பெண்களின் கர்ப்பப்பை பிரச்சினைகள் சரியாக...

பெண்களின் கர்ப்பப்பை பிரச்சினைகள்


பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்              Bael Fruit
 

  
பெண்களின் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் சித்த மருத்துவம்

திருமணமான ஒரு பெண் அவள் பெற்றெடுக்கும் மழலைச் செல்வங்களைக் கொண்டே மதிக்கப்படுகிறாள். கணவரிடம் குறைபாடுகள் இருந்தாலும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவது பெண் மட்டும்தான். மலட்டுத்தன்மை ஏற்படுவதற்குப் பாரம்பரியமோ, பாவச்செயலோ காரணம் அல்ல. உடற்கூற்றில் ஏற்படும் சில பிரச்சனைகளே அடிப்படையாக உள்ளன. பெண்களுக்கு ஏற்படும் மேற்கூறிய பிரச்சினை இன்று நேற்று தோன்றியவை இல்லை. இவை காலங்காலமாக இருந்து வருகின்றது. பெண்களின் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பாரம்பரியமான நாட்டுப்புற மருத்துவமுறைகள்  இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றன.

குழந்தைபேறு தள்ளிப் போவதற்கான காரணங்கள்

பெண்களுக்குப் பல்வேறு உடற்காரணங்களால் குழந்தைபேறு தள்ளிப் போகிறது. பெண்ணின் உடல் பருமனாக இருப்பது, கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோய், நீர்க்கட்டிகள், கர்ப்பப்பை சுருங்கி இருத்தல், வலுவிழந்து காணப்படுதல், வாய்ப்பாதை சீராக இல்லாமல் அடைத்திருத்தல், கிருமித்தொற்று, வெள்ளைப்படுதல், ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற கோளாறுகள் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு முக்கியக் காரணிகளாகின்றன. மேற்கண்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் பிரண்டை உப்பை 2-3 மண்டலங்கள் சாப்பிட்டு வந்தாலே போதுமானது, அனைத்து பிரச்சினைகளும் முழுவதுமாக சரியாகும்.பெண்ணின் உடல் பருமனடைவதற்கான காரணங்கள்

ஒரு பெண்ணிற்கு உடல் பருமனாக இருப்பது இயல்பான ஒன்று அல்ல. அவள் உண்ணும் உணவுகளைக் கொண்டே உடலானது அதிகளவு பருமனடைகிறது. எண்ணெய்யில் செய்த உணவுகளைச் சாப்பிடுதல், பாஸ்ட்புட் என்று சொல்லப்படும் துரித உணவுகளை உட்கொள்ளுதல், உடல் உழைப்பின்றி சோம்பேறியாக இருத்தல் போன்ற காரணங்களால் உடலானது பருமனடைகிறது. இதனால் கொழுப்புச் சத்தும் கூடிவிடுகிறது. பருமனான பெண்களின் உடலில் படியும் கொழுப்பு கர்ப்பப்பையை தனது இருப்பிடமாக்கிக் கொள்ளுகிறது. இதனால் கர்ப்பப்பையில் கொழுப்புச் சேர்ந்து அதன் இயல்பான செயல்பாடுகளைத் தடுக்கின்றது. கருவைத் தங்கவிடாமல் செய்துவிடுகின்றது. இதுவே குழந்தைபேறு தள்ளிப் போவதற்கான காரணியாகின்றது.


பருத்த உடலைக் குறைக்க, கொழுப்பைக் கரைக்கும் வழிகள்

‘உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு’ என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல அது என்றைக்கும் பொருந்தும் மெய்மொழியும் ஆகும். திருமணமான பெண்கள் கொழுப்புச்சத்துள்ள உணவுப்பொருட்கள் உண்ணுவதைக் குறைத்துக் கொள்ளவேண்டும். தினந்தோறும் காலையில் வெந்நீரில் தேன் கலந்து குடித்துவந்தால் உடலில் உள்ள கொழுப்பானது குறைய வாய்ப்புள்ளது. இஞ்சி தேவையான அளவு எடுத்து இடித்து நன்றாகப் பிழிந்து சாறு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் அரை எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து இரண்டையும் நன்றாகக் கலந்து அடுப்பில் வைத்துச் சிறிதளவு சூடேற்ற வேண்டும். பின்னர் காலை வெறும் வயிற்றில் குடித்துவந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.

சத்தான உணவுகளை உண்டு அதற்கேற்ற உடல் உழைப்பினை மேற்கொண்டாலே பெண்களின் உடலைப் பருமனடைய விடாமல், சீராக வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்துவந்தால் பெண்கள் மலட்டுத் தன்மையிலிருந்து விடுபட முடியும்.

வெள்ளைப்படுதல்

கர்ப்பப்பையில் கிருமிகளின் தொற்று, கர்ப்பப்பையின் வாய்ப்பாதை சீராக இல்லாமல் இருத்தல், கர்ப்பப்பை வலுவிழந்து காணப்படுதல் போன்றவற்றிற்கான அறிகுறியாகவே வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது. நோயின் தீவிரத்தைப் பொறுத்து துர்நாற்றத்துடன் வெளியேறும் வெள்ளைப்போக்கு, இரத்தக் கசிவுடனான வெள்ளைப்போக்கு, நமைச்சலுடன் கூடிய வெள்ளைப்போக்கு, மஞ்சள் நிற வெள்ளைப்படுதல் பெண்களுக்கு ஏற்படுகிறது.


உடல் ரீதியான மாற்றங்கள்

உடல் சோர்வாக இருத்தல், உடல் மெலிந்து காணப்படுதல், கைகால் குடைச்சல், பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுதல், உடலில் இரத்தம் இல்லாமல் இருத்தல், இடுப்பில் (குறுக்கு) வலி இருத்தல் போன்ற பிரச்சனைகள் வெள்ளைப்படுதலால் ஏற்படுகிறது.’வெள்ளை முத்தினா வெட்டை, வெட்டை முத்தினா கட்டை’ என்ற பழமொழிக்கு ஏற்ப வெள்ளைப்பாடு அதிகமானால் மரணத்திற்கே தள்ளிவிடும். மலட்டுத்தன்மை, பால்வினை நோய்கள் வருவதற்கும் வெள்ளைப்பாடு உண்டாவதே காரணமாக உள்ளது. வெள்ளைப்படுதல் அதிகமாக இருப்பவர்கள் காதி கிராஃப்ட்களில் விற்கப்படும் அசல் சந்தனக்கட்டையை வாங்கி வந்து தொடர்ந்து 3,4 நாட்கள் அதி காலை வேளையில் நன்றாக உரசி 10கிராம் அளவிற்கு எடுத்து உருண்டையாக உருட்டி தண்ணீருடன் சேர்த்து விழுங்கினால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

மருத்துவ முறைகள்

வெள்ளைப்படுதலைத் தடுப்பதற்கான நாட்டுப்புற மருத்துவ முறைகள் இங்கு விளக்கப்படுகின்றன. வெள்ளருகு கைப்பிடியளவு, ஆறு மிளகு இரண்டையும் நன்றாக அரைத்து எருமைத்தயிரில் கலந்து ஐந்து நாட்கள் காலை வெறும் வயிற்றில் குடித்து வர வெள்ளைப்படுதல் நிற்கும். கட்டுக்கொடி இலையைப் பறித்து நன்றாக அரைத்துப் பசும்பால் அல்லது வெள்ளாட்டுப் பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் ஏழு நாட்களுக்குக் குடித்துவர வெள்ளைப்படுதல் நிற்கும் மேலும் அற்றுப்போகும். மருந்து உட்கொள்ளும்போது உணவில் வறுத்த உப்பையே பயன்படுத்த வேண்டும். காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.


ஒழுங்கற்ற மாதவிலக்கு

பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிலக்கிற்கு உடலில் உள்ள ஹார்மோன்கள்தான் காரணமாக அமைகின்றன. அதாவது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோட்டோஜன் என்னும் ஹார்மோன்களின் சுரப்பில் ஏதாவது ஒன்று குறைந்தால் ஒழுங்கற்ற மாதவிலக்கு தோன்றுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.


உடல் ரீதியான மாற்றங்கள்


ஒழுங்கற்ற மாதவிலக்கின் காரணமாகப் பெண்களின் உடல் பருமனாகிறது. மேலும் முகத்தில் பருக்களும் அதிகமாகத் தோன்றும். மூன்று மாதம் அல்லது ஆறுமாதம், ஒருவருடம் வரைகூட மாதவிலக்கானது ஏற்படாமல் இருக்கும்.
மருத்துவ முறைகள்
ஒழுங்கற்ற மாதவிலக்கைச் சரிசெய்வதற்கு நாட்டுப்புற மருத்துவ முறைகள் வழக்கில் இருந்து வருகின்றன. மாவிலங்கப்பட்டை-50கிராம், வெங்காயம்-மூன்று, மிளகு-பத்து இவற்றை நன்றாக அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து அரை டம்ளர் நீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்துவந்தால் மாதவிலக்கு சீராகும்
கழற்சிக்காய் பருப்பு ஒன்று ஐந்து மிளகுகள் இரண்டையும் நன்றாக அரைத்து வெந்நீரில் கலந்து 48 நாட்கள் காலை மாலை இருவேளை குடித்துவர மாதவிடாய்க் கோளாறுகளும் மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலியும் குணமாகும். இதனுடன் கருப்பைப் புற்றும் மறைந்து கருப்பை சீராகும்.

இன்றைய உணவு முறைகளும் உடலில் உள்ள ஹார்மோன்களின் மாற்றத்திற்கு காரணமாக அமைகின்றன. பாரம்பரிய மருத்துவ முறைகளைக் கொண்டு ஹார்மோன்களைச் சமநிலைப்படுத்தி ஒழுங்கற்ற மாதவிலக்கினை சீர்செய்துகொள்ள முடியும்;.


கர்ப்பப்பைப் புற்றுநோய்க்கான மருத்துவம்


கர்ப்பப்பைப் புற்றுநோய்த் தொற்று உள்ளவர்களுக்கு அதீத வெள்ளைப்பாடு, பெரும்பாடு, ஆறாத வாய்ப்புண், அடிக்கடி வயிற்றுவலி இவற்றில் ஏதாவது ஒன்று தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். எப்பொழுதும் உடல் சூடாகவே காணப்படும். இதனால் கருத்தங்கா நிலை ஏற்படும். இதற்கான மருத்துவ முறைகள் இங்கு விளக்கப்படுகின்றன.

மருத்துவ முறைகள்

அமிர்தவல்லி இலையைப் பறித்து வந்து இரண்டு நாட்கள் நிழலில் உலர்த்தி ஒருநாள் முழுவதும் நன்றாக வெயிலில் காயவைத்து எடுத்துப் பொடியாக்கிக் கொள்ளவேண்டும். பின்பு மிளகைப் பொடிசெய்து அமிர்தவல்லிப் பொடியுடன் சேர்த்து ஒரு கரண்டியளவு அதனை வெள்ளாட்டின் பால் அல்லது பசும்பாலுடன் கலந்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குக் குடித்துவர வேண்டும். இதன் வாயிலாகக் கர்ப்பப்பையில் உள்ள புற்றுநோயின் வீரியம் குறைந்து நோய் காணாமல் போகும். கர்ப்பப்பையில் கிருமிகளின் தொற்று இருந்தாலும் இதே மருத்துவ முறையைப் பின்பற்றலாம். மருந்து உட்கொண்டு வரும்போது தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

இன்றைய நாகரீக உலகில் கர்ப்பப்பைப் புற்றுநோய் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. அதைவிட இன்றைய மருத்துவ முறைகளில் புற்றுநோயை அகற்றும் நோக்கில் கர்ப்பப்பையையே அகற்றி விடுகின்றனர். நமது பாரம்பரிய மருத்துவமுறைகளை அறியாத இன்றைய இளம் தலைமுறையினர் பெண்ணிற்கே உரிய கர்ப்பப்பையினை அகற்றி பெண்ணிற்கான தன்மையினை இழந்து விடுகின்றனர். நம் பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்திக் கர்ப்பப் புற்றுநோயின் வீரியத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்து இந்நோயினை சீர் செய்யலாம்.


கர்ப்பப்பை சீராவதற்குரிய தீர்வுகள்


உடலில், கர்ப்பப்பையில் எந்தப் பிரச்சனைகளும் இல்லை. இருந்தும், கருத்தரிப்பு ஏற்படாமல் தள்ளிப்போகிறது. எனில் இதற்கு கைப்பிடியளவு வேப்பிலைக்கொழுந்து, முனைமுறியாத மஞ்சள் கிழங்கு இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொண்டு மாதவிலக்கு ஏற்பட்டுத் தலைக்குக் குளித்தவுடன் தொடர்ந்து மூன்று நாட்கள் காலை வெறும்வயிற்றில் வெந்நீருடன் கலந்து குடிக்கவேண்டும். இதேபோல் மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்துவர கர்ப்பப்பை சீராகும் மலட்டுத் தன்மை நீங்கிக் குழந்தைப்பேறு உண்டாகும். வேப்பிலையைக் கைப்பிடியளவு, மஞ்சள்(ஒரு விரலில் பாதி) கொழிஞ்சிவேர் ஒரு துண்டளவு, சின்னக் கரித்துண்டு, அருகம்புல்-பத்து இவையனைத்தையும் நன்றாக அரைத்து மாதவிலக்கு தோன்றிய முதல் மூன்று நாட்கள் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இவ்வாறு குடிக்கும்போது வாந்தி வரும். அவ்வாறு வருவதுபோல் இருந்தால் அரிசியை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் குடிக்க கருப்பையில் உள்ள பூச்சி இறந்து மாதவிலக்கோடு வெளிவந்துவிடும்.
வேம்பின் இலை மற்றும் பட்டை, பழம், விதை போன்றவை பெண்களின் மலட்டுத் தன்மையினைப் போக்குவதற்கு மருந்தாக அமைகின்றன. வேம்பு ஒரு கிருமி நாசினியாகும். கர்ப்பப்பையில் உள்ள கருவைப் பூச்சிகள் கடித்துவிடும் இதனால் கருப்பையில்; கருவானது தங்காது. மேலும் கருப்பை சீராவதற்கு வேம்பின் மருந்து மிகச் சிறந்ததாகும். அதனால்தான் கிராமப்புறங்களில் ‘கூழுக்குமிஞ்சின விருந்துமில்ல, வேப்பிலைக்கு மிஞ்சின மருந்துமில்ல’ என்ற பழமொழி வழக்கில் இருந்து வருகின்றது.


கர்ப்பப்பையைப் பாதுகாக்கும் வழிகள்

கர்ப்பப்பைப் பராமரிப்பு என்பது பெண்களுக்கு மிகவும் அவசியமானதாகும். பூப்பெய்திய நாள் தொடங்கி ஏழு நாட்களுக்குப் புளித்த மோரில் நல்லெண்ணை கலந்து வெறும் வயிற்றில் குடித்துவர வேண்டும். மேலும் உளுந்தங்களி, உளுந்தம் பருப்பில் செய்த திண்பண்டங்களைத் தொடர்ந்து உண்பதன் மூலமும் உடல் மற்றும் கர்ப்பப்பையை வலுப்பெறச் செய்யலாம். தினந்தோறும் ஐந்து அரச இலைக் கொழுந்தினைக் காலை வெறும் வயிற்றில் தின்றுவந்தால் கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கலாம்.
இளம் பருவப் பெண்கள் நாள்தோறும் பத்து உலர்ந்த திராட்சைப் பழத்தை உண்ண வேண்டும். பேரீச்சம்பழங்களைத் தேனில் கலந்தும் சாப்பிடலாம். இதனால் பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகை நீங்கி, இரத்த ஓட்டம் சீராகும். கர்ப்பப்பையும் வலுப்பெறும்.

பெண்ணாகப் பிறந்தவள் அவள் தாயாகும் போதுதான், அவளது பிறப்பானது முழுமையடைகிறது. ஆனால் அவள் தாயாவதற்கு முன் கர்ப்பப்பை சீராக இல்லையென்றால் அவளால் தாயாக முடியாது. கர்ப்பப்பை சீராக இல்லை என்பதனை வெளிப்படுத்தும் விதமாகத்தான் வெள்ளைப்படுதல், மாதவிலக்கின் போது தீராத வலி வயிற்றுவலி, சீரற்ற மாதவிலக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாகவே பெண்களுக்கு மலட்டுத்தன்மையானது ஏற்படுகிறது. எனவே இந்நோய்களைச் சரிசெய்துவிட்டால் பெண்ணின் பிறப்பானது முழுமையடைந்து விடும். பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை நீக்க நமது இயற்கை மருத்துவ முறைகளைக் கொண்டு பெண்கள் தம்மைத் தற்காத்துக் கொள்ளலாம். பாரம்பரிய இயற்கை மருத்துவத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கர்ப்பப்பை பிரச்சினைகளிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.

குழந்தை வரம் கொடுக்கும் மூலிகை மருந்துகள்

சதாவரி, விழுதி, சிறு நெருஞ்சில், சதகுப்பை. (இவை அனைத்தும் சேர்ந்த மருந்துகள் சதாவரி லேகியமாகவும், விழுதி எண்ணெயாகவும் எங்கள் K7Herbocare-ல் கிடைக்கும்)

மேற்கண்ட மருந்துகளையும், மற்றும் சித்த, ஆயுர்வேத மருந்துகளையும் சாப்பிட்டு இயற்கையான குழந்தை பிறப்பிற்கு தயாராகலாம் அல்லது நீங்கள் ஆங்கில மருத்துவத்தின் மூலம் எந்த ஒரு குழந்தை பிறப்பு சிகிச்சைக்கு தயாரானாலும், இந்த மருந்துகள் மூலம் கர்ப்பபையை வலுப்படுத்திக் கொண்டு சிகிச்சைக்கு செல்லும்போது குழந்தை எளிதாக தங்கும்.

 

மேற்கண்ட மருந்துகளை நேரிலோ அல்லது கொரியர் மூலமாகவோ பெற்றுக்கொள்ள

Office Address 

K7 Herbo Care, 

13/A, New Mahalipatti Road,

Madurai-625001, 

Tamilnadu, India.

Whatsapp & Call 1: +91-9025047147.

Whatsapp & Call 2: +91-9629457147.