நில ஆவாரை அல்லது நிலாவரை

நில ஆவாரை அல்லது நிலாவரை
பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்              Bael Fruit

 மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...
 

நில ஆவாரைக்கு நிலவாகை, நிலா விரை, ஆலதூலம், தாளினி முதலிய வேறு பெயர்களும் உள்ளன.

நிலா விரையின் இலைகள் மட்டும் பல மருந்து தயாரிப்புக்குப் பயன்படுகிறது. இது ஒரு செடிவகையைச் சேர்ந்தது. கசப்புச்சுவையும் வெப்ப வீரியமும் கொண்டது. நில ஆவாரை மருந்து தயாரிப்பிற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. பல கம்பெனிகள் நில ஆவாரையில் இருந்து மருந்து தயாரிக்க பேட்டண்ட் உரிமை பெற்று மருந்துகள் தயாரிக்கின்றன. தமிழகத்தில் பல இடங்களில் மூலிகைச் சாகுபடி செய்யப்படுகிறது. நமக்குத் தேவைப்படும் நில ஆவாரையை நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நில ஆவாரை மூட்டுவலிகளை நீக்கவும், மூலநோயை நிவர்த்திக்கவும், மலச்சிக்கலைப் போக்கவும் முக்கிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

இம்மூலிகையைச் சாதாரணமாக, எளிய முறையில் தயாரித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொதுப்பிரயோகமாக 3_5 கிராம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நில ஆவாரையின் தனித்தன்மை, அனுமானமுறைகளுக்குத் தகுந்தாற்போல் மருத்துவ குணங்கள் வேறுபடும். வெவ்வேறு முறைகளின் நன்மைகளைப் பெற முடியும். நில ஆவாரை இலைச்சூரணத்தை 5 கிராம் அளவில் எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், ஊளைச்சதை குறையும். காய்ச்சல், மூலவாயுக்கள், வயிற்று உப்பிசம், வயிற்றுவலி, மலச்சிக்கல் தீரும்.

இச்சூரணத்தை பசுநெய்யில் குழைத்துச் சாப்பிட்டால் இரத்தசுத்தியாகும். இரத்த விருத்தியாகும். உடம்பு பெருக்கும்.

சரியான வயது வந்த பெண்கள் பூப்பு அடையாமல் இருந்தால், இச்சூரணத்தை

5 கிராம் அளவில் தினசரி சாப்பிட்டு வந்தால் பூப்பு அடைவார்கள்.

இச் சூரணத்தைக் குப்பைமேனிச் சாற்றில் 5_10 கிராம் வரை சேர்த்துச் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று வேளை மருந்தில் தேள் கொட்டிய விஷம் நீங்கிவிடும்.

இச்சூரணத்தை வெந்நீரில் 5_10 கிராம் வரை கலந்து சாப்பிட்டால், ஈஸ்னோஃபிலியா, இருமல் தீரும்.

இச்சூரணத்தைக் கொடிக் கள்ளிச்சாற்றில் குழைத்துச் சாப்பிட்டால் குளிர் காய்ச்சல் நீங்கும்.

ஆலம் பழுப்புச் சாற்றில் சாப்பிட்டால் பெருச்சாளி கடித்த விஷம் தீரும்.

வேப்பம்பட்டைச்சாற்றில் சாப்பிட்டால் அரணை, வண்டுகளின் கடி விஷம் நீங்கும்.

எலுமிச்சம் பழச்சாற்றில் சாப்பிட்டால் சில விஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும். விஷங்களுக்கு மருந்து சாப்பிடும்போது புளியில்லாப் பத்தியம் இருக்க வேண்டும்.

பசுவின் கோமியத்தில் இச்சூரணத்தைச் சாப்பிட்டால் சொறி, சிரங்கு, பெருவயிறு, மகோதரம், நீராமை நோய்கள் நீங்கும். புளி இல்லாத பத்திய உணவு சாப்பிடவேண்டும்.

இந்தச் சூரணத்தை தினமும் 5_10 கிராம் தேனில் குழைத்துச் சாப்பிட்டுவந்தால், நீர்த்துப்போன இந்திரியம் கெட்டிப்படும். போக சக்தி அதிகரிக்கும்.

பேரீச்சம்பழத்தில் இச்சூரணத்தைச் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் தேகம் வலிமைபெறும். நல்ல பசி உண்டாகும்.

தும்பைச்சாற்றில் குழைத்துச் சாப்பிட்டால் ரத்தசோகை நோய் நீங்கும்.

இளமை நீடிக்க வேண்டுமானால், இச் சூரணத்தைக் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் போதுமானது.

நொச்சி இலைச் சாற்றில் இச்சூரணத்தைச் சாப்பிட்டால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

இச்சூரணத்துடன் கிராம்புப்பொடி சேர்த்துச் சாப்பிட்டால் தாது விருத்தி உண்டாகும்.

மாதுளம் பழச்சாற்றில் கலந்து சாப்பிட்டால் உடம்பில் கெட்ட வாடைகள் இருக்காது.

திராட்சைப் பழத்துடன் இச்சூரணத்தைச் சேர்த்துச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

பசும்பாலில் இச்சூரணத்தை ஒரு மண்டலம் வரை சாப்பிட்டால் உடம்பு பூரிப்பு அடையும். சர்க்கரையுடன் இச்சூரணத்தைச் சாப்பிட்டால் பித்த நோய்கள் தீரும்.

நெல்லிக்காய்ச் சாற்றில் கலந்து சாப்பிட்டால் சில தினங்களில் தீராத உடம்பு எரிச்சல் நீங்கும். பருத்திக் கொட்டையை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து இச்சூரணத்தைச் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் வாதரோகங்கள் தீரும்.

வெள்ளாட்டுப் பாலில் இச்சூரணத்தைச் சேர்த்துச் சாப்பிட்டால், விந்து ஊறும், விந்து கெட்டிப்படும்.

இச்சூரணத்தை நல்லெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால் பாம்புக் கடியின் விஷம் தீரும்.

பொதுவாக இச்சூரணம் சாப்பிடுபவர்கள் மருந்து சாப்பிடும் காலம் வரை புளி சேர்க்காமல் இருப்பது நல்லது. மருந்தின் வீரியம் கெடாது. நெய், பால் தொடர்ந்து ஆகாரத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

இச்சூரணம் வாத சுரத்துக்குப்பின் ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் பயன்படுத்தினால், பூரண நிவாரணத்தைப் பெற முடியும்.

வாத சுரத்தால் ஏற்பட்ட எலும்பு பாதிப்பு, இதய நோய், மூட்டு வலி ஆகியவை வந்து விட்டால், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இம்மருந்தைச் சாப்பிட்டு நோய் நிவாரணம் அடையலாம்.

எலும்புத் தேய்வு நோய்க்கு மிக முக்கியமான மருந்தாகும். எலும்புத் தேய்வினால் ஏற்படும் வீக்கத்திற்கும், வலிக்கும் இச்சூரணம் நல்ல நிவாரணம் தருகிறது.

கழுத்து எலும்புத் தேய்வு, முதுகு எலும்புத் தேய்வு, இடுப்பெலும்பு மூட்டுக்களில் தேய்வு, முழங்கால் மூட்டுக்களில் எலும்புத் தேய்வு, கணுக்கால்களில் வீக்கம், வலி ஆகியவற்றிற்கும் மூட்டு வாதத்திற்கும் இந்தச் சூரணத்தைச் சாப்பிட்டு நல்ல பலனைப் பெறலாம். இந்தச் சூரணம் சாப்பிடுவதால் எலும்பு மூட்டு களுக்குத் தேவையான எண்ணெய்ப் பசையை உற்பத்தி செய்து நோய் நிவாரணம் பெற உதவுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இச்சூரணத்தை 5_10 கிராம் அளவில் எடுத்துத் தேனில் குழைத்துக் காலை, மாலை சாப்பிட்டு வரவேண்டும்.

இச்சூரணத்தை 5 கிராம் அளவில் எடுத்து 300 மில்லி பாலில் சேர்த்துக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் மலமிளக்கியாகச் செயல்படும்.

5_10 கிராம் சூரணத்தை நன்றாகக் கொதிக்கவைத்து கஷாயமாகத் தயாரித்து தினசரி சாப்பிட்டு வந்தால், இரத்த சுத்தியாகும். இரத்தத்தில் உள்ள மாசுகள் அகற்றப்படும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்; மண்டலக் கணக்கில் இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், மிக எளிதாக இடுப்பு மூட்டு வலி, நரம்பு வலி, கழுத்து வலி, கால் மூட்டுக்களில் ஏற்படும் வலி வீக்கங்கள் அனைத்தும் குணமாகும்.

இச்சூரணம், முடக்கத்தான் இலைச் சூரணம், உத்தாமணி இலைச்சூரணம் ஆகிய மூன்றையும் ஒரு கைப்பிடியளவில் எடுத்து, 500 மில்லி தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டும் வரை எரித்து காலையில் சாப்பிட வேண்டும். இவ்வாறு 3_6 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பாரிச வாயுக்கள் குணமாகும்.

நில ஆவாரை இலை, நீரடி முத்துப் பருப்பு, பூவரசம்பட்டை, உப்பு இவற்றைச் சமமாக எடுத்து மைபோல் அரைத்து உடம்பு பூராவும் பூசி அரை மணி நேரம் வைத்திருந்து குளித்து விட்டால், அலர்ஜியால் ஏற்பட்ட நமைச்சல் தீரும்.

சூரணம் : நிலாவரை, சுக்கு, மிளகு, ஓமம், வாய்விடங்கம், சர்க்கரை சமமாக எடுத்து தனித்தனியாகச் சூரணித்து சலித்து வைத்து ஒன்றாகக் கலந்து 1_2 கிராம் சூரணம் தினமும் இரண்டு வேளை வெந்நீரில் கலந்து சாப்பிட்டால்,

வாயு பொருமல், விம்மல், விக்கல், கபநோய், உடம்பு எரிவு, இரைப்பிருமல், வாந்தி, மலச்சிக்கல், பித்தம் முதலிய அனைத்து நோய்களும் தீரும்.

லேகியம் : கடுக்காய், பிஞ்சுக் கடுக்காய் நெல்லி வற்றல், சுக்கு, நிலாவரை, சோம்பு, கருப்பு உப்பு, தனியா இவற்றைத் தனித்தனியாக இடித்து தலா 50 கிராம் அளவில் எடுத்து வாதுமை எண்ணெய் தேவையான அளவு சேர்த்து அடுப்பில் வைத்து 225 கிராம் தேன், 50 மில்லி எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து லேகியபதம் வரும்வரை சிறு தீயாக எரிக்க வேண்டும். பதத்தில் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு இரவு படுக்கும்போது, ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால், சுலபமாக மலமிளகும். வாத, பித்த, கபம் என்னும் மூன்று தோஷங்களால் ஏற்படும் அனைத்து வகை தோஷங்களும் நிவர்த்தியாகும்.

சுகபேதிக்கு : ரோஜா மொக்கு 25 கிராம், நிலாவரை 15 கிராம், சுக்கு 10 கிராம், கிராம்பு 5 கிராம் இவைகளைச் சிதைத்து 500 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி, பெரியவர்களுக்கு 120 மில்லி, சிறுவர்களுக்கு 60 மில்லி, ஒரு வயதுக் குழந்தைக்கு 15 மில்லி வீதம் கொடுத்தால், சுகபேதியாகும்.

இவ்வாறு கொடுத்து பேதியாவதால் களைப்பு இருக்காது. குடல் மாசு நீங்கும். உடல் சுறுசுறுப்பாக இயங்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். கண்கள் குளிர்ச்சியடையும்.

சூலை நோய் உள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மலமிளக்கி மருந்து.

ஐந்து கடுக்காய்த்தோல், பத்துகிராம் நிலாவரை இலை, ஐந்து கிராம் ரோசா மொக்கு மூன்று கிராம் சுக்கு இவை நான்கையும், நசுக்கி 250 மில்லி தண்ணீரில் முதல் நாள் இரவு ஊறப்போட்டு, அடுத்த நாள் காலையில் அடுப்பில் வைத்து பாதியாகச் சுண்ட வைத்து வடிகட்டி ஆறியபின் குடிக்க வேண்டும். இரண்டு முதல் மூன்று முறை மலம் வெளியாகும். இத்துடன் மூட்டுக்களில் உண்டாகித் தேங்கியுள்ள வாயுநீர் வெளியாகி விடும். மூட்டுக்களில் அதிகம் வீக்கம் உள்ளவர்கள் வாரம் ஒருமுறையும், லேசான வீக்கம் உள்ளவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறையும் இக்கஷாயத்தைத் தயாரித்து சாப்பிட்டு வரவேண்டும். இவ்வாறு நோய் தீரும் வரை சாப்பிட வேண்டும்.

தைலம் : நில ஆவாரை அரைத்த விழுது இரண்டு எலுமிச்சங்காய் அளவில் எடுத்துக் கொண்டு சீரகம் 35 கிராம், ஒரு வில்வப்பழத்தின் சதைப்பகுதி இவற்றை நன்கு அரைத்து ஒன்று சேர்த்து 1_500 மில்லி நல்லெண்ணெயில் கலந்து தைல பதம் வரும்வரை காய்ச்சி வைத்துக் கொண்டு தலை முழுகி வந்தால் பித்தம் தொடர்பான அனைத்துக் காய்ச்சல்களும் தீரும். கண்கள் ஒளி பெற்று பார்வை நன்றாக இருக்கும்.

நிலாவரை, மஞ்சள், மிளகு, கடுக்காய்த் தோல், வேப்பங்கொழுந்து வகைக்கு 50 கிராம் சூரணித்து, காலை, மாலை 10 கிராம் அளவில் சாப்பிட்டால், பதினைந்து தினங்களில் பித்த வாயு நீங்கும். மூளைக்கோளாறு உள்ளவர் களின் மூளை தெளிவடைந்து இயல்பு நிலைக்கு வரத்துவங்கும். தேவைப்பட்டால் மீண்டும் தயாரித்துச் சாப்பிடலாம்.

நிலாவரை சமூலத்தையும் வேகவைத்து, ஆறியபின் பால் கொடுக்கும் தாய்மார்களின் முலைகளில் வைத்துக் கட்டிக் கொண்டாலும், பூசிக் கொண்டாலும் மூன்று தினங்களில் பால் சுரப்பு அதிகரிக்கும்.

நிலாவரை இலை, மருதாணி இலை, துரா இலை இவை மூன்றையும் சமமாக எடுத்து ஜாடியில் வேக வைத்து மைபோல் ஆகும்வரை வெந்தபின் எடுத்து வைத்துக்கொண்டு, தலையில் தேய்த்து சிறிது நேரம் ஆனபின்பு தலை முழுகி வந்தால், தலையில் உள்ள பொடுகு நீங்கும். முடி உதிர்வது நின்று விடும். வழுக்கையான பகுதியில் மீண்டும் முடி முளைக்கும். நரை முடி உள்ளவர்கள் இம்மருந்தைப் பூசுவதால், தலைமுடி கருப்பு நிறமாக இருக்கும். வேறு சாயங்கள் பூச வேண்டியதில்லை.

நன்றி: http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7124.html

மேற்கண்ட நிலாவரை மூலிகை வாங்க மற்றும் தொடர்புக்கு...  
To Buy the Herbals and also For Contact...