மூட்டு தேய்மானம், ஜவ்வு கிழிதலுக்கான மருத்துவம்

மூட்டு தேய்மானம், ஜவ்வு கிழிதலுக்கான மருத்துவம்




பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                              Bael Fruit
 



மூட்டு தேய்மானத்திற்கும், மூட்டு வலிகளுக்கும், மூட்டு ஜவ்வு கிழிதலுக்கும் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும்.

  கீழ்க்கண்ட சித்த மருத்துவ சிகிச்சையினை மேற்கொள்வதன் மூலமாக மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை முழுமையாக சரி செய்ய முடியும்.

மூட்டு வலி, மூட்டு தேய்மானம், ஜவ்வு விலகல் மற்றும் எலும்பு தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் பிரண்டை மற்றும் பிரண்டை உப்பு கண்கண்ட மருந்தாக பலனளிக்கிறது. பிரண்டை உப்புடன் மூங்கில் அரிசியும் முருங்கை கீரையும் சேர்ந்த ஒரு மருத்துவ முறையின் மூலமாக மூட்டு வலி மட்டுமல்ல, முதுகெலும்பு தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் மந்திரம் போல் வேலை பார்க்கிறது.

ஜவ்வு விலகிய மூட்டுக்களுக்கு பிரண்டை உப்பை உள்ளுக்குள் சாப்பிடுவதுடன் வெளிப்பிரயோகமாக தினமும் ஒருமுறை புதிதாக இப்போது சொல்லப்படும் கட்டை போட்டு வந்தால் மிக விரைவாக
 குணம் கிடைக்கும். 

நாட்டுக்கோழி முட்டை( வெள்ளை கரு மட்டும்) -2
உளுந்து பொடி- 1 டீஸ்பூன்
நீர்த்த சுண்ணாம்பு- 1 சிட்டிகை
ஆவாரை பஞ்சாங்கம்- 1 டீஸ்பூன்
செக்கு நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்
அத்திப் பிஞ்சு காய்ந்த பொடி- 1/2 டீஸ்பூன்
வெள்ளை வேட்டி துணி 3இன்ச் அகலம் 1.5மீட்டர் நீளம்

மேற்கண்ட அனைத்தையும் கலந்து நன்றாக அடித்து வைத்துக் கொண்டு, தூங்கச் செல்லும் நேரத்தில் அல்லது ஓய்வு நேரத்தில், தயார் செய்து வைத்த வேட்டித் துணியில் நன்றாகத் தடவி பாதிக்கப்பட்ட இடத்தில் நன்றாக சுற்றிக் கட்ட வேண்டும். இதை தினமும் தவறாமல் செய்து வந்தால் உடைந்து நொறுங்கிய எலும்புகள் கூட்ட ஒன்று சேரும், கிழிந்த ஜவ்வும் இணையும்.


 




நடக்க முடியாத நிலை :

முழங்காலில் உள்ள மூட்டு, இரண்டு பக்க எலும்புகளுக்கு இடையே பந்துபோல உருண்டுகொண்டு இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இரு எலும்புகளுக்கும் இடையே உள்ள சவ்வு சேதம் அடைவதால், மூட்டு இயங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. இது வலி, வீக்கத்தில் தொடங்கிக் கடைசியில் நடக்க முடியாத நிலையை உருவாக்கிவிடுகிறது.


காரணம் :

மூட்டு எலும்பு இணைப்பைச் சுற்றி உள்ள ஜவ்வு முற்றிலும் தேய்ந்த பிறகு, அந்தக் கிண்ணம் போன்ற அமைப்பில் இருந்து எலும்பு வெளியே வர ஆரம்பிக்கும். இதனால், மாடிப்படிகளில் ஏறினாலோ, உட்கார்ந்து எழுந்தாலோ, வலி அதிகமாக இருக்கும்.உடல் பருமன், வயது அதிகரிப்பது, அடிபடுதல், காயம், மூட்டுச் சவ்வு கிழிதல், யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகி மூட்டுகளில் படிவது, பாக்டீரியா கிருமித்தொற்று, ருமாட்டிக் நோய், காசநோய் போன்றவை முழங்கால் மூட்டுவலிக்குப் பொதுவான காரணங்கள். பொதுவாக கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டால், கட்டுப் போடுகிறோம், அதனால் அசைவு இருக்காது. ஆனால், முட்டியில் அசைவு இருந்துகொண்டே இருப்பதால், கட்டுப் போட முடியாது.


ஜவ்வு கிழிதல்:

படிப்படியாக பல காரணங்களால் ஜவ்வு கிழிவது ஒரு புறம் இருந்தாலும், விபத்துகளினாலும் பல சமயங்களில் ஜவ்வு கிழிவதும் உண்டு. ஜவ்வு கிழிதலுக்காக கொடுக்கப்படும் மருந்துகள் வெறும் வலி நிவாரணியாக மட்டுமே உள்ளன. பெரும்பாலும் அறுவை சிகிச்சை மட்டுமே இறுதி வாய்ப்பாக அளிக்கப்படுகிறது.


வேலை செய்தால் வலி அதிகம் :

சில நேரங்களில் சத்தம் உண்டாகும். காலை வேளையில் மூட்டு இறுக்கம் வரும், இது 30 நிமிடம்வரை காணப்படும். செயல்பாடுகள் தொடங்கத் தொடங்க இது சற்றே மாறும். வேலை செய்தால் வலி காணப்படும், ஓய்வெடுத்தால் வலி குறையும். நோய் முற்றிவிட்டால் ஓய்வெடுத்தாலும் வலி இருக்கும்.


முக்கியமான மூட்டு :

மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியதுதான் என்றாலும், முழங்கால் மூட்டில் ஏற்படுகிற வலியைத்தான்மூட்டுவலி' என்று பொதுவாகச் சொல்கிறோம். தொடை எலும்பின் கீழ்ப்பகுதியும் முழங்கால் எலும்பின் மேல் பகுதியும் இணைகின்ற இடமே முழங்கால் மூட்டு இது உடல் எடையைத் தாங்குகின்ற முக்கியமான மூட்டு. முழங்கால் மூட்டைத் தொட்டுப் பார்த்தால், நம் கைக்குத் தட்டுப்படுவது முழங்கால் மூட்டுச் சில்லு (Knee cap). முழங்கால் மூட்டுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக இயற்கை நமக்குக் கொடுத்திருக்கிற பாதுகாப்பு மூடி இது. இதற்குப் பின்னால் உள்ளதுதான் உண்மையான முழங்கால் மூட்டு.


மூட்டு மாற்று அறுவை சிகிச்சை :

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை : மூட்டில் தேய்மானம் மிக அதிகமாக இருந்தால், மூட்டுவலிக்கு முழுமையான தீர்வு தருவது, ‘செயற்கை மூட்டு மாற்று சிகிச்சை' ‘மூட்டு மாற்றம்' என்றதும் முழங்கால் மூட்டு மொத்தத்தையும் அப்படியே எடுத்துவிட்டு, உலோக மூட்டை அங்கு பொருத்தி விடுவதாக அர்த்தம் செய்துகொள்ளக்கூடாது. மூட்டில் குருத்தெலும்பு உள்ள மேல்தளத்தை மட்டுமே இதில் மாற்றுகிறார்கள்.


மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்னதாக நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

 #1இந்த மூட்டு வலி உங்களது அன்றாட வாழ்க்கையையே சீர்குலைப்பதாக இருக்கிறதா? சரியாக நடக்க முடியுமால், உட்கார முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? மிக முக்கியமாக வலியினால் உங்களது தூக்கம் கெடுகிறதா என்று பாருங்கள்.
 #2 மூட்டுப்பகுதி வீங்கியிருப்பதோ அல்லது ஸ்டிஃப்ஃபாக இருக்கிறதா என்று பாருங்கள். அதோடு வீக்கமோ மூட்டினை அசைக்கும் போது சத்தம் வருகிறதா என்று பாருங்கள். ஆரம்ப நிலையில் சில எளிய உடற்பயிற்சிகளை செய்வது, பிஸியோதெரபி பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதையும் தாண்டி உங்களுக்கு வலி அதிகரித்தால் மட்டும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு செல்லலாம்.


மெட்டல் :

உலோகமும் பாலிஎத்திலீனும் கலந்து தயாரிக்கப்படுகிற செயற்கை மூட்டைத் தான் உங்களுக்கு பொருத்துவார்கள். தேய்ந்த எலும்பின் அடி பாகத்தை மட்டும் எடுத்துவிட்டு புதிய இணைப்பு போடப்படும். இரு எலும்புகளும் சேரும் இடத்தில் மெட்டல் வைத்து, சவ்வுக்கு பதிலாக ஒரு வகையான பிளாஸ்டிக் வைப்பது பழைய தொழில்நுட்பம்.


புது வரவு :

தற்போது மூட்டு மாற்று சிகிச்சையில் புது வரவாக ஆக்ஸீனியம் எனும் மெட்டல்ப யன்படுத்தப்படுகிறது. முதல் நிலையில், மெட்டலில் உராய்வுகளும் கீறல்களும் உண்டாகும் ஆனால் இவற்றில் அது நடக்காது. அதனால் இது நிண்ட காலங்களுக்கு பயன் தரும்.


முற்றிலும் தவிர்க்க :

மூட்டு தேய்மானத்தை நம்மால் முற்றிலும் தடுக்க முடியாது. ஆனால் மூட்டு தேய்மானம் ஆவதை சில காலங்கள் தவிர்க்கலாம். இளம் வயதிலிருந்தே புரதச் சத்து நிறைந்த பால், பால் பொருட்கள், பருப்பு, பயறு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடர் பச்சைநிறக் காய்கறிகள், கீரைகளைச் சாப்பிட வேண்டும். தினமும் சிறிது நேரம் உடலில் சூரிய ஒளி படும்படி நிற்க வேண்டும். சூரிய ஒளி படுவதன் மூலம் வைட்டமின் டி கிடைக்கும். இது எலும்புக்கு பலம் தரக்கூடியது.


இளமையிலிருந்தே :

சிறு வயதிலிருந்தே நடைப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் மூட்டுத் திசுக்கள் பலம் பெறும். மூட்டுத் தேய்மானம் ஆவது தள்ளிப்போகும். நடக்கும்போது நம் உடல் எடையைப்போல இரண்டு மடங்கு எடையை கால் மூட்டு தாங்குகிறது. உடல் எடை அதிகரித்தால், மூட்டுக்கு அதிகப்படியான வேலை உண்டாகிறது. இதனால் மூட்டு சீக்கிரமே தேய்ந்துவிடுகிறது. எனவே, எடை சரியாக இருந்தால் மட்டுமே மூட்டுவலியைத் தவிர்க்க முடியும்.

நாள்பட்ட மூட்டு வலிகள், Rheumatoid arthritis, Arthritis, Osteoarthritis, Gout. Psoriatic arthritis முதலிய நோய்களை முழுமையாக குணப்படுத்தும் பிரண்டை உப்பு, கட்டுக்கொடி, பஞ்சகவ்யா மற்றும் சித்த ஆயுர்வேத மருந்துகளும் எங்கள் K7Herbocare-ல் கிடைக்கும்..

தொடர்புக்கு: 

K7 Herbo Care, 

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147