மஞ்சள் கரிசலாங்கண்ணி

மஞ்சள் கரிசலாங்கண்ணி




பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்              Bael Fruit
 

 மஞ்சள் கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:

      திருவுண்டாம் ஞானத்தெளிவுண்டாம் மேலை
      யுருவுண்டா முள்ளதெல்லா முண்டாங் குருவுண்டாம்
      பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக் கையாந்தகரைத்
      தன்னாகத் தின்றாகத் தான்.

      இதனை சமைத்து உண்டு வந்தால் இறைவன் அருளும்,அறிவின் தெளிவும், உடலுக்கு பொன் போன்ற நிறத்தையும்,கொடுக்கும். குன்மக்கட்டியை நீக்கும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி:பெரிய, மஞ்சள் நிறமான பூக்களைக் கொண்ட, கரிசலாங்கண்ணியின் வளரியல்பிலிருந்து மாறுபட்ட தாவரம். அதிகமாக இயற்கையில் வளர்வதில்லை. மஞ்சள் கரிசலாங்கண்ணி, பொற்றலை, பொற்கொடி, பொற்றலைக் கரிப்பான், பொற்றலைக் கையாந்தகரை ஆகிய பெயர்களும் மஞ்சள் கரிசாலைக்கு உண்டு.

சில இடங்களில், முக்கியமாக நீர்வளம் மிகுந்த இடங்களில் வளரும். பெரும்பாலும், வீடுகளில், அழகிற்காகவும், அதன் மருத்துவப் பயன்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றது.

மஞ்சள் கரிசாலையை உட்கொள்ள, உடலுக்குப் பொற்சாயலையும், (பொற்றலைக்கை யாந்தகரை பொன்னிறமாகக் கும்முடலை… அகத்தியர் குணபாடம்), கண்ணிற்கு ஒளியையும் தெளிவையும் உண்டாக்கும்.
பாண்டு, சோகை, காமாலை முதலியவற்றைக் கட்டுப்படுத்தும். கல்லீரல், மண்ணீரலைப் பலப்படுத்தும். பித்த நீர்ப்பெருக்கியாகவும், மலமகற்றியாகவும் செயல்படும். தோல் நோய்களைக் கட்டுப்படுத்தும். இலைகளே முக்கியமாக மருத்துவத்தில் பயன்படுகின்றன. கரிசலாங்கண்ணியின் மருத்துவ உபயோகங்கள் இதற்கும் பொருந்தும் அனைவரும் எளிதில் வளர்த்துப் பயன்பெறலாம்.

முடி கருமையடைய ஒரு பிடி இலைகளை, 200 மி.லி. தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்துவர வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் ஜலதோஷம் தீர இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, சிறிதளவு தேனுடன் குழைத்து உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.
இருமல் தணிய இலைச்சாறு ½ லிட்டர், நல்லெண்ணெய் ½ லிட்டர், ஒன்றாக்கி, சிறு தீயில் நீர் வற்றும்வரை காய்ச்சி, வடிகட்டி பத்திரப்படுத்திக் கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை, வேளைகளில் ஒருவாரம் வரை சாப்பிட்டுவர வேண்டும்.

மலச்சிக்கல் தீர இலையை, பருப்பு சேர்த்துக் கடைந்து, நெய் சேர்த்து, சாதத்துடன் பிசைந்து உட்கொள்ள வேண்டும்.


 மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...