்படுத்த...


சளி என்றதுமேச்சீஎன்று முகம் சுழிப்போம், ஆனால் அதன் உண்மையான பலன்கள் உங்களுக்கு தெரியுமா?

பிரண்டை உப்பு                          Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                           Bael Fruit
 


நம் உடலில் வியர்வை எப்படி கழிவுப்பொருளோ அதை போலத்தான் சளியும். நம் உடலுக்கு மிக அவசியமான ஒன்று சளி, முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுது நமது உடல் சளியை உற்பத்திக் கொண்டே தான் இருக்கும். சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், நம் வாய் , மூக்கு , தொண்டை , நுரையீரல் , இரைப்பை குடல் ஆகிய எல்லாவற்றிலும் ஒரு உட்பூச்சு கொடுத்தாற் போல் அமைந்து அவை அனைத்தையும் பாதுகாப்பு கவசம் போல பாதுகாக்கின்றன.

உங்கள் நுரையீரலையும் ஆரோக்கியத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்…

நாம் உண்மையிலேயே சளியை வெளியேற்றுவதாக, அல்லது கட்டுப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு அனைத்து நவீன மருத்துவத்தின் மாத்திரையையும், ஊசி மருந்துகளையும் (Anti-Biotic Tablets, Capsules and Injections) சாப்பிட்டு சளியை உள்ளேயே வைத்துக் கொண்டிருக்கிறோம்.
சிறிது சிறிதாக நம் உடலில் நுரையீரலில் சேர்ந்து கொண்டிருக்கும் சளியை அவ்வப்போது சாந்தப் படுத்துவதற்காக ஆரம்பத்தில் ஹால்ஸ் போன்ற மிட்டாய்களில் ஆரம்பிக்கும் பழக்கம் பிறகு இன்ஹேலர் ஆக மாறியும் சளி குறையாமல் மீண்டும் மருத்துவரிடம் போகும் போது அவர் இன்னும் அதிகப்படியாக உங்களை பஃப் அடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக்க வைத்து இன்னும் சளியை மேலும் மேலும் சேர வைப்பார்கள்.
மேற்கண்ட பழக்கங்களின் அடுத்த தொடர்ச்சி நெபுலைசர் ஆகும், இவை எல்லாவற்றின் முடிவு வென்டிலேட்டர் மெஷின் ஆகும். ஆகமொத்தம் சாதாரண இருமல் சளியாக ஆரம்பித்த விஷயத்தை ஆரம்பத்திலேயே குணப்படுத்தாமல் ஒருவரை முழுவதும் நோயாளியாக்கி அவரை சாகும் வரையில் நோயாளியாக வைத்திருப்பதே நவீன மருத்துவத்தின் சாதனையாகும்.

ஆரம்ப நிலை சளியை குணப்படுத்த…

ஆரம்ப நிலையில் சளிக்கோ அல்லது இருமலுக்கோ சாதாரண சுக்கு, மிளகு திப்பிலி, சித்தரத்தை பனங்கல்கண்டு கலந்த பாலே போதுமானது. ஆனால் இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும். குழந்தைகளும், வயதானவர்களும் துளசியை தினமும் எடுத்துக் கொண்டு வந்தால் சளியின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். தொடர்ச்சியாக துளசி எடுத்துக் கொள்ளும் போது அது தற்காலிக கருத்தடை சாதனம் போல பிள்ளைப்பேற்றை உருவாக்க விடாது, எனவே இளவயதினர் துளசியை தொடர்ந்து சாப்பிட வேண்டுமெனில் யோசித்து சாப்பிடுங்கள்.

பஃப், நெபுலைசர் அளவிற்கு நுரையீரல் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் சளி உள்ளவர்களுக்கு…

உங்களுக்கு இனிமேல் வேறு வாய்ப்பே இல்லை, நவீன மருத்துவ மருந்துகளை விட்டு விட்டு உடனடியாக சித்த, ஆயுர்வேத மருந்துகளுக்கு மாறுங்கள். அதுவே உங்கள் வாழ்நாளை நீட்டித்துக் கொள்வதற்கான ஒரே வழி…


சளி எவ்வாறு ஏன் உருவாகிறது?

சளியில் பாக்டீரியா வைரஸ்களை , நம் உடம்பு கண்டு கொள்வதற்காக Antibodies, நொதிகள் (enzymes ), புரதங்கள் (Protein ) , பல்வேறு உயிரணுக்கள் (Cells ) நிறைந்து இருக்கின்றன. இயற்கையாக விளைந்த பொருட்கள் ஜீரணம் செய்யும் சக்தி நமது உடலுக்கு உண்டு. ஆனால் ரசாயன பொருட்கள் நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ளும் போது, உடல் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் வேளையில் சளியாக உருமாறுகிறது.

தினமும் சளி வெளியேறுவதே நல்லது…

அதாவது உடலில் வியர்வை எப்படி கழிவுப்பொருளாக வெளியேறுகிறதோ அதைபோலத்தான் சளியும் ஒரு கழிவுப்பொருளாகும். ஆனால் சளி வந்தவுடன் நாம் அதனை வெளியேற்ற நினைக்காமல் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு உள்ளேயே வைக்கின்றோம். இதன் காரணமாக அது அப்படியே இறுகிப்போய் கட்டியாக மாறி நுரையீரலில் படிகிறது. இதை நம் உடலில் இருந்து வெளியேற்றவே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் உள்ளுறுப்புகள் முயற்சி செய்கின்றன. இதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது நாம் உட்கொள்ளும் உணவுகள் தான். இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு முறைகளில் சளி ஏற்படுகிறது, உடல் சூடானாலும், உடல் குளிர்ச்சியாக இருந்தாலும் சளி உருவாகும்.

உடல் சூட்டால் உருவாகும் சளி…

உடல் சூடாக இருப்பதனால் உருவாகும் சளி, மூக்கு வழியாக வெளியேறாது, தொண்டைக்கும், மூக்குக்கும் இடையே இருக்கும், வறட்டு இருமல் இருக்கும், மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த சளியை வாய் வழியாகவே வெளியேற்ற வேண்டும். அப்போது தூதுவளை எடுத்துக் கொண்டால் உடல் சூடு அதிகமாகி வறட்டு இருமல் அதிகமாகுமே தவிர சளி குறையாது. அந்த மாதிரியான நேரங்களில் நாட்டு மாதுளம் பழச்சாறு(மெல்லிய மஞ்சள் நிறத்தோலுடன் சேர்த்து) காலை 11 மணி மற்றும் மதியம் 3 மணியளவில் சாப்பிட வேண்டும். இதனுடன் நாட்டு சர்க்கரை, வெல்லம் கருப்பட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.


உடல் குளிர்ச்சியாக இருப்பதால் உருவாகும் சளி…

பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும் சளியை மூக்கு வழியாக வெளியேற்ற முடியும். இதனால் உருவாகும் சளியை வெளியேற்ற வேண்டுமே தவிர எந்த வித ரசாயன மருந்துகளோ எடுத்துக் கொள்ளக்கூடாது. இதற்கு இரண்டு மிளகு, நான்கு சீரகம் போட்டு தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் சளி வெளியேறிவிடும்.

சளி பிடித்து விட்டால் இயற்கையான முறையில் அதை வெளியேற்ற வேண்டுமே தவிர, இராசயன மருந்துகளின் மூலம் அதை நம் உடலுக்குள்ளேயே வைக்ககூடாது!!!சளித் தொல்லையிலிருந்து விடுபட சில கை வைத்தியம்…

  * சளி பிடித்திருக்கும் போது பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில்  இருந்து விடுதலைப் பெறலாம்.
  * 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்கு கொதிக்க  வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும்.
  * குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலை போக்க ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தையும் போட்டு கிண்ணத்தைச் சூடேற்றி எண்ணெயை மார்மீதும், முதுகுபுறமும் தடவ சளி, இருமல் குறையும்.
  * சிறு குழந்தைகளுக்கு சளி பிடித்து மூக்கடைத்துக் கொள்ளும்போது சுத்தமான துணி  அல்லது பஞ்சு கொண்டு சுடுநீரில் உப்புக் கலந்துதொட்டுத் துடைக்கலாம், (Eye அல்லது Ear drops பாட்டிலில் சிறிது உப்பு கலந்த நீரை மூக்கினில் இரண்டு மூன்று சொட்டுக்கள் விட்டாலும் மூக்கடைப்பு நீங்கும்.)
  * 1 தேக்கரண்டி ஏலக்காய் பொடியுடன் நெய் கலந்து சாப்பிட மார்புச் சளி நீங்கும்.
  * வல்லாரை சூரணத்தை தேன் கலந்து சாப்பிட்டு வர சளி இருமல் நீங்கும்.
  * சிறு வெங்காயம் சாறு, தேன், இஞ்சி சாறு மூன்றையும் சம அளவாக கலந்து தினமும் ஒரு  வேளை சாப்பிட வேண்டும். இரு தினங்களில் சளி நீங்கும்.
  மேற்கண்ட மூலிகைகள் மற்றும் மருந்துகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...