பழைய சோறும், வெங்காயமும் – பலன்கள் நூறு
பழைய சோறும், வெங்காயமும் – பலன்கள்
நூறு
பிரண்டை உப்பு Pirandai Salt
சீந்தில் சர்க்கரை Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி Bamboo Rice
வில்வம் பழம் Bael Fruit
“ஒரு
நாட்டின் தட்பவெப்பத்துக்கு ஏற்ற உணவுதான் அங்கே
வாழ்கிற மக்களுக்கான சரியான உணவு. அந்த
வகையில் வெப்பம் மிகுந்த நம்
நாட்டில் காலை உணவை குளிர்ச்சியாகத்
தொடங்குவதே நல்லது. அதற்கு பழைய
சாதம் சரியான தேர்வு என்று
சொல்லலாம். பழைய சோற்று தண்ணீரை
அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தினால்
உடல் குளிர்ச்சி அடைந்து பசியைத் தூண்டும்.
இரவில் நீர் ஊறிய சோற்றை
அந்த நீரோடு அருந்தினால் ஆண்மை
பெருகும், தேகத்தில் ஒளி உண்டாகும், நோய்
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பழைய
சோற்றுடன் மோர் கலந்து சாப்பிட்டால்
உடல் சூடு, எரிச்சல் போன்றவை நீங்கும்.
செரிமான
பிரச்னைகள் இருப்பவர்கள் காலையில் முதல் உணவாக பழைய
சோற்றினை எடுத்துக்கொள்வது நல்லது. செரிமான சக்தி
கூடுவதற்கு இது உதவும். பழைய
சோறு 12 மணி நேரம் ஊறியதாக
இருக்க வேண்டும்.அப்போதுதான் முறையான நொதித்தல் ஏற்பட்டு
உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்கள்
அதிகமாகத் தோன்றும். பழைய சோற்றுக்கு சின்ன
வெங்காயம்தான் சரியான ஜோடி. சின்ன
வெங்காயம் சேர்த்து சாப்பிடும்போது பித்த, வாத நோய்கள்
நீங்கும். எனவே, பழைய சோற்றினை
4 வயது குழந்தை முதல் பெரியவர்
வரை அனைவரும் சாப்பிடலாம்.
அக்காலத்தில்
காலை உணவாக பெரும்பாலும் பழைய
சோற்றைத் தான் சாப்பிட்டார்கள். அத்தகைய
பழைய சோற்றை சமீபத்தில் அமெரிக்க
ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அந்த
ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகளைக்
கண்டு ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் பழைய சோற்றில்
எண்ணற்ற சத்துக்கள் உள்ளதாகவும், அதனை உட்கொண்டால் கிடைக்கும்
நன்மைகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
ஆரோக்கியமான
தமிழ்நாட்டு காலை உணவுகளும்... அதன்
நன்மைகளும்...
ஆனால் இக்காலத்தில் அந்த பழைய சோறு
என்னும் கஞ்சி சாப்பிடுவதற்கு வழியே
இல்லை. ஆம், தற்போது பெரும்பாலானோரின்
வீடுகளில் இரவில் கூட டிபன்
தான் சமைக்கப்படுகிறது. அப்படி இருக்க, எப்படி
பழைய சோற்றினை சாப்பிட முடியும். அதுமட்டுமன்றி,
பலரது வீடுகளில் காலையில் பழைய சோற்றுக்கு மாற்றாக
இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி,
நூடுல்ஸ் போன்றவை வந்துவிட்டதால், பழைய
சோற்றினை மறந்துவிட்டோம்.
வடித்த
சாதமே பழைய சோறு செய்வதற்கு
உகந்தது…
குக்கரில்
சமைத்த சாதத்தில் இருந்து பழைய சோறு
தயார் செய்வதையும், பழைய சோற்றினை ஃபிரிட்ஜில்
வைத்தும் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இயற்கையான தட்பவெட்ப நிலையில்தான்
பழையசோறு ஊட்டச்சத்துமிக்க உணவாக மாறும். சோற்றினை
ஊற வைக்கும்போது மண் பானையில் ஊற
வைப்பது இன்னும் நல்லது.
மண்பானையில் இயற்கையாகவே உணவின் சத்துக்களைப் பாதுகாக்கும்
தன்மை இருக்கிறது. வெப்பம் பாதிக்காமல் உணவை
குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும்’’
வைட்டமின்கள்
அதிகம் (More Vitamins)
பழைய சோற்றில் மற்ற உணவுப் பொருட்களில்
இல்லாத அளவிற்கு
சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் பி6, பி12 போன்றவை
வளமாக நிறைந்துள்ளது.
செரிமானம்
மேம்படும் (Improves
Digestion)
பழைய சோற்றில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் மற்றும்
நார்ச்சத்து உள்ளதால், அவற்றை உட்கொள்வதன் மூலம்
செரிமான பிரச்சனைகள் நீங்கி, செரிமான மண்டலம்
ஆரோக்கியமாக இருக்கும்.
நோயெதிர்ப்பு
சக்தி அதிகரிக்கும் (Immunity Power)
பழைய சோற்றில் நோயெதிர்ப்பிற்கான காரணிகள் அதிகம் உள்ளது. இவற்றை
உட்கொள்ளும் போது, அதில் உள்ள
நல்ல பாக்டீரியாக்கள், உடல் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதோடு,
உடலைத் தாக்கும் நோய் கிருமிகளை எதிர்க்கும்
வகையில் எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்கின்றன. இதனால் உடலில் அடிக்கடி
ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
முதுமை
தடுக்கப்படும் (Anti
Ageing)
தினமும்
காலையில் பழைய சோற்றினை சாப்பிட்டு
வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க
விரும்பினால், பழைய சோற்றினை காலை
உணவாக உட்கொண்டு வாருங்கள்.
எலும்புகள்
வலிமையடையும் (Bone
Strength)
முக்கியமாக
பழைய சோற்றினை சாப்பிடுவதால், இக்காலத்தில் பலரும் சந்திக்கும் எலும்பு
சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
உடல் சூடு தணியும் (Alleviates
Over Body Heat)
நீங்கள்
உடல் சூட்டினால் அவஸ்தைப்பட்டால், பழைய சோறு சாப்பிடுங்கள்.
ஏனெனில் இதனை உட்கொண்டால் உடல்
சூடு தணிந்து உடல் குளிர்ச்சியுடன்
இருக்கும்.
மலச்சிக்கல்
(Constipation)
பழைய சோற்றில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால், மலச்சிக்கல்
பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.
சுறுசுறுப்பு
(Activeness)
காலையில்
பழைய சோற்றினை உட்கொண்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன்
செயல்படலாம். குறிப்பாக சோர்வு என்ற ஒன்றையே
மறந்துவிடலாம்.
இரத்த அழுத்தம் (Blood Pressure)
தற்போது
பலருக்கும் உள்ள இரத்த அழுத்தத்தை
பழைய சோறு கட்டுப்படுத்துமாம். எனவே
இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள்,
பழைய சோற்றினை காலை உணவாக எடுத்து
வாருங்கள்.
அல்சர்
(Ulcer)
இக்கால
தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் அல்சர்
பிரச்சனையை பழைய சோறு தடுக்கும்.
இதற்கு காரணம், அதில் உள்ள
நல்ல பாக்டீரியாக்கள் தான்.
நாட்டுப் பொன்னி
அரிசி/கைக்குத்தல் அரிசி
பழைய சோறு செய்வதற்கு நாட்டுப்
பொன்னி அரிசி அல்லது
கைக்குத்தல் அரிசி தான் சிறந்தது.
ஏனெனில் இந்த அரிசியில் தான்
ஏராளமான ஊட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளது.
குறிப்பு
நம் முன்னோர்கள் எந்த ஒரு பழக்கத்தையும்
காரணமின்றி பின்பற்றமாட்டார்கள். மேலும் நம் முன்னோர்கள்
ஆரோக்கியம் என்று கூறினால் அதை
மறுக்கும் நாம், வெளிநாட்டினர் ஆராய்ந்து,
ஆச்சரியப்பட்டு கூறினால் உடனே ஒப்புக் கொள்வோம்.
இப்போது நம் பழைய சோற்றை
அவர்கள் ஆரோக்கியம் என்று கூறுகிறார்கள். இப்போதாவது
பழைய சோற்றின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த பழைய சோற்றினை
தினமும் உட்கொள்ள முடியாவிட்டாலும், வாரத்திற்கு மூன்று முறையாவது உட்கொள்ளுங்கள்.
For Contact...