கல்லீரல் வீக்கம்
கல்லீரல்
வீக்கம்
பிரண்டை உப்பு Pirandai Salt
சீந்தில் சர்க்கரை Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி Bamboo Rice
வில்வம் பழம் Bael Fruit
நமது உடல் உள்ளுறுப்புக்களிலே
மிகப்பெரிய உறுப்பாகும். மிகப்பெரிய சுரப்பியாகவும்
கல்லீரல் திகழ்கிறது. உடலின் உள் புறத்தை
கட்டுப்படுத்திச் சமன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை
கல்லீரல் செய்கிறது, வளர்சிதை மாற்றங்களினால் உண்டாகும் கழிவுகளை (Toxins)
வெளியேற்றுதல், புரதத் தொகுப்பு மற்றும்
செரிமானத்திற்கு தேவையான என்சைம்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பணிகள்
கல்லீரலில் நடைபெறுகின்றன.
வளர்சிதை
மாற்றம், கிளைக்கோஜன்(Fat) சேமிப்பை முறைப்படுத்துதல், வாழ்நாள் முடிந்த இரத்தச் சிவப்பணுக்களை
அழிக்கும் வேலை மற்றும் ஹார்மோன்
உற்பத்தி ஆகியவற்றிலும் கல்லீரலின் பங்கு
முக்கியமானது. கல்லீரல் ஒரு சுரப்பியாகும். ஒரு
துணை செரிமான சுரப்பியாக கல்லீரல்
பித்தநீரை உருவாக்குகிறது, கொழுப்புத் திசுக்களின் செரிமானத்திற்கு உதவுகிறது. பித்தப்பை, கல்லீரலின் கீழ் அமைந்திருக்கும்
ஒரு சிறிய பையாகும். கல்லீரலில்
உற்பத்தி செய்யப்படும் பித்தநீர் (Bile) இங்கு சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
கல்லீரல் பொதுவாக 500க்கும் மேற்பட்ட வேலைகளைச்
செய்வதாக சொல்லப்படுகிறது.
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு விதமான முக்கியமான
வேலைகளைச் செய்வது கல்லீரலேயாகும். அதில்
குறிப்பிடத்தக்கது உடலில் சேரும் டாக்ஸின்களை
வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான
பித்த நீரை சுரப்பது ஆகும்.
எனவே கல்லீரலில் சிறு பிரச்சனை என்றாலும்
கூட, அதனால் உடலின் பல்வேறு
செயல்பாடுகள் பாதிக்கப்படும். அதிலும்
கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்ற
விட்டால், உயிரைக் கூட இழக்க
நேரிடும்.
எனவே கல்லீரலில் பிரச்சனை இருந்தால் தென்படும் அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கால்கள்
வீங்குவது
கல்லீரல்
சரியாக செயல்படாமல் இருக்கும்போது, கால்களில் லேசாக வீக்கம் அவ்வப்போது
ஏற்படும். எனவே திடீரென்று கால்களில்
வீக்கம் ஏற்பட்டால், உடனே மருத்துவரை சந்திக்கவும்.
மஞ்சள்
காமாலை
எப்போது
ஒருவரின் தோல் மற்றும் கண்கள்
மஞ்சள் நிறத்தில் இருக்கிறதோ, அவருக்கு மஞ்சள் காமாலை காரணமாக
பித்தநீர் தேங்கியுள்ளது என்று அர்த்தம்.
வயிற்றில்
உப்புசம் மற்றும் வலி
கல்லீரலில்
கட்டிகளானது அவ்வளவு சீக்கிரத்தில் வராது. கல்லீரல்
தீவிரமாக பாதிக்கப்படும் போதுதான், கல்லீரலில் கட்டிகள் உருவாகும். உங்கள் கல்லீரலில் கட்டிகள்
இருந்தால், வயிற்றில் வலது பக்கத்தில் அடிவயிறுக்கு
சற்று மேலே வலி எடுப்பதோடு,
வயிறு வீக்கத்துடனும் காணப்படும்.
வாந்தி,
சோர்வு, காய்ச்சல்
கல்லீரலை
வைரஸ் தாக்கும் போது உருவாவது தான்
ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் அழற்சி.
உங்களுக்கு கல்லீரல் அழற்சி இருந்தால், வாந்தி,
சோர்வு, காய்ச்சல், மயக்கம், குளிர் போன்றவை அடிக்கடி
ஏற்படும்.
தலைச்சுற்றல்
சரக்கு
பிரியராக இருந்தால், விரைவில் கல்லீரல் பாதிக்கப்படும். ஆல்கஹால் அதிகம் பருகி கல்லீரல்
பாதிக்கப்பட்டிருந்தால், தலைச்சுற்றல் மற்றும் குழப்பம் அடிக்கடி
ஏற்படும்.
குமட்டல்
கல்லீரல்
சரியாக இயங்காமல் இருந்தாலும், குமட்டல் ஏற்படக்கூடும். எனவே உங்களுக்கு அவ்வப்போது
குமட்டல் ஏற்பட்டால், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.
அடர்ந்த
நிறமுள்ள சிறுநீர்
கல்லீரலில்
பிரச்சனைகள் இருப்பின், உங்கள் சிறுநீர் அடர்
மஞ்சள் நிறத்தில் வெளிவரும். எனவே இந்த நிலையை
நீங்கள் சந்திக்க நேர்ந்தால், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.
சோர்வு
நாள்பட்ட
சோர்வு கூட கல்லீரல் பிரச்சனைக்கான
அறிகுறியே. ஆகவே உங்களுக்கு அடிக்கடி
சோர்வு ஏற்பட்டால், மருத்துவரை சந்தித்து முறையான பரிசோதனையை மேற்கொண்டு,
சரியான காரணத்தைக் கண்டறியுங்கள்.
கல்லீரல்
வீக்கத்தை உணவு முறைகளினாலும் சாதாரண
வீட்டு மருந்துகளினாலும் எவ்வாறு சரி செய்வது
என்று பார்க்கலாம்…
உணவில்
அதிகமான காரம் சேர்ப்பது, கெட்டுப்போன
எண்ணெய் பொருட்கள், நேரம் தவறி சாப்பிடுவது,
இரவு நேரத்தில் அதிக நேரம் விழித்திருப்பது
அல்லது Night shift-களில் Regular ஆக வேலை பார்ப்பது
போன்றவற்றால் உடல் உஷ்ணமாகி கல்லீரல்
கெட்டுப் போகிறது. மது அருந்துவது, நீரில்
கலந்து வரும் கெமிக்கல் மற்றும்
கிருமிகள் போன்றவற்றால் ஈரல் கோளாறு ஏற்படுகிறது.
எளிதில் கிடைக்க கூடிய சுக்கு,
மிளகு, சீரகம், பப்பாளி, வெங்காயம்
போன்றவை கல்லீரலை சரி செய்யும், நோயை
தடுக்கும் மருந்தாக அமைகிறது.
பப்பாளியை
பயன்படுத்தி கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் மருந்து
தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பப்பாளி,
சீரகம். பப்பாளி பழத்தை பசையாக
அரைத்து, 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும்.
இதனுடன் அரை ஸ்பூன் சீரகப்பொடி
சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு
கொதிக்க வைக்கவும். இதை வாரம் ஒருமுறை
எடுத்து கொண்டால் கல்லீரல் பாதிப்பது தடுக்கப்படும். மஞ்சள் காமாலையின் அளவும்
குறையும்.
பரவுவதினால்
வரும் மஞ்சள் காமாலைக்கு இது
மருந்தாகிறது. ஈரல் வீக்கத்தை குறைக்கிறது. கல்லீரல் பலப்படுவதுடன்
மேலும் நன்றாக
செயல்படவும் செய்யும். பப்பாளியில் உள்ள வேதிப்பொருள், உடலுக்கு
பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
வெங்காயத்தை
கொண்டு கல்லீரலில் ஏற்படும் கொழுப்பை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். சின்ன
வெங்காயத்தை தோல்நீக்கி பசையாக அரைத்து ஒரு
ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன்
மிளகுப் பொடி சேர்க்கவும். ஒரு
டம்ளர் நீர் விட்டு கொதிக்க
வைக்கவும். இதை வடிகட்டி குடித்தால்
கல்லீரலில் உள்ள கொழுப்பு குறையும்.
இந்த கசாயத்துடன் சுவைக்காக உப்பு, சர்க்கரை சேர்க்க
கூடாது. ரசாயன மருந்துகளால் கல்லீரல்
கெட்டு மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.
கல்லீரலை பாதுகாக்கும் மருந்தாக வெங்காயம், மிளகு செயல்படுகிறது.
நாவல் பழத்திலிருந்து கல்லீரல் வீக்கத்திற்கான மருந்து தயாரிப்பது எப்படி
என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: நாவல்பழம்,
சுக்குப்பொடி. நாவல் பழத்தின் சதை
பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும். இதனுடன், கால் ஸ்பூன் சுக்குப்பொடி
மட்டும் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு
கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஒரு
மாதம் குடித்து வந்தால், கல்லீரல் வீக்கம் குறைய ஆரம்பிக்கும்.
கல்லீரல்
பிரச்னைகள் வராமல் தவிர்க்க அசைவ
உணவுகள், காரம் ஆகியவற்றை அளவுடன்
எடுத்துக்கொள்வது அவசியம்.
கல்லீரல் வீக்கத்தை
முழுமையாக சரி செய்ய சித்த ஆயுர்வேத மருந்துகளை IMPCOPS Store-களில் வாங்கி பயன்படுத்தி
ஆரோக்கியம் பெறுங்கள்.
சித்த மருந்துகள்
1.
அன்னபேதிச்
செந்தூரம் நெ.2
2.
அயச்
செந்தூரம்
3.
அய
பிருங்கராஜ கற்பம்
4.
அயக்காந்தச்
செந்தூரம்
5.
ஆமை
ஓட்டு பற்பம்
6.
ஆறுமுகச்
செந்தூரம்
7.
காந்தச்
செந்தூரம்
8.
கரிசாலை
லேகியம்
9.
லோக
மண்டூரச் செந்தூரம்
10. மாதுளை மணப்பாகு
11. மண்டூரச் செந்தூரம்
12. மண்டூராதிக் குடிநீர்
ஆயுர்வேத மருந்துகள்
1.
சிஞ்சாதி
லேஹ்யம்
2.
தாத்ரீ
லோஹம்
3.
குட
பிப்பலீ
4.
காந்த
வல்லப ரஸ
5.
க்ஷீர
பிப்பலி
6.
குமார்யாஸவ
7.
ஸப்தாம்ருத
லோஹம்
8.
சிலாஜத்வாதி
லோஹம்
9.
சோதாரி
மண்டூர
10. ஸூதிகாபரண ரஸ
11. ஸூராக்ஷார காஸீஸ பஸ்ம
12. தாப்பாதி லோஹம்
யுனானி மருந்துகள்
1.
அனேஷ்தாரு
லுலூயி
2.
அனேஷ்தாரு
ஸாதா
3.
தவா-உல்-குர்கும்
4.
ஜவாரிஷ்-எ-ஆம்லா
லுலூயி
5.
ஜவாரிஷ்-எ-ஆம்லா
ஸாதா
6.
ஜவாரிஷ்-எ-அனாரைன்
7.
ஜவாரிஷ்-எ-மஸ்தகி
ஸாதா
8.
ஜவாரிஷ்-எ-ஸ்ஃபர்ஜலி
முஸ்-ஹில்
9.
ஜவாரிஷ்-எ-தபாஷீர்
10. மாஜூன்-எ-தபீத்-உல்-வர்த்
11. மாஜூன்-எ-ஸங்கதானா முர்க்
12. குர்ஸ்-எ-ஜரிஷ்க்
13. ஷர்பத்-எ-பூஸூரி மோததில்
14. ஷர்பத்-எ-தீனார்
மேற்கண்ட மருந்துகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...