ரோஜாப்பூ மருத்துவம்

ரோஜா - மருத்துவ பயன்கள்



பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்              Bael Fruit


 

ரோஜா துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடையது, இந்த துவர்ப்பு சுவை இரத்தத்தை கட்டக்கூடியது. இரத்தத்துடன் வரும் மலகழிவு அதாவது சீதபேதி என்கிற நோயை இது குணப்படுத்துகிறது. நீண்ட காலம் மாதவிடாய் ஆகிறது என்பவர்களுக்கு இந்த ரோஜாப்பூ ஒரு அருமையான மருந்து.

இது ஒரு சிறந்த மலமிலக்கியாகவும் பயன்படுகிறது. உடம்பு உற்சாகமாக இருப்பதற்கு நம் பல விலை உயர்ந்த வைட்டமின் மாத்திரைகள் அல்லது டானிக்குகளை மருத்துவரை ஆலோசித்து வாங்கிக்கொள்கிறோம். ரோஜா பூ ஒரு இயற்கை அளித்த உற்சாக டானிக் என்பது பலருக்கு தெரியாது. உடலுக்கு சுறுசுறுப்பை தரக்கூடிய ஒரு அற்புதமான மூலிகை பூ இந்த ரோஜாப்பூ.

ரோஜாப்பூ மிக எளிமையாக கிடைக்கக்கூடிய ஒரு வகை பூ. ஹைப்ரைட் ரோஜாவை பயன்படுத்தாமல் நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜாவை பயன்படுத்துவது மிகவும் நல்லது. எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடியது இந்த நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜா. நம் வீட்டின் நிலத்திலோ அல்லது தொட்டிகளிலோ வைத்து தினம் ஒரு ரோஜாப்பூவை சாப்பிட்டு வந்தால் நம் வயிற்றில் உள்ள புண்கள் ஆறிவிடும்.
 
நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் அடிக்கடி நோய்வாய்ப்படாமல் இருக்க முடியும். உடல் சூடு தணிய ரோஜா நீர் ஊரல் பயன்படுகிறது. ரோஜா நீர் ஊரல் என்பது ரோஜா இதழை 6 லிருந்து 8 மணிவரை நீரில் ஊரவைக்கவேண்டும் அப்படி வைக்க ரோஜாவிலிருக்கும் சாறு நீரில் இறங்கிவிடும் இதுவே ரோஜா நீர் ஊரல் என்று அழைக்கப்படுகிறது.

1. ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் பன்னீர் கண்களில் உள்ள எரிச்சல் தன்மையை நீக்கும்.
2. ரோஜா இதழ், இஞ்சி, புளி, பச்சைமிளகாய், தேங்காய் இவற்றைச் சேர்த்து அரைத்து சட்னி செய்து சாப்பிட உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகி செரிமானமும் எளிதாகும்.
3. ரோஜா இதழ்களை வெற்றிலைப்பாக்குடன் சேர்த்துச் சாப்பிட வாய் துர்நாற்றம் நீங்கும்.
4. சுக்கு - மல்லி காபியுடன் ரோஜா இதழ்களைச் சேர்த்து அருந்த அஜீரணம் அகலும். தலைசுற்றல், மயக்கம், இதயம் தொடர்பான கோளாறுகள் நீங்கும்.
5. ரோஜா இதழ் குல்கந்து உடலுக்கு வலிமை, குளிர்ச்சி அளிக்கும்.
6. ரோஜாப்பூ கஷாயத்தில் பசும்பால், சர்க்கரை சேர்த்துப் பருகி வந்தால் பித்தநீர் மிகுதியால் ஏற்படும் மயக்கம், வாய்க்கசப்பு, நெஞ்சு எரிச்சல் நீங்கிவிடும்.
7. ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு காலை, மாலை வாயிலிட்டு மென்று சாப்பிட வயிற்றுக்கடுப்பு, சீதபேதி குணமாகும். வாய்ப்புண், குடல்புண் ஆறும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கு நீங்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறுநீர் எளிதாகப் பிரியும்.
8. ரோஜாப்பூ இதழ்களுடன் துவரம்பருப்பு கலந்து கூட்டு செய்து உண்டுவர உடல் உஷ்ணம் சம நிலைப்படும். உடல் பலத்தையும் சுறுசுறுப்பையும் கொடுக்கும். மூளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும்.

நன்றி: விகாஸ்பீடியா

 மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...  
To Buy the Herbals and also For Contact...