பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாடுகளும் அறிகுறிகளும்
பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாடுகளும்
அறிகுறிகளும்
பிரண்டை பற்பம் Pirandai Parpam
சீந்தில் சர்க்கரை Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி Bamboo Rice
வில்வம் பழம் Bael Fruit
பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாடுகளும்
அறிகுறிகளும்
கால்சியம் மனித
உடலுக்கு இன்றியமையாதது, கால்சியத்தின் பயன்பாடுகள்
மனித உடலில் அளப்பிற்கரியது, இந்த
போஸ்டில் கால்சியம் பற்றியும் அவை
எதில் அதிகம் நிறைந்துள்ளன என்பது
பற்றியும் தெரிந்துகொள்வோம்.
எலும்புகளின் உறுதிக்கும், தசைகளின் செயல்பாட்டிற்கும்
கால்சியம்
சத்தானது உடல் வளர்ச்சிக்கும், எலும்புகளின்
உறுதிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
தசைகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் அதிகம் தேவைப்படுகிறது.
கால்சியம் சத்து குறைந்தால் எலும்புகள்
பலமிழந்து போகும். வளர்ச்சி குன்றி
காணப்படும்.
இரத்தக் குழாய்கள் நன்றாக இரத்தத்தைக் கடத்த
இரத்தக்
குழாய்கள், இதயம் இவற்றின் சுருங்கி
விரியும் தன்மைக்கு கால்சியம் மிகவும் உதவுகிறது. இதனால் உடலின் பாகங்களுக்குத்
தேவையான இரத்தத்தை இரத்தக்குழாய்கள் இலகுவாக கடத்துகின்றன.
சுரப்பிகளின் செயல்பாட்டை ஊக்குவிப்பதற்கு
நாளமிலாச்
சுரப்பிகளின் செயல்பாட்டைத் தூண்டுவதற்கு கால்சியம் சிறந்த பணியாளாக செயல்படுகிறது. மேலும்
இவற்றின் சுரப்பு நீரான என்ஸைம்
உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
நரம்புகள் நன்றாக செயல்பட
நரம்புகளின்
செயல்பாட்டிற்கும், எலும்புகளின் செயல்பாட்டிற்கும் கால்சியம் சத்து இன்றியமையாதது.
இரத்தம் உறைதலிலும் கால்சியம் சத்து முக்கிய பங்கு
வகிக்கிறது.
பற்களின்
உறுதிக்கும் கால்சியம் சத்து முக்கியமானது.
அதாவது உடலின் அனைத்து செயல்
பாட்டிற்கும் கால்சியம் சத்து இன்றியமையாததாக இருக்கிறது.
பெண்களுக்கு கால்சியம் சத்துக் குறைபாடு
உடலில்
99 சதவிகித கால்சிய சத்துக்கள் எலும்புகளிலும்,
பற்களிலும் சேமித்து வைக்கப்படுகின்றன. இவை
உடலுக்கு கால்சியம் சத்து தேவைப்படும்போது கொடுப்பதுடன்
மீதமுள்ளவற்றை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையும் கொண்டுள்ளது. இது
வயதிற்குத் தகுந்தவாறு நடைபெறும்.
குழந்தைகளின்
எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் சத்து அவசியத் தேவையாகும். கால்சியம்
சத்து குறையும்போது முதுமையில் உடல் பலமிழக்கிறது.
பெண்களுக்கு கால்சியத் சத்து அவசியம் தேவையாகும். மாதவிலக்கு
முடியும் தருவாயான மெனோபாஸ் காலத்தில் அதிக அளவு கால்சியம்
சத்து குறைவு உண்டாகும். ஆனால்
இந்தக் கால கட்டத்தில் பெண்கள் அவர்கள் உடலை சரியாக கவனிக்காமல் விடும்போது எலும்புகள்
தொடர்பான பிரச்சினை இரட்டிப்பாகிறது.
கால்சியம் குறைபாட்டால்
ஏற்படும்
பாதிப்புகள்
கால்சியம்
சத்து குறைவதால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால்
எலும்புகள் பலமிழக்கின்றன. கருவில்
இருக்கும்போதே தாய்க்கு கால்சியம் சத்து குறைந்திருந்தால் பிறக்கும்
குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
கால்சியம்
உடலில் குறைவதால் இரத்த ஓட்டம் சீர்குலைகிறது. இதனால்
மயக்கம், வாந்தி, குமட்டல் போன்றவை
ஏற்படுகிறது. இரத்தக்
குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை குறைவதால் இரத்த
அழுத்தம் உண்டாகிறது. இதயத்திற்கு
சீராக இரத்தம் செல்வதில்லை.
இதனால் இதயநோய்கள் உண்டாக ஏதுவாகிறது.
தசைகள்
சுருங்கும் தன்மை குறைவதால் அடிக்கடி
தசைப்பிடிப்பு ஏற்படும். தசைகள்
இறுகாமல் தொளதொளவென மாறிவிடும்.
கால்சியம்
சத்து குறைவால் வயிற்றுப் பகுதியின் சுவர்கள் சிதைந்துவிடுகின்றன. இதனால்
உணவில் உள்ள பொருட்களை உறிஞ்சும்
தன்மை குறைகிறது. நகங்கள் வெளுத்துக் காணப்படும். பற்கள்
தேய்மானம் அடையும். பற்களில்
கூச்சம் உண்டாகும் பற்சிதைவு ஏற்படும்.
பெண்களுக்கு
ஏற்படும் மெனோபாஸ் காலத்தில் நாளமில்லாச் சுரப்பிகள் செயல்பாடு குறைவதால் உடலுக்கு அதிக கால்சியம் தேவைப்படும். இதனால்
எலும்புகளில் சேமிக்கப்பட்ட கால்சியம் சத்துக்கள் உடல் எடுத்துக்கொள்கிறது. இதனால்
கால்சியம் சத்து இழப்பு ஏற்பட்டு ஆஸ்டியோபொரோசிஸ் என்ற
நோய் தாக்குகிறது. இதனால்
பெண்கள் அதிக மூட்டு வலி,
முதுகு வலி, கை கால்
வலி , எலும்பு பலமிழப்பு போன்றவை
உண்டாகும். இதுபோல்
ஆண்களுக்கும் 50 வயதிற்கு மேல் கால்சியம்
குறைபாடு ஏற்படலாம். கால்சியம் குறைபாட்டைப் போக்க பல மருந்துகள்
தற்போது மருத்துவச் சந்தைகளில் விற்கப்படுகிறது.
ஆனால் உணவின் மூலம் இப்பற்றாக்
குறையைப் போக்கி கால்சியம் இழப்பினால்
உண்டாகும் பாதிப்புகளை நீக்கி ஆயுள் முழுவதும்
உறுதியாகவும் பலமாகவும் வாழலாம்.
கால்சியம் சத்து
நிறைந்த பொருட்கள்
பாலில்
கால்சியம் சத்து அதிகம் உள்ளது. குழந்தைகள்
முதல் பெரியவர்கள் வரை தினமும் பால்
அருந்துவது நல்லது. அதுபோல்
பாலில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், பாலாடை, நெய் முதலியவற்றிலும்
கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
முட்டையின்
வெள்ளைக்கருவில் கால்சியம் அதிகம் உள்ளது.
கீரைகளில்
அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை,
அகத்திக்கீரை, லட்சக் கொட்டைக் கீரை,
வெந்தயக் கீரை போன்றவற்றில் கால்சியம்
அதிகம் உள்ளது.
பழங்களில்
கொய்யா, பப்பாளி, சப்போட்டா, சீத்தாப்பழம், கொடிக்காய் பழம்,
அன்னாசிப்பழம், வாழைப்பழம்,
பலாப்பழம், திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு,
ஆப்பிள் இவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது. முளைகட்டிய பயறு வகைகளில் அதிகம்
உள்ளது. அதிலும் பச்சைப் பயிற்றில்
அதிக கால்சியம் உள்ளது.
நம் உடலுக்கு அவசியத் தேவையான கால்சியத்தை
பெற இன்றிலிருந்தே கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை
உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம். 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வாரத்திற்கு
இருமுறையாவது வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து தாம்பூலம் போடுவது கால்சியம் பற்றாக்குறையை
போக்குவதற்கான ஒரு வழி.
ஆனாலும் ஒரு குறிப்பிட்ட
வயதிற்கு மேல் சத்துக்களை உணவிலிருந்து நேரடியாக கிரகிக்கக்கூடிய தன்மையை நம் உடல்
இழந்து விடுகிறது. எனவே நம் உடலுக்கு நேரடியாக சென்று சேரக்கூடிய கால்சியத்தை நம் சித்த
ஆயுர்வேத மருந்துகளின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
பிரண்டை பற்பத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலின் எடையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், எலும்புகளை உறுதிப்படுத்தி
நம் உடலின் கால்சியம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.
To Buy the Herbals and also For Contact...