லோட்டஸ் வாட்டர் (Lotus Water) தாமரை நீர்


லோட்டஸ் வாட்டர் (Lotus Water) தாமரை நீர்
பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
ரோஸ் வாட்டர்

லோட்டஸ் வாட்டர்
அழகாக இருக்க எல்லோருக்குமே ஆசை, அதிலும் தாமரைப்பூ போல மலர்ந்த ஈரப்பதமான முகம், ரோஜாப்பூவை போலச் சிவந்த கன்னங்கள் வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை.

ஆனால் அதற்காக நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் கெமிக்கல்கள் என்னும்போது மேற்சொன்னது போல இயற்கையான அழகு எப்படி கிடைக்கும். சற்று மெனக்கெட்டால் மட்டுமே மேக்கப் போட்டாலும், போடாவிட்டாலும் நமது முகம் இயற்கையிலேயே அழகாகத் தெரியும்.

இயற்கையான அழகை உண்டாக்கும் ஒரு சில பூக்களில் தாமரையும் ஒன்றாகும். தாமரையை ஏதாவது ஒரு விதத்தில் தினமும் முகத்திற்கு  பயன்படுத்தி வந்தால் மாசு மருவற்ற, குழந்தைகளுக்கு இருப்பதைப் போன்ற ஈரப்பதமான (Moisturized Skin) சருமத்தை பெறலாம்.

மறுபடியும் தாமரை மலர் கலந்த கெமிக்கல் அழகு சாதனப் பொருட்களுக்குச் செல்லாமல் தாமரையை அதன் சத்துக்கள் மாறாமல், எந்த ஒரு பிரிசர்வேடிவ்களும், எந்த ஒரு வேதிப் பொருட்களும் சேர்க்காமல் பயன்படுத்தும் போது மட்டுமே மேற்சொன்னது போல இயற்கையான அழகைப் பெற முடியும்.

வெளிநாட்டுப் பொருட்களின் வரவால் நம்மை விட்டுப் போன நமது பாரம்பரிய அழகுசாதனப் பொருட்களில் ஒன்று தான் தாமரை தீநீர் (Lotus Water). ரோஸ் வாட்டரைப் (Rose Water) போன்றே நமது அழகை அதிகப்படுத்துவதில், பராமரிப்பதில் மற்றும் பலவித நன்மைகளை அளிக்கிறது.

பாரம்பரிய முறை மாறாமல் (Steam Distillation Method) 100% தூய்மையான, எந்த ஒரு பிரிசர்வேடிவ்களும், எந்த ஒரு கெமிக்கல்களும் இல்லாத இயற்கையான அன்று பறித்த பூக்களை (Fresh Lotus Flower Leaves only) கொண்டு மட்டுமே தயார் செய்யப்பட்ட தாமரை நீர் (Lotus Water) தற்போது     K7 Herbo Care-ல்   கிடைக்கிறது.தாமரைப் பூவினால் தோலுக்கு என்னென்ன நன்மைகள் (Lotus Benefits For Skin)
இன்று, பலவிதமான வகையில் மாசுபாட்டால் பாதிக்கப்படுகிறோம் இதனால் சருமம் விரைவில்  வயதான தோற்றமளிப்பதிலும், பொலிவுக் குறைவாக இருப்பதிலும் ஆச்சரியமில்லை மேலும் நம்முடைய தோல் ஆரோக்கியத்தை மோசமாக்குவதற்கு, அழகுசாதனப் பொருட்களின் பயன்பாடு வேறு நம் சருமத்தை நம்மை அறியாமல் பாதிக்கிறது  இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதில் தான் இதற்கான தீர்வு இருக்கிறது சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்க அதிகமான மக்கள் மூலிகை தயாரிப்புகளை நோக்கி திரும்புவதற்கான காரணம் இதுதான் ஆரோக்கியமான சருமத்தைப் பெறப் பயன்படுத்தும் இயற்கையான மூலிகை பொருட்களில் தாமரை மலரும் ஒன்றாகும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை (Rich in Antioxidants)
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த, அருமையான மணம் கொண்ட தாமரை தோல் கண்டிஷனராக செயல்படுகிறது.

தோலுக்கு நன்கு ஈரப்பதம் அளிப்பதாக செயல்படுகிறது (Acts as a Moisturising Agent)
தாமரையின் பண்புகள் சருமத்தை தீவிரமாக ஹைட்ரேட் செய்து ஈரப்பதமாக்குகிறது மற்றும் சரும நெகிழ்ச்சி தன்மையையும் (Elasticity) மற்றும் நிறத்தை (Skin Complexion) அதிகரிக்க உதவுகிறது, வயதாவதால் உண்டாகும் மெலிதான  கோடுகளை அழிக்கிறது, பழுப்பு நிற புள்ளிகள் மற்றும் சுருக்கங்களையும் மறைக்கிறது.

மெல்லிய மற்றும் உலர்ந்த சருமத்தை குணப்படுத்துகிறது (Heals Flaky and Dry Skin)
பல அழகுசாதன மற்றும் தோல் பராமரிப்பு கம்பெனிகளின் பொருட்கள் தாமரையை அவற்றின் முக்கியமான உட்பொருட்களாக பயன்படுத்துகின்றன. இது சருமத்திற்கு உடனடி நீர்ப்பதத்தை (Moisture) வழங்குகிறது  எனவே, உங்கள் தோல் மெல்லியதாகவும் வறண்டதாகவும் நீங்கள் உணர்ந்தால், தாமரையை நீர்ப்பதத்தை உண்டாகும் தன்மையை பயன்படுத்தி அற்புதமான மற்றவர்கள் பொறாமைப்படும் மேனி பிரகாசத்தைப் பெறுங்கள்.

முகப்பரு உடைவதைத் தடுக்கிறது (Prevents Acne Breakouts)
உங்கள் எண்ணெய் பசையுள்ள சருமத்தைப் பற்றி கவலைப்படுகிறீர்களா? தாமரையை வெளிப்புறமாக பயன்படுத்தும்போது உங்கள் எண்ணெய் சருமத்தை சரிசெய்யலாம் மற்றும் முகப்பரு மற்றும் பருக்கள் உடைவதை தடுக்கலாம்

மன அழுத்தம் மற்றும் பதட்டம் நிறைந்த ஒரு நாளுக்குப் பிறகு நீங்கள் சிறிது நிவாரணம் தேடுகிறீர்கள் என்றால், தாமரையை முயற்சிக்கவும் தாமரை பெர்ஃப்யூம் தயாரிக்கப் பயன்படுகிறது, மேலும் தாமரை எண்ணெய் நறுமண சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் சருமத்தை ஓய்வளித்து, மறுபடியும் புத்துணர்ச்சியூட்டுவதற்கு சிறந்த வழியாகும்.

தாமரையினால் தலைமுடிக்கு பயன்கள் (Lotus Benefits For Hair)
இன்று, நாம் அனைவரும் நம் தலைமுடியைப் பற்றி கவலைப்படுகிறோம். முடி உதிர்தல் என்பது நாம் விரும்பாத விஷயங்களில் ஒன்று. நம் தலைமுடி பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்காக நம்மில் பலர் இயற்கையை நோக்கி ஓடுவதில் ஆச்சரியமில்லை. தாமரைப்பூ உங்களுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாத தலைமுடி பராமரிப்பை அளிக்கிறது!

முடியை கண்டிஷனிங் செய்கிறது (Conditions Hair)
இன்றைக்கு பல கண்டிஷனர்கள் தாமரை மலரின் உட்பொருள்களைக் கொண்டிருக்கின்றன. உங்கள் தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பு மற்றும் பிளவுபட்ட தலைமுடியின் முனைகளிலிருந்து (Split Hair Ends) நிவாரணம் அளிக்க தாமரையை உட்பொருளாகக் கொண்ட கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள்.

தலைமுடிக்கு பளபளப்பையும் அடர்த்தியையும் கொடுக்கிறது (Adds Volume and Natural Shine)
உடைந்த நுனிமுடிகளை சரிசெய்து, கூந்தலின் அளவு (Volume), வலிமை (Strength) மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை (Elasticity) அதிகரிக்க தாமரை உதவுகிறது. எனவே நீங்கள் தாமரை மலரை பயன்படுத்தும்போது ஆரோக்கியமான கூந்தலை பெறமுடியும்.


 மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...