கருவேலம் பிசின் பயன்கள்
பால் உணர்வு தூண்டும் கருவேலம் பிசின்
புண்களை குணப்படுத்தும்
கருவேல மரத்தின் இலைகள், பட்டை, பிசின் மற்றும் கனிகள் மருத்துவ பயன் கொண்டவை. துளிர் இலைகளின் வடிசாறு தசை இறுக்கும் தன்மை கொண்டது. வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதிக்கு மருந்தாகிறது. பசையாக்கப்பட்டு புண்களின் மீது பூசப்படுகிறது. புண்களை ஆற்றப் பயன்படும் இந்த கசாயம் மலச்சிக்கலுக்கு இனிமாவாக பயன்படுகிறது.
பல்பொடியாகும் பட்டை
கருவேலம் பட்டையில் டேனின்கள் அதிகம் உள்ளது. இது தசை இருக்கும் தன்மை கொண்டது. இதன் கசாயம் புற்றுநோய் மற்றும் சிஃபிலிஸ் பால்வினை நோய்களில் வாய் கழுவியாகவும், கொப்பளிப்பாகவும் உதவுகிறது. தொண்டைக் கம்மல் மற்றும் பல்வலியும் போக்கும். கோனோரியா, சிறுநீரகத்தின் கல், பெண்குறிநோய் மற்றும் வெள்ளைப்படுதல் ஆகியவற்றில் ஊசி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. பட்டையின் கரியும், பாதம்கொட்டை ஓட்டின் கரியும் உப்புடன் கலந்து பல்பொடியாக உதவுகிறது.
பால் உணர்வு தூண்டும்
பிசின் நீரிழிவு நோய்க்கும் வயிற்றுப்போக்கு நிறுத்தவும் நீருடன் கலந்து தரப்படுகிறது. காய்ந்த பிசின் பொடியாக்கப்பட்டு கொய்னாவுடன் கலந்து வயிற்றுப்போக்குடனான காய்ச்சல் நீக்க உதவும். பிசினின் பொடி முட்டை வெண்கருவுடன் சேர்த்து தீப்புண் மற்றும் கொப்புளங்கள் மீது பூசப்படுகிறது. இரத்தபோக்கினை நிறுத்த வல்லது. நெய்யில் வறுத்து உபயோகித்தால் வலுவேற்றியாகவும் பால் உணர்வு தூண்டுவியாகவும் பயன்படும். பிசினின் மருத்துவ குணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இது கணையத்தில் இருந்து இன்சுலின் சுரத்தலை ஊக்குவித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. கனிகளின் கசாயம் சிறுநீர் இனப்பெருக்க உறுப்பு நோய்கள் தீர்க்க பயன்படுகிறது.
தாது என்றால் நமது உடலில் உள்ள நரம்பு ஆகும். ஆணின்
சுக்கிலத்தையும்(விந்து) தாது எனச் சொல்வதுண்டு. தாது புஷ்டி லேகியம்
என்பதை நரம்புகளை வலிவாக்கி உடல் உறுப்புகளை பொலிவாகவும் மிளிரச் செய்யும்
மருந்து என பொருள் கொள்ளலாம். நவீன அலோபதி மருத்துவத்தில் உள்ள வைட்டமின்
மற்றும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளைப் போல ஒன்றுதான் இந்த தாது புஷ்டி
லேகியம். இதனை ஆண்,பெண் இருபாலாரும் பயன்படுத்தலாம்.
தாம்பத்திய உறவு சிறக்க, குழந்தைப் பேறு கிடைக்க இந்த தாது புஷ்டி லேகியம்
வாராது வந்த மாமருந்து என்பது மாதிரியான விளம்பரங்களை இன்றைக்கும்
நாளிதழ்களில் நாம் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது.உடலை உறுதி செய்து
உவப்புடன் வாழ்ந்திட நமது முன்னோர்கள் உருவாக்கிய இந்த மருந்தினைக் குறித்த
இது மாதிரியான பல தவறான கருத்தாக்கஙக்ள் நம்மிடையே இருப்பது வருத்தமான
உண்மை.
எனவே இந்த தாது புஷ்டி லேகியத்தை நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு
மருந்து என்கிற வகையில் அணுகுவதே சரியானதாக இருக்கும். தாது புஷ்டி லேகியம்
பற்றி பல் வேறு சித்தர் பெருமக்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். அதன்
தயாரிப்பு முறைகளும் அவர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. இவை
ஒவ்வொன்றும் தனித்துவமானவை, வேறுபட்டவை. அவரவரின் உடலின் தன்மை மற்றும்
குறைபாடுகளைப் பொறுத்து இந்த லேகியத்தின் தயாரிப்பு முறைகள் மாறுபடும்.
இன்றைய பதிவில் தேரையர் அருளிய ஒரு முறையினை பார்க்க இருக்கிறோம். இந்தத் தகவல் தேரையர் அருளிய “தேரையர் வைத்திய சாரம்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
கைமுறையாய்ச் சொல்கிறேன் பலமிரண்டு
பாத்திடுவாய் சுக்கொடு சர்க்கரை பேரீச்சம்பழம்
பாகுவெந்தயம் கொப்பரைத் தீக்காட்டி
சேத்திடுவாய் வகையொன்று பலமே யொன்று
திறமாக வடிசெய் கோதுமைப் பொரிமா
யேத்திடுவாய் பலமெட்டு பனைவெல்லம்தான்
யெட்டுப் பலம் பாகுபிடித் தூளைப்போடே.
போட்டடா லேகியம் போலக் கிண்டி
புகழான ஆவின்நெய் பலம்நால் விட்டு
ஆட்டடா எலுமிச்சங்காய் போலந்தி
அப்பனே மண்டலமோ ரரைதான் கொள்ளு
ஓட்டடா கிரந்தி வெள்ளை யிடுப்பு நோய்தான்
உத்தமனே தாதுபுஷ்டி மிகவுண்டாகும்
மாட்டடா நெய்யன்னம் வெல்லத்தோ டுண்ணு
மாதர் மயக்கம் புளிமண்டலமே தள்ளு.
கருவேலம் பிசின் இரண்டு பலம், சுக்கு, சர்க்கரை, பேரீச்சம் பழம், வெந்தயம்,
கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றில் வகைக்கு ஒரு பலம் வீதம் எடுத்து, அவற்றை
ஒன்று சேர்த்து கல்வத்தில் இட்டு நன்கு இடித்துத் தூளாக்கி துணியில்
சலித்து எடுத்துக் கொள்ளவேண்டுமாம் (இதுவே சூரணம் எனப்படும்). பிறகு ஒரு
மண் பானையில் எட்டு பலம் பனைவெல்லத்தையும் இட்டு அடுப்பில் வைத்து எரிக்க
பனைவெல்லம் உருகி பாகு பத்தில் வருமாம். அப்போது முன்னர் சலித்து எடுத்து
வைத்த சூரணத்தை சிறிது சிறிதாக பானையில் போட்டு கிண்ட வேண்டுமாம்.
அது சற்று இறுகிய நிலையில் வந்ததும் அதனுடன் பசுவின் நெய் நான்கு பலம்
விட்டுக் கிண்டி அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து, சேமித்துக்
கொள்ளவேண்டுமாம். இதுவே தேரையர் அருளிய தாது புஷ்டி லேகியம்.இந்த
தாதுபுஷ்டி லேகியத்தில் எலுமிச்சம் காய் அளவுக்கு எடுத்து காலை மாலை என்று
இரு வேளையாக, தொடர்ந்து இருபத்தி நான்கு நாட்கள் சாப்பிட்டு வரவேண்டுமாம்.
இதனால் தாதுபுஷ்டி உண்டாகுமாம். அது தவிர கிரந்தி, வெள்ளை, இடுப்பு நோய்
போன்றவைகளும் குணமாகும். பத்தியமாக சாதத்தில் நெய், வெல்லம் சேர்த்து
சாப்பிடவும். புளியையும், பெண் சேர்க்கையும் மருந்துண்ணும் நாட்களில்
இருந்து நாற்பத்தெட்டு நாட்கள் நீக்கிவிடவேண்டும் என்கிறார்.
குறிப்பு :- ஒரு பலம் என்பது தற்போதைய அளவுகளில் 35 கிராம் ஆகும்.
நன்றி: https://tamil.boldsky.com/health/herbs/2011/medicinal-benefits-gumarabic-aid0090.html
http://www.siththarkal.com/2013/02/thadhupushti.html