இந்துப்பு பயன்படுத்தலாமா?

இந்துப்பு பயன்படுத்தலாமா?
பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                              Bael Fruitஇந்துப்பு என்பது இயற்கையாக கிடைக்கக்கூடிய ஒரு வகையான கல் உப்பு.

இந்த உப்பு தற்போது கிடைக்கக்கூடிய கடல் உப்பைக் காட்டிலும் சற்றே விலை உயர்ந்தது. சந்தையில் கிடைக்கக்கூடிய உப்பு அயோடைஸ்டு செய்யப்பட்டது. ஆனால் இந்துப்பு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய குறைந்த உப்புத்தன்மை கொண்ட சுத்தமான துகள்களைக் கொண்ட உப்பாகும். கடலுப்பைக் காட்டிலும் இவ்வுப்பில் 92 வகையான தாதுப்பொருட்கள் இதனுள்ளே அடங்கியிருக்கிறது. ஆகையால் அன்றாட சமையல் பணிகளில் இவ்வுப்பை உபயோகப்படுத்தினால் கடலுப்பினால் ஏற்படும் உடல் உபாதைகளைத் தடுக்கலாம், உதாரணத்திற்கு கடல் உப்பினால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், கண் வீங்குதல் போன்ற உபாதைகளைத் தவிர்க்கலாம். மேலும் இந்துப்பு உடம்பைக் குளுமையாகவும், ஜீரணத் தன்மையை அதிகப்படுத்துதல், நெஞ்சு எரிச்சல், வாயு சம்பந்தமான உபாதைகளைத் தவிர்க்கலாம். உடல் எடையைக் குறைக்கவும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் உடல் அழகைப் பாதுகாப்பதற்கும் இந்துப்பு உபயோகப்படுகிறது.

ஆரோக்கியத்திற்கு இந்துப்பின் பயன்கள்

இயற்கையாகவே நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும். அதிக வெப்பத்தால் சூடுபடுத்தப்பட்டு உப்பிலுள்ள சத்துக்களை இழக்காமல் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தவொரு செயற்கை தனிமங்களும் இல்லாமல் நம் உடம்பில் காரத்தன்மையை ஏற்படுத்துகிறது.

எடை குறைதல்

நம்பினால் நம்புங்கள். இந்துப்பு உங்கள் எடை குறைப்பிற்கும் உபயோகமாக இருக்கும். உணவு ஜீரணமாவதற்கு தேவையான ஜீரண சுரப்பிகளை தூண்டிவிட்டு உணவு வேகமாக ஜீரணமாவதற்கு உபயோகமாகிறது. கடல் உப்பினால் ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் எடை கூடுதலை இந்துப்பினால் தவிர்க்க இயலும்.

உப்புக்குளியல்

இந்துப்பை உடம்பில் தடவி வைத்துக் குளிப்பதன் மூலம் வறண்ட சருமம் மற்றும் தோல் அரிப்பை சரி செய்ய முடியும். இந்துப்பு சருமத்துவாரங்களைத் திறந்து சருமத்தை மிருதுவாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும்.

ஆஸ்த்மா

இந்துப்பு நுரையீரல் மற்றும் மூச்சுக் குழாய்களில் ஏற்படும் கோளாறுகளை குறைக்க உதவுகிறது.  மார்புச் சளி உருவாவதைத் தடுத்து சுவாசத்தை எளிதாக்குகிறது.

இதய நலம்

இந்துப்பை சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் நீருடன் சேர்த்து பருகி வந்தால் அதிக கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பையும் சரி செய்கிறது. இந்துப்பு இரத்த நாளம் சுருங்குதல் மற்றும் இதய அடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றை தடுக்க உதவுகிறது.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் இருப்பவர்கள் இந்துப்பை தங்களது உணவில் அத்தியாவசியமாக சேர்ப்பதன் மூலம் உடலில் சரியான அளவில் இன்சுலின் உற்பத்தியாகி சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும்.

சதைப்பிடிப்பு
உடல் தசைகள் சரியாக இயங்குவதற்கு பொட்டாசியம் ஒரு அத்தியாவசியமான தாதுப் பொருளாகும். மேலும் இந்துப்பில் உள்ள பொட்டாசியம் மற்ற உணவிலிருந்து சத்துக்களை உடம்பு எடுத்துக் கொள்ள உதவுகிறது.

மன அழுத்த நோய்
மன அழுத்தத்தை குறைத்து மனம் லேசாகவும் சந்தோஷமாகவும் உணர செரோடனின், மெலோடனின் என்ற இரண்டு ஹார்மோன்கள் தேவைப்படுகிறது. இந்துப்பு இவ்விரு ஹார்மோன்களை சரியான அளவில் சீர்படுத்தி மன அழுத்த நோய்களை வரவிடாமல் பாதுகாக்கிறது.


தொடர்புக்கு...
For Contact...