மண் சிகிச்சை
மண் சிகிச்சை
பிரண்டை உப்பு Pirandai Salt
சீந்தில் சர்க்கரை Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி Bamboo Rice
வில்வம் பழம் Bael Fruit
ஜஸ்ட் என்பவர்
எழுதிய இயற்கைக்குத் திரும்புக என்ற புத்தகத்தில் மண் சிகிச்சையைக் குறித்து படித்தேன்.
மனிதனுக்கு இயற்கையான உணவு பழங்களும் கொட்டைகளுமே என்று அதன் ஆசிரியர் கூறியிருந்தார்.
பழங்கள் மாத்திரமே சாப்பிடுவது என்ற பழக்கத்திற்கு நான் போய்விடவில்லை. ஆனால், மண்
சிகிச்சை முறைகளை உடனே பரீட்சிக்க ஆரம்பித்தேன். அற்புதமான பலனைக் கண்டேன். சுத்தமான
மண்ணைக் குளிர்ந்த நீரில் நனைத்துப் பிறகு அதை மெல்லிய துணியில் நன்றாகத் தடவி அதை
எடுத்து அடி வயிற்றில் கட்டிக் கொள்ளுவது என்பது மண் சிகிச்சை முறைகளுள் ஒன்று.
என் வாழ்நாளில்
இரு முறை கடுமையான நோய்க்கு நான் ஆளாகியிருக்கிறேன். என்றாலும், மருந்து சாப்பிட வேண்டிய
அவசியமே மனிதனுக்கு இல்லை என்றுதான் நான் கருதுகிறேன். நோயுறுவோரில் ஆயிரத்துக்கு
999 பேரை சரியான பத்தியச் சாப்பாடு, நீர், மண் சிகிச்சை, இதே போன்ற குடும்ப வைத்தியமுறை
ஆகியவற்றினாலேயே குணப்படுத்திவிடமுடியும். சிறு நோய் வந்து விட்டாலும் டாக்டர், வைத்தியரிடமெல்லாம்
ஓடி எல்லா வகையான கெமிக்கல் மருந்து, பின்விளைவுகள் உள்ள மருந்துகளையெல்லாம் விழுங்கிக்
கொண்டிருப்பவர்கள் தங்கள் ஆயுளைக் குறைத்துக் கொள்ளுவது மாத்திரமல்ல உடலுக்கு எஜமானர்களாக
இருப்பதற்குப் பதிலாக அதற்கு அடிமைகளும் ஆகி விடுகின்றனர்.
இயற்கை
மருத்துவ மனைகள், அழகுக்கலை நிலையங்களில் மண் சிகிச்சை நடைபெறுகிறது. வெறும் அழகுக்காக மட்டுமின்றி,
கோடை காலத்தில் உடலின் வெப்ப நிலையைக்
குறைக்கவும் மண் சிகிச்சை சிறந்ததாகும்.
மாற்று மருத்துவ சிகிச்சை முறைகளில், இயற்கை மருத்துவ முறையில்
மண் சிகிச்சை முக்கிய இடம் பெற்று
உள்ளது. தமிழகத்திலும், கேரளாவிலும் இந்த மண் சிகிச்சை
பரவலாகி வருகிறது. மண் சிகிச்சைக்குப் புற்றுமண்
மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. புற்றுமண்ணிற்கு அடுத்தபடியாக சுத்தமான செம்மண்
சாலச் சிறந்தது. இதற்கு அடுத்தபடியாக சுத்தமான
ஆற்றங்கரையில் உள்ள மிகச் சுத்தமான
மண் பரிந்துரை செ#யப்படுகிறது. மண்
பூச்சு, மண் பற்று, மண்
புதையல், மண் குளியல் என
மண் சிகிச்சையில் பல வகைகள் உள்ளன.
உலர்ந்த வண்டல் மண், குளியலில்
பயன் படுத்தப்படுகிறது. உடலில் உள்ள நச்சுப்
பொருட்களை வெளியேற்றவும் மண் சிகிச்சை உதவுகிறது
மண் சிகிச்சை
மண்
சிகிச்சைக்கு உபயோகப்படுத்தும்
மண்ணில் கற்கள், துண்டுகள், ரசாயான
கலவைகள் கண்டிப்பாக இருக்கக்கூடாது. இயற்கையின் பஞ்ச
பூத
சக்திகளில் மண்
ஒன்று
ஆகும்.
இது
உடல்
ஆரோக்கியத்திற்கும், நோய்களை குணப்படுத்தவும் துணைசெய்யும். மண்
சிகிச்சையினால் ஏற்படும் விளைவுகள்.
இயற்கையின் ஐந்து
கூறுகளில் மண்
ஒன்றாகும். இது
நலம்
மற்றும் நோயிலும் மிகஉயர்ந்த நன்மையை ஏற்படுத்தவல்லது, மண்ணை
உபயோகப்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள்:
- சூரிய ஒளியில் உள்ள சக்திகளை உடலுக்கு பெறச்செய்கிறது.
- குளிர்ந்த மண்ணை உடலில் தடவி வெகு நேரம் உலராமல் இருப்பதன் மூலம் உடலின் வெப்பம் தணிந் து உடல் சம நிலை அடைகிறது.
- உடலில் பூசிய மண்ணுடன் நீரையும் சேர்ப்பதால் தேவையான அடர்த்தியும் , உருவமும் எளிதாக கிடைக்கிறது.
- மலிவானது எளிதாக கிடைக்கக் கூடியது.
மண்
சிகிச்சைக்கு தயார்
செய்யும் முன்பே
மண்ணை
உலர
வைத்து,
கற்கள்,
மண்ணில் கலந்துள்ள இதர
பொருட்களை பிரித்து விட்டு
பயன்படுத்த வேண்டும்.
உபயோகிக்கும் முறை
சலித்த,
மெல்லிய மண்ணை
ஈரமான
துணியில் நோயாளியின் வயிற்று அளவுக்கு ஏற்றவாறு கட்டி,
செங்கல் வடிவ
அளவில்
நோயாளியின் வயிற்றின் மேல்
வைக்க
வேண்டும். குளிர்ந்த காற்று
வீசினால் குளிர்ந்த காற்று
படாதவாறு மேலே
போர்த்த வேண்டும்.
மண்பட்டியின் பயன்கள்
- மண்பட்டியினை அடிவயிற்றில் பயன்படுத்தும் பொழுது ஜீரணகோளாறுகளை போக்குகிறது. உடல் சூட்டை குறைக்கிறது.
- மொத்தமாக தயாரிக்கப்பட்ட மண்பட்டிகளை தலையில் வைத்து பயன்படுத்தும்பொழுது அதிகப்படியான தலைவலியும் உடனடியாக சரிசெய்கிறது.
- இதை கண்கள் மீது பயன்படுத்தும் பொழுது கண் மற்றும் பார்வை பிரச்சனைகளான இமைப்படல அழற்சி, கண்விழி அரிப்பு, ஒவ்வாமை, கண்விழி அழுத்தம், கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை முதலிய பிரச்சனைகளை சரிசெய்கிறது.
முகத்திற்கு பயன்படுத்துதல்
சுத்தம் செய்யப்பட்ட மண்
30 நிமிடத்திற்கு வைத்திருப்பதனால் தோல்நிறம் அதிகரிக்கின்றது. கடும்புள்ளிகள், சிறுசிறு பொத்தல்கள் ஆகியவை
சரிசெய்யப்படுகின்றது. மேலும்
இது
கண்களுக்கு கீழ்
உள்ள
கருவளையங்களை சரிசெய்வதற்கும் பயன்படுகிறது. 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால்
முகத்தை சுத்தமாக கழுவ
வேண்டும்.
மண் குளியல்
நோயாளி
அமர்ந்த நிலையிலோ அல்லது
படுத்திருக்கும் நிலையிலோ மண்ணை
பூச
வேண்டும். இது
தோலில்
இரத்த
சுழற்ச்சியையும் வலிமையையும் அளிக்கின்றது. மண்
குளியலின் போது
நோயாளிக்கு சளிபிடிக்காதவாறு கவனமாக
கடைபிடிக்கவேண்டும். குளிர்ந்த நீரால் நோயாளியின் உடல்
முழுதும் தெளிக்க வேண்டும். நோயாளி
மிகவும் குளிர்ச்சியாக உணர்ந்தால் சுடுநீர் பயன்படுத்தலாம், உடனடியாக நோயாளியின் உடலினை
துவட்டி உஷ்ணப்படுத்திக்கொள்ளவேண்டும். 45 முதல்
60. நிமிடங்கள் வரை
மண்
குளியல் செய்யலாம்.
மண்குளியலின் பயன்கள்
- உடல் மற்றும் தோல் காயங்களை சரிசெய்வதில் மண்குளியல் சிறந்த பலனை தருகிறது.
- உடலிற்கு குளிர்ச்சியூட்ட பயன்படுகிறது.
- உடலில் உள்ள விஷத்தன்மையை நீர்க்கச்செய்து, உறிஞ்சி வெளியே எடுத்து விடுகிறது. (Detoxification). பாம்பு கடி விஷத்தை முறிப்பதற்கு கூட மண் குளியலை உபயோகப்படுத்தலாம்.
- பசியின்மை, மன உளைச்சலினால் ஏற்படும் தலைவலி, அதிக இரத்த அழுத்தம், தோல் நோய்கள் முதலியவற்றிற்கு சிறந்த முறையில் சிகிச்சை பயன்படுகிறது.
- மலச்சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு காந்திஜி மண்குளியலையே பயன்படுத்தினார்.
- மண் சிறந்த காரத்தன்மை உடைய பொருளாதலால் உடலின் வலிகளுக்கு மண்ணுடன் இஞ்சிசாறு கலந்து உபயோகப்படுத்தினால் நல்ல வலி நிவாரணியாக இருக்கும்.
மேலும் தொடர்புக்கு...
For Contact...