உடம்பு குண்டாக ஆசையா?


உடம்பு குண்டாக ஆசையா?

பிரண்டை உப்பு                          Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                           Bael Fruit
குண்டாக உணவு டிப்ஸ்...


ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள். குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்....

தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். உணவுக்குப் பிறகான இடைவேளைகளில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஐஸ்க்ரீம் மற்றும் கூல்ட்ரிங்க்ஸ் அதிகமாக சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.

கொழுப்பு  நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் சமையலில் பயன்படுத்துங்கள்.

சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள். அது உங்களை முழு வயிற்றுக்கு சாப்பிட விடாமல் செய்து விடும். வயிறு நிரம் பிய உணர்வையும் ஏற்படுத்தி விடும். கலோரி குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தொpந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரியுள்ளவற்றை சாப்பிடவும்.

சாப்பிடும் போது கூடவே குளிர்பானங்கள் குடித்தால் வயிறு அடைத்து அதிகம் சாப்பிட முடியாது, எனவே சாப்பிட்டு முடித்தவுடன் நன்கு குளிர்ச்சியாக குளிர்பானம் குடியுங்கள், அடிக்கடி டீ, காபி குடிப்பது போன்றவற்றைத் தவிருங்கள்.

நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்பிடுங்கள். அப்போது தான் பசி எடுக்கும். படுக்கச் செல்வதற்கு முன்பாக அவற்றை சாப்பிடுவது கட்டாயம் எடையைக் கூட்டும்.
நீங்கள் குறைவாகவே சாப்பிட்டுப் பழகியவரா? அப்படியானால் சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம்.

உடற்பயிற்சி செய்தால் உள்ள எடையும் போய் விடுமே என்று நினைத்துக் கொண்டு அதைத் தவிர்க்காதீர்கள்.

குண்டானவர்களுக்குத் தான் உடற்பயிற்சி என்றில்லை. ஒல்லியானவர்களும் செய்யலாம். அது அவர்களது உடல் சரியான ஷேப்பில் இருக்க உதவும். ஆனால் அளவுக்கதிகமாக, அதாவது உடல் களைப்படைகின்ற வரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். காலையிலும், மாலையிலும் ஐந்தைந்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, போரிச்சம் பழம், பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். குறைந்தது பத்து மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கிறபோது தூங்குவது இன்னும் நல்லது.

கொழுப்பு நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் சமையலில் பயன்படுத்துங்கள்.  அதே நேரம் சாப்பிடும் பொருட்கள் இரத்தத்தில் கொழுப்புச் சத்தை அதிகரிக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


கலோரி குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரியுள்ளவற்றை சாப்பிடவும்.
பொதுவாகவே, காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் குறைவான கலோரிகள் தான் இருக்கின்றன. அதற்காக அவற்றை தவிர்க்க வேண்டாம். ஏனென்றால், உடலுக்கு மிகவும் அவசியமான உயிர்ச்சத்துக்களான விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் போன்றவற்றை இழக்க நேரிடும்.
ஒரு உதாரணத்திற்கு, சர்க்கரை மற்றும் எண்ணைகளில் அதிக அளவு கலோரி உண்டு என்பதற்காக, அவற்றை பயன்படுத்தி குண்டாகலாம் என்று நினைத்தால், உடலுடன் சேர்த்து இரத்தத்திலும் கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும்.

கீழ்கண்ட முறைகளைப் பின்பற்றி குண்டாகலாம்.

1. பாலுடன், இரண்டு ஸ்பூன் தேனும், மூன்று பேரிச்சை பழமும் சேர்த்து காலை மற்றும் உறங்கச் செல்வதற்கு சற்றுமுன்பும் சாப்பிடவும்.
2. சாதத்துடன் அதிகளவு தயிரையும் சேர்த்துக் கொள்ளவும்.
3. தினசரி இரண்டு நேந்திரம் பழங்களை சாப்பிடவும்.
4. தினசரி உணவில் முட்டை சேர்க்கவும்
5. பொன்னாங்கன்னிக் கீரையை நெய்யுடன் சேர்த்து சாதத்தில் பிசைந்து வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடவும்.

குறிப்பு: உணவு உண்டவுடன் உறங்கினால், உடம்பு போடாது, தொந்தி தான் போடும். மேலும், அஜீரணக் கோளாறு, மந்தம் போன்ற குறைபாடுகள் வர வாய்ப்புண்டு.


சராசரியாக இருப்பதை விட சிறிது எடை கூட இருந்தால் நிறைய அசெளகரியங்கள் உண்டு. எனவே உயரத்திற்கு தகுந்த எடையே சிறந்தது.
மிகச்சரியான கருத்து. உயரத்திற்கு தேவையான எடையைக் காட்டிலும் கூடுதலான எடை இருந்தால், மூட்டுவலி, முதுகுவலி போன்றவையும் வரும். எனவே, உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிக்கவும்

ஒருவர் காலையிலும், மதியமும் சாப்பிடுவது அவருடைய உடல் சக்திக்கு பயன்படும். இரவு சாப்பிடுவது கொழுப்பாகவே உடலில் சேமிக்கப்படுகிறது. ராத்திரி அதிகமான உணவு சாப்பிடுங்கள், அது உங்கள் உடம்பை அதிகரிக்கச் செய்யும்.

கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள உணவுப்பொருட்களைச் சாப்பிடுங்கள். அரிசிச்சாப்பாட்டில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. ராத்திரி மூக்குமுட்ட அரிசிச் சாப்பாடு சாப்பிடுங்கள். என்ன அஜீரணக்கோளாறுக்கும் வாய்ப்புண்டு.

சுடுதண்ணீருக்கு உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் சக்தியுள்ளது, அதை அறவே தவிருங்கள்.
பழையசோறு சாப்பிட்டாலும் உடம்பு குண்டாகும்.


 மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...