இம்பூரல்

 இம்பூரல்


மனிதர்களுக்கு நன்மை தருவதற்காக வளரும் அற்புத செடி ஒன்று எது தெரியுமா?
 பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்              Bael Fruit

சிறுவேர் என்று அழைக்கப்படும் சிறிய இலைகளையும், வெண்ணிற சிறு மலர்களையும் கொண்ட செடி, தானே வளரும் தன்மைகொண்டது. தமிழ்நாட்டில் மழைக்காலங்களில், அனைத்து இடங்களிலும் வளரும் தன்மையுள்ளது.

இலை,வேர் உள்ளிட்ட செடியின் அனைத்து பாகங்களும் மனிதர்க்கு பலன்கள் தரக்கூடியது. இம்பூரல் செடி உடலின் இரத்த வெளியேற்றத்தைத் தடுத்து, உயிரைக் காக்க வல்லது. நெஞ்சுச்சளியையும், பெண்களின் மாதாந்திர துயரத்தையும் சரியாக்கி, அவர்களுக்கு மன அமைதியையும், உடல் வலிமையையும் அளிக்க வல்லது, இம்பூரல் செடி.பண்டைக்காலத்தில், இதன் வேர்களில் இருந்து சிவப்பு நிறச்சாயங்கள் எடுக்கப்பட்டு, விலை உயர்ந்த துணி வகைகளில், சிவந்த வண்ணம் கொண்டு செய்யப்படும், கலைநயமிக்க அலங்கார வேலைகளில் அவை பயன்பட்டன.
அற்புத மூலிகை இம்பூரல், இரத்தப் போக்கை தடுப்பதால் தான், பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. இம்பூரல், நாட்டு மருந்து கடைகளில், சித்த, ஆயுர்வேதத் தயாரிப்பாக, மாத்திரை வடிவில் கிடைக்கின்றன.

ரத்தப் போக்கு :

சிலருக்கு என்ன காரணம் என்று தெரியாமல், வாயிலிருந்து இரத்தம் வரும், இது மிகுந்த மன உளைச்சலையும் அச்சத்தையும் தரும், இந்த இரத்தப் போக்கினை தடுத்து நிறுத்த, இம்பூரல் வேர்களை அரைத்து, தண்ணீரில் இட்டு காய்ச்சி, பருகி வர, மிகுந்த வேதனை தந்த, இரத்தம் வெளியேறுவது நின்று விடும்.
இதைப்போல பெண்களின் மாத விலக்கு சமயத்தில், சிலருக்கு இரத்த வாந்தி, அதிக இரத்த போக்கு காணப்படும், இந்த இரத்த வெளிப்பாட்டை சரியாக்க, இம்பூரல் செடியின் இலைகளை அரைத்து, சிறிதளவு எடுத்து, தினமும் இருவேளை, பாலில் கலந்து பருகி வர, இரத்த வெளியேற்றம் யாவும், நின்றுவிடும், உடலும், தளர்வு நீங்கி, புத்துணர்வாகும்.


மாதவிடாய் :

சிலருக்கு மாத விலக்கின் போது, வேறு விதமான பாதிப்புகள் ஏற்படலாம், அதிக வலி, மிக அதிக களைப்பு மற்றும் சோர்வு ஏற்படலாம், இவற்றை சரிசெய்ய, இம்பூரல் இலைகளை எண்ணையில் இட்டு சற்று வதக்கி, அதில் வறுத்த உளுத்தம்பருப்பு, மிளகு இவற்றுடன் இந்துப்பு சேர்த்து நன்கு அரைத்தபின், எலுமிச்சை சாறு சேர்த்து, சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வர, மாத விலக்கின் போது ஏற்படும் துயரங்கள் யாவும் விரைவில் வில கிவிடும்.


எரிச்சல் :

சிலருக்கு உடல் சூடு மற்றும் வேறு பாதிப்புகளின் காரணமாக, உடலில் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தாங்க முடியாத எரிச்சல் ஏற்படும், இதை சரி செய்ய, இம்பூரல் இலைகளை தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து, அதை சாறெடுத்து, அந்த இலைச்சாற்றினை உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் எரிச்சல் தோன்றும் இடங்களில் தடவி வர, எரிச்சல் தந்த எரிச்சல் எல்லாம், விரைந்து நீங்கி விடும்.


நெஞ்செரிச்சல்:

சிலருக்கு சுவாச பாதிப்பு மற்றும் உணவுப்பாதை கோளாறுகளால், நெஞ்சு எரிச்சல் ஏற்படும், இதை சரி செய்ய, இம்பூரல் இலைச்சாற்றை சிறிதளவு பாலில் கலந்து, நாட்டுச்சர்க்கரை சேர்த்து, பருகி வர வேண்டும்.


இருமலுக்கு :

அதிக இருமல் பாதிப்பு உள்ளவர்கள், இம்பூரல் வேர்ப்பொடியுடன், சிறிது மிளகுப்பொடி கலந்து, தினமும் இருவேளை, மாத்திரை போல உட்கொண்டு வர, இருமல் பாதிப்புகள் விலகி விடும்.
தொடர்ந்து இருமி, இருமல் தொல்லையால் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு, வீடுகளில் உறங்கும் மற்றவர்களின் உறக்கத்தையும் கெடுக்கும் இந்த இருமலை சரிசெய்ய, இம்பூரல் இலைகள் மற்றும் வல்லாரை இலைகளை எடுத்து, நன்கு கசக்கி, அரை லிட்டர் தண்ணீரில் இட்டு, மூன்றில் ஒரு பங்கு அளவு நீர் சுண்டும் வரை நன்கு காய்ச்சி, அந்த நீரை, தினமும் இரு வேளை பருகி வர, அனைவரையும் அச்சுறுத்திய இருமல், வந்த இடம் தெரியாமல், மறைந்து விடும்.


அலர்ஜி :

ஒவ்வாமை மற்றும் சுவாச பாதிப்பால் ஏற்படும் சளித்தொல்லைகள் விலக, உலர்ந்த இம்பூரல் வேர்களை சிறிதளவு எடுத்து பொடி செய்து, அந்த பொடியை சிறிதளவு அரிசி மாவில் கலந்து, மாவு அடை போல, தோசைக்கல்லில் இட்டு சாப்பிட்டு வர, மூச்சு இரைப்பு, உள்ளிட்ட சளித்தொல்லைகள் சரியாகிவிடும்.


காச நோய்கள் :

இம்பூரல் இலை, கல்யாண முருங்கை இலை, மற்றும் முசுமுசுக்கை இலை இவற்றை சம அளவு எடுத்து, புழுங்கல் அரிசியை ஊற வைத்து, அதில் சேர்த்து, தோசை போல சாப்பிட்டு வர, சளித்தொல்லைகளால் காச வியாதிகள் வரும் வாய்ப்புகளை விலக்கி, உடலை வியாதிகளின் பாதிப்பில் இருந்து காக்கும்.
மேற்கண்ட தகவல்களின் மூலம், இம்பூரல் செடியின் வேர், இலை போன்ற பாகங்கள் மனிதர்க்கு அளிக்கும் நன்மைகளை, நாம் அறிந்தோம்.
இனி, தற்காலத்தில், இம்பூரல் மருந்துகளின் அதி அற்புத உயிரைக்காக்கும் சக்தியைப்பற்றி, நாம் அறியலாமா?
இன்றைய கால கட்டத்தில், நவீன வளர்ச்சிகள் அதிகரித்து, மனிதரின் தேவைகள் எல்லைகள் இல்லாமல், சென்று கொண்டிருக்கின்றன. எல்லையில்லாமல் ஆசைகள் இருந்தாலும், அதை அனுபவிக்க, நல்ல உடல் நிலை அவசியம் இல்லையா?, இந்த ஆசைகள் பேராசைகள் ஆக மாறிப்போனதன் விளைவுகளாக, சுற்றுச்சூழல் சீர் கெட்டு, எங்கெங்கும் மனிதரை அச்சுறுத்தும் வியாதிகளின் அணிவகுப்புகள், நம் முன் நிற்கின்றன


உயிரை குடிக்கும் காய்ச்சல் :

சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் மற்றும் ஹெபடைஸ் ஏதேதோ பெயர்களில், ஏராளம் வியாதிகள். இவையாவும் இன்று, மனிதர்களை வியாதிகளில் தள்ளி, காய்ச்சல் மற்றும் உடல் வேதனைகள், உடலின் தோல் வழியே இரத்தம் வெளியேறும் மோசமான தன்மைகளின் மூலம், மனிதரை, ஆட்டிப் படைக்கின்றன. இந்த நிலை நமது தேசத்தில் மட்டும் என்றில்லை, இன்று உலகம் முழுவதும் எங்கும், இந்த பாதிப்புகளின், வீரியத்தைக் கண்டு, எல்லோரும் அதிர்ந்து போயிருக்கின்றனர்.
என்ன காரணம்? இந்த கொடிய பாதிப்புகளுக்கு அவர்களிடம் மருந்துகள் இல்லை. விண்வெளிக்கு இராக்கெட்கள் சீறிப் பாய்கின்றன, கண்டம் விட்டு கண்டம், மனிதரைக் கொத்து கொத்தாகக் கொல்லக்கூடிய அணு ஆயுத போர்க்கருவிகள் ஏராளம் உள்ளன.
மனிதரின் ஆடம்பர வாழ்வுக்கு, ஆயிரம் வழிகள் உள்ள இந்த உலகில், வியாதிகளை அழிக்க மருந்துகள் இல்லை, ஆயினும் இங்கு ஒரு தவறுக்கு மன்னிக்கவும். நாம் மருந்துகள் இல்லை என்று சொல்லியது, மேலை மருத்துவத்தை பார்த்துத்தான். அது தானே, நமது தேசத்திலும், எல்லா இடங்களிலும் பரவி உள்ளது.
ஆயினும் நம்முடைய இயற்கை மருத்துவமான, சித்த மருத்துவத்தில், அந்த கொடிய வியாதிகளுக்கு தீர்வுகள் இல்லை, என்று சொல்ல வில்லையே?
கொசுக் கடிகளினால் வரும் இத்தகைய விஷக் காய்ச்சல் வியாதிகளை சரிசெய்ய, சித்த மருத்துவத்தில், நிறைய தீர்வுகள் உள்ளன. அதில் முக்கியமான மூலிகைகளில் ஒன்று தான் இந்த இம்பூரல்.


கொசுக்களால் பரவும் காய்ச்சலுக்கு:

கடும் காய்ச்சலுடன் கூடிய சளித் தொல்லைகளை ஏற்படுத்தும் இந்த கொசுக்கடி வியாதிகளுக்கு சிறந்த உடனடித் தீர்வாக, நில வேம்பு மற்றும் துணை மூலிகைகள் கலந்த நில வேம்பு கசாயம் அமைகிறது.
அந்தக் காய்ச்சலை ஆரம்பத்தில் சரி செய்ய இயலாமல், சற்று நாள் கழித்து சித்த மருத்துவரிடம் வரும் போது, அதுவே வியாதி அதிகரித்த நிலையில், உடலில் உள்ள இரத்த குழாய்களை பாதித்து, இரத்தத்தை உடலின் தோல் வழியே சிறுசிறு கட்டிகளின் மூலம், வெளியேற்றும் மோசமான நிலைக்கு காரணமாகிறது.


ரத்தம் உறைய :

இந்த இரத்த வெளியேறுதலை, கட்டுப்படுத்தி, வியாதியை குணப்படுத்த, இம்பூரல் செடியே முழுபொறுப்பையும் ஏற்று உடலின், இரத்தம் வெளியேறுதலை தடுத்து நிறுத்தி, இரத்த நாள பாதிப்புகளை சரிசெய்து, உடலின் இரத்த ஆற்றலை சீர் செய்கிறது.