K7 குளியல் பொடி Formula


சோப்பிற்கு பணம் கொடுத்து நோய்களை விலைக்கு வாங்குகிறோமா?





பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்              Bael Fruit
   



தற்போது எந்த T.V. விளம்பரங்களை பார்த்தாலும் சோப் 12 விதமான நோய்களை குணப்படுத்தும் என்கிறார்கள்…

உண்மையா என்று நாம் சிந்திப்பதில்லை….

கிருமிகள் அனைத்தையும் சுத்தம் செய்யும் என்கிறார்கள்…

உண்மையா என்று நாம் சிந்திப்பதில்லை….

கிருமிகளை கழுவிய பிறகு திரும்பவும் இந்த கிருமிகள் நிறைந்த உலகத்தில் தானே வாழப் போகிறோம்…

உண்மையில் இந்த கிருமிகள் நம் உடலுக்கு நல்லது செய்கின்றனவா அல்லது கெட்டது செய்கின்றனவா?

முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த உலகத்தை விட்டு கிருமிகளை அழிக்கவே முடியாது…
மேலும் நம் உடல் தோலின் மீது இருக்கும் கிருமிகள் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவே செய்கின்றன…

நம் உடலின் மிகப்பெரிய உறுப்பே நம்முடைய தோல்தான்… இந்த தோலின் நோய் எதிர்ப்பு சக்தியை நாம் தினமும் சோப் போட்டு அழிப்பதின் மூலம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்திற்கு தினமும் அதிகப்படியான வேலை வைக்கிறோம்….
கடைசியில் சோப் ஜெயித்து நம்மை மருத்துவமனைக்கு அனுப்பி விடுகிறது…
நாமும் ஏன் எதற்கு என்று புரியாமல் அடிக்கடி நோய்களினால் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம்…
உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.

அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!

மாத மளிகை பட்டியலில் சோப்பை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம்.

சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா... கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும்.

இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பு பயன்படுத்தினார்கள். கப்பலில் மட்டும் அல்ல எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது.

சோப்பு போடுவதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம். எந்த சேறு, சகதி எண்ணெய்க்குள் புரண்டு எழுந்து வந்தோம். வணிக பெருமுதலை கும்பல் சும்மா இருப்பார்களா, ஆயிலில் புரண்டெழுந்து வேலை செய்வோர் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த சோப்பை, எல்லோரும் பயன்படுத்தும் படி பல திட்டம் தீட்டி. கிருமிகளை உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி  நடிகர்களை நடிக்க விட்டு. நம் தலையில் கட்டிவிட்டார்கள்.

இதன் மூலம் என்ன ஆனது..

சோப்பு போட்டு நம் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலத்தை நீக்கி விடுகிறோம், இப்பொழுது பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது. இதை திரும்ப சீர் செய்யவே உடல் பெரும்பாடுபடுகிறது.

நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல தோலின் மேல் இருக்கும் ஒவ்வொரு வியர்வை துவாரங்களும் வாயே. சோப்பை போடுவதன் மூலம் வியர்வை துவாரம் வழியே இரசாயன நச்சு இரத்தத்தில் கலந்து கல்லீரலை பாதிக்கிறது.

சோப்பு போடுவதன் மூலம் தோல் மூலமாக நம் உடல் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தி தடுக்கப்படுகிறது.

இன்னும் இதன் தீமைகள் பல உண்டு. சொல்லி மாளாது.

ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்டவை என லேபிளில் சொல்லிக் கொண்டாலும் உண்மையில் இந்தத் சோப்புகளில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இல்லையா என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது.  சோப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களான பொட்டாசியம் ஹைட்ராக்சைடு, சோடியம் ஹைட்ராக்சைடு, க்ளிசரின் போன்றவை இயற்கை மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுபவையே. சோடியம்-பொட்டாசியம் ஹைட்ராக்சைடு அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ள சோப்புகள் தோலில் எரிச்சலை உண்டாக்கக்கூடியவை. கேஸ்டிக் சோடா என்ற பெயரில் அழுக்குகளை சுத்திகரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

இன்று சோப்பின் வணிக சந்தை மிகப்பெரியது . வணிக நிறுவங்களுக்கு, சோப் விற்பனை மூலம் கோடிக்கணக்கான ரூபாய் இலாபம் கிடைக்கிறது . சந்தையில் பல்வேறு விதமான நிறுவனங்களின் பல்வேறு விதமான சோப்கள்
( Ayurvedic Soap , Antiseptic Soap ,etc) கிடைக்கின்றன . எப்படிப் பார்த்தாலும் சோப்பும் ஒரு வேதியல் பொருள் தான் , இயற்கையானது அல்ல . பாதிப்புகள் குறைவான சோப் குழந்தைகள் சோப் ( Baby Soap ) தான் . ஒரு சிலர் இதையும் பயன்படுத்துகின்றனர் . African anti-ageing beauty soap என்று ஒன்று உள்ளதாம் . இதைப் பயன்படுத்தினால் வயதாவதைக் குறைக்குமாம் . என்ன கொடுமை இது ? நாம் எதற்காக கவலைப்படுகிறோமோ அது சார்ந்த பொருள் (முக அழகு முதல் மூட்டுவலி வரை ) நம் தலையில் கட்டப்படுகிறது…

சோப் போட்டால் அழுக்கு போகிறது என்று சொல்பவர்கள் அடுத்த முறை குளிக்க போய் விட்டு நன்றாக துடைத்து விட்டு வந்து அதன் பிறகு உங்கள் உடம்பில் ஏதாவது ஒரு இடத்தில் நன்றாக விரலை வைத்து தேய்த்தால் அழுக்கு திரண்டு வரும், இந்த அழுக்கை உங்களுடைய சோப் ஏன் போக்கவில்லை என்று இதுவரை யோசித்தது உண்டா?
ஏனென்றால் எந்த குளியல் சோப்புமே அழுக்கை ஊற வைத்து வழவழப்பாக்கக்கூடிய வேலையை மட்டுமே செய்கின்றன, அழுக்கை நம் உடம்பை விட்டு நீக்குவதில்லை, நாம் கையை வைத்து எந்த அளவு தேய்க்கின்றோமோ அந்த அளவிற்கு மட்டும்தான் அழுக்கு நம் உடலை விட்டு செல்கிறது…

அப்புறம் சோப் எதற்கு?
நாம் நம் உடலின் வியர்வை வாடையை அல்லது கெட்ட வாடையை மறைக்க முயற்சிக்கிறோம், அதற்காகவே சோப், டால்கம் பவுடர், டியோ ஸ்பிரே இவை அனைத்தையும் உபயோகப்படுத்துகிறோம், வழக்கம் போல அவை நம் உடம்புக்கு கெடுதலை மட்டுமே செய்து விட்டு செல்கின்றன… மேலும் தற்காலிகமாக மட்டுமே உடல் வாடையை மாற்றுகின்றன…

உடல் வாடைக்கும் அழுக்கு போவதற்கும் நிரந்தர தீர்வு….
உடலில் அதிகமாக வியர்வை வாடை வருகிறது என்பவர்களும், கெட்ட வாடை, கற்றாழை நாற்றம் வருகிறது என்பவர்களும் முதலில் உணவு முறையை மாற்றுங்கள்…
கண்டிப்பாக Red Meat-ஐ தவிர்க்க வேண்டும், அதிகமான அசைவ உணவுகளும் உடலின் வியர்வை வாடையை கெட்ட வாடையாக மாற்றி விடும்…
மலச்சிக்கல் இல்லாத உணவு முறையை மேற்கொள்ளுங்கள், பழங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்….
உடலின் கற்றாழை நாற்றம் மாற ஆவாரம் பூவை மட்டும் பொடி செய்து வைத்துக் கொண்டு 2 முதல் 3 மாத காலங்கள் காலை மாலை சாப்பிட்டு வந்தால் கற்றாழை நாற்றம் அடியோடு மாறி விடும்…(மேலும் ஆவாரம் பூவின் தங்கச்சத்து நம் தோலின் நிறத்தையும் இரண்டு shade கண்டிப்பாக கூட்டும்)

ஏதாவது ஒன்றை தேய்த்து குளிக்க வேண்டும் என்பவர்களும், குளிப்பதன் மூலம் உடலுக்கு வாடை ஏற்படுத்தி தோலுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களும் கீழ்வரும் லிஸ்ட் படி பொடி அரைத்து வைத்துக் கொண்டு தினமும் தேய்த்து குளித்து வந்தால் மேனி மிருகேறும், beauty parlour செல்ல வேண்டிய அவசியமே இல்லை…

பாசிப்பயறு --         ½ கிலோ
பூலாங்கிழங்கு--       50கிராம்
ரோஜாப்பூ--           50கிராம்
செம்பருத்திப்பூ--       50கிராம்
செண்பகப்பூ--          50கிராம்
மகிழம்பூ--            50கிராம்
வெட்டிவேர்--          50கிராம்
கார்போக அரிசி--      50கிராம்
கோரைக்கிழங்கு--     50கிராம்
மரிக்கொழுந்து--       50கிராம்
தாளிசபத்திரி--        50கிராம்
திரவியப்பட்டை--      50கிராம்
புளுக்கப்பட்டை--      50கிராம்
ஆவாரம்பூ--           50கிராம்
வசம்பு--              25கிராம்
திருநீற்று பச்சிலை--   50கிராம்

மேற்கண்ட அனைத்தையும் சேர்த்து போட்டு அரைத்தால் பிறந்த குழந்தைகளில் இருந்து ஆண், பெண் அனைவரும் பயன்படுத்த முடியும்…
மேற்கண்டவற்றுடன் கஸ்தூரி மஞ்சள் 50கிராம் சேர்த்து அரைத்தால் பெரிய பெண்கள் மட்டுமே பயன்படுத்த முடியும், ஏனென்றால் கஸ்தூரி மஞ்சள் பெரியவர்களில் ஒரு சிலருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் உடல் எரிச்சலை உண்டு பண்ணும்…

சோப்பை விட்டு விட்டு சுகமாக வாழ்வோம்…