மார்பகக் கட்டிகள் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஓர் அலசல்

மார்பகக் கட்டிகள் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஓர் அலசல்
பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்              Bael Fruit
 


என்னுடைய நண்பரின் மனைவி 25 வயதில் இருப்பவர், இரண்டு குழந்தைகளும் உண்டு, இவருக்கு சளி அதிகமாக இருக்கவே இவரை மதுரையின் பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் என்னுடைய நண்பர், நண்பரின் மனைவிக்கு சளிக்காக அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு கடைசியில் பரிசோதனை முடிவில் அவருக்கு மார்பகத்தில் கட்டி உள்ளதென்றும் அவை புற்றுநோய் கட்டிகளை போல் தோன்றுகிறது எனவும் சொல்லப்பட்டு உடனடியாக மார்பகத்தில் உள்ள கட்டிகளில் இருந்து திசு மாதிரி எடுக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பப்படுகிறது.


     பரிசோதனையின் முடிவிற்காக காத்திருந்த என் நண்பர் வீட்டில் பரிசோதனை முடிவுகள் வரும் வரை ஒரே சோகமயம்தான். பரிசோதனை முடிவுகள் மார்பகக் கட்டிகள் புற்றுநோய் கட்டிகள் தான் என்று மருத்துவர்களால் உறுதிப் படுத்தப்பட்டன. அடுத்த கட்டமாக புற்றுநோயை குணப்படுத்துகிறோம் என்றும் அதற்காக கீமோதெரபி எடுக்க வேண்டும் என்றும் கீமோதெரபியில் 2,3 விதமான விலைகளில் ஊசிகள் உள்ளது, உங்கள் பொருளாதாரத்திற்கு ஏற்ற விதத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் எனவும் வாய்ப்புகள் மருத்துவமனை சார்பில் அளிக்கப்பட்டன. நண்பர் சற்று பொருளாதார வசதி உள்ளவர் என்பதாலும் இளம் வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதாலும் கண்டிப்பாக குணப்படுத்தியே ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் ரூ.50,000/- மதிப்பிலான ஊசி தேர்ந்தெடுத்து அதையே 21 நாட்களுக்கு ஒருமுறை போட ஏற்பாடானது…

     இதற்கிடையே நண்பரின் மற்ற நண்பர்கள் கொடுத்த ஐடியாவின் படி மேலும் ஒன்றிரண்டு மருத்துவமனைகளில் உறுதிப்படுத்திய பிறகு treatment-ஐ ஆரம்பிக்கலாம் என்று முடிவானது, இதன்படி மதுரையில் மற்றொரு மருத்துவமனையிலும், சென்னையில் ஒரு மருத்துவமனையிலும் திசு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை முடிவுகள் வந்தன, ஆச்சரியமளிக்கும் வகையில் சேர்ந்தாற்போல் இரண்டு பரிசோதனைகளிலும் result அனைத்தும் புற்றுநோய் இல்லை, இவை சாதாரண கட்டிகள் எனவும் முடிவுகள் வந்தன…
     இந்த சூழ்நிலையில் தான் நண்பர் தான் மிகவும் குழப்பமான மனநிலையில் இருப்பதாகவும் என்ன முடிவு எடுப்பது என்றே தெரியவில்லை எனவும், அதனால் கடைசி வாய்ப்பாக சித்த வைத்தியத்தில் புற்றுநோய்க்கு வைத்தியம் செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்திருப்பதாகவும் சொன்னார். நண்பரின் மனைவிக்கு உடனடியாக சிகிச்சை ஆரம்பித்து சித்த ஆயுர்வேத (Impcops Brand Medicines Only) மருந்துகள் 3,4 மாத காலத்திற்கு மட்டும் கொடுக்கப்பட்டு எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி அவருடைய மார்பகக் கட்டிகள் எந்த ஒரு தடயமும் இன்றி குணப்படுத்தப்பட்டன.

     இப்போது நமக்கான சந்தேகங்கள், முதல் மருத்துவமனையில் செய்யப்பட்ட பரிசோதனைகள் சரியானவையா அல்லது எந்த ஒரு காரணத்திற்காக இப்படி பரிசோதனை முடிவுகளை மாற்றி கூறுகிறார்கள் என்பதினை பற்றிய விவாதித்தினை உங்களிடமே விட்டு விடுகிறேன்…

     இப்போது மார்பகக் கட்டிகள் என்றால் என்ன என்பதையும் மார்பகக் கட்டிகள் வந்தால் என்ன விதமான சிகிச்சை மேற்கொள்ளலாம் என்பதையும் பார்க்கலாம்…

    மார்பகக் கட்டிகள். (Breast lumps)

மார்பகமானது தாய்ப்பாலினைச் சுரக்கின்ற சுரப்பிகளாலும் கொழுப்பு நார் இழையங்களாலும் ஆக்கப்பட்டது. இதில் பல வகையான கட்டிகள் ஏற்படலாம். பெரும்பாலானவை சாதாரண கட்டிகளாகவே காணப்படும். அதாவது புற்றுநோயைத் தோற்றுவிப்பதில்லை. இவ்வாறாக ஏற்படக்கூடிய சில கட்டிகளைப் பார்ப்போம்.


1. Fibroadenoma

இது பெரும்பாலும் 15—35 வயதிற்கிடைப்பட்ட இளம் பெண்களிலேயே ஏற்படுகின்றது. அங்குமிங்குமென நழுவிச் செல்லக்கூடிய தன்மையுள்ள கட்டிகளாகவே காணப்படும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எந்தவிதப் பிரச்சனையையும் ஏற்படுத்தவதில்லை. எனினும் நோயாளியின் விருப்பதற்திற்கேற்ப வெட்டியகற்றப்படலாம்..


2. Fibroadenosis

இது 30—50 வயதிற்கிடைப்பட்ட பெண்களில் பொதுவாக ஏற்படுகின்ற ஒரு பிரச்சனையாகும். ஒவ்வொரு மாதமும் பெண்ணின் உடலில் ஏற்படுகின்ற ஹார்மோன் மாற்றத்தினால் இது ஏற்படுகின்றது. மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்னர் மார்பகங்களில் திரவம் நிரம்பிய கட்டிகள் ஏற்படுகின்றது  இவை பெரும்பாலும் மார்பகத்தில் வலியினை ஏற்படுத்தும்.


3. Fat necrosis

மார்பகத்தின் மீது ஏதாவது காயங்கள் ஏற்படுமாயின் அவை அதனுள் காணப்படும் கொழுப்பானது பாதிப்படைவதனால் மார்பகத்தில் கட்டி ஏற்படுகின்றது.


4. Breast abcess (
மார்பகச் சீழ்கட்டிகள் )

இது பெரும்பாலும் பாலுட்டும் தாய்மார்களிலே ஏற்படுகின்றது. மார்பக முலையில் பால் குடிக்கும் குழந்தை அதனை உறிஞ்சும் போது காயங்கள் ஏற்படுகின்றது. இதன் பின்னர் நோய்கிருமிகள் மார்பகத்தினுள் பரவுவதனால் சீழ்க்கட்டிகள் ஏற்படுகின்றன. பாராசிட்டமால் ,நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics) என்பவற்றின் மூலமாக கட்டியினை சிகிச்சைக்கு உட்படுத்தலாம்.


5. Breast cancer (
மார்பகப்புற்றுநோய் )

கலங்கள் கட்டுப்பாடில்லாமல் பெருகுவதனால் கட்டிகள் ஏற்படுகின்றது. இக்கட்டிகள் மற்றய இடங்களுக்கும் பரவும் தன்மை கொண்டவை. இவற்றின் காரணமாக மார்பகங்களின் வடிவம் ,பருமன் , மார்பு முலைகளின் வடிவம் தோலின் வடிவம் என்பவற்றில் மாற்றம் ஏற்படுகின்றது.


மேற்படி மார்பகக்கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டால் பரிசோதனைகள் செய்வதன் மூலம் நோயினை நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதன் பின்னர் தேவையான சிகிச்சையினை வழங்குவதன் முலம் நோயினைக் குணப்படுத்திக் கொள்ளலாம்.


     எனவே மார்பகக் கட்டிகளை பார்த்தவுடன் உடனே அவை புற்றுநோய்க் கட்டிகள்தான் என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம்…
அவை சாதாரண கொழுப்புக் கட்டிகளாகவோ அல்லது தசைநார் கட்டிகளாகவோ இருக்கலாம்… இவை சாதாரணமாக குணப்படுத்தக் கூடிய கட்டிகளே, எனவே பயப்படத் தேவையில்லை…


     மேலும் ஒரு மருத்துவமனையில் அல்லது ஒரு மருத்துவர் பரிசோதனை செய்து முடிவை சொன்னவுடன் உடனடியாக அடுத்தகட்ட தீவிர சிகிச்சைகளுக்கு போகாமல் மேலும் ஒன்றிரண்டு மருத்துவர்களை பார்த்து உறுதி செய்து கொள்ளுதல் நலம்…

    
     நீங்கள் அடுத்தகட்ட தீவிர சிகிச்சைக்கு செல்வதற்கு முன் இது போன்ற மார்பகக் கட்டிகள், மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்களை முழுமையாக எந்த ஒரு ஆபரேசனோ, அதிகப்படியான செலவுகளோ இல்லாமல் முழுமையாக குணப்படுத்தக் கூடிய மருந்துகள் சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் உள்ளன… (சரியான சித்த, ஆயுர்வேத மருத்துவர்களை தொடர்பு கொண்டால் அடையாறு இம்ப்காப்ஸ் பிராண்ட் மருந்துகள் மூலம் மாதத்திற்கு வெறும் ரூ.5000/- ரூபாயில் 3, 4 மாதங்களில் ஆரம்பநிலை, இரண்டாம் கட்ட புற்றுநோயை சரி செய்ய முடியும்)


     இவை அனைவற்றிற்கும் மேலாக ஒரு நோயை பற்றிய குறைவான புரிதலே நாம் ஒரு நோயை பார்த்து அதிகமாக பயப்படுவதற்கும் ஒரு காரணம், நல்ல புரிதலுக்கு புற்றுநோயை பற்றி மருத்துவர்.கு.சிவராமன் அவர்கள் எழுதிய “உயிர்ப்பிழை” என்ற புத்தகத்தை வாங்கி படியுங்கள்.