வாடாமல்லி பூ மருத்துவம்

வாசமில்லாத வாடாமல்லி பூவின் மருத்துவப் பயன்கள் !!




பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்              Bael Fruit

 
 

♥நம் வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் வாடாமல்லி சனி பகவானுக்கு உகந்த மலராகும். சனி பகவானுக்கு வாடாமல்லி மாலையை அணிவிப்பது நல்லது. இவ்வாறு இறை வழிபாட்டிற்கு பயன்படுவது மட்டுமின்றி மருத்துவ பயன்களுக்கும் சிறந்த மலராக திகழ்கின்றது. இது பலவித நோய்களுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இப்பொழுது வாடமல்லியின் மருத்துவப் பயன்கள் பற்றிப் பார்ப்போம்.

♥வாடாமல்லி பூக்கள் மற்றும் இலைகளை நீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி ஆறவைத்து கண்களை கழுவினால் கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை, அரிப்பு சரியாகும். இதன் இலை மற்றும் பூக்களைப் பயன்படுத்தி சேற்று புண்கள், கொப்புளங்களை எளிதில் குணமாக்கலாம்.

#தாய்மார்களுக்கு :
♥குழந்தைகள் போதிய அளவு பால் குடிக்காததாலோ, அதிகமாக பால் சுரப்பதாலோ தாய்மார்களுக்கு வீக்கம் மற்றும் வலி ஏற்படுகிறது. இதற்கு வாடமல்லி சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

♥வெற்றிலையில் விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒன்றின் மீது ஒன்று அடுக்காக வைத்து மார்பகத்தின் மேல் கட்டி வைப்பதால் சில நாட்களில் வலி மற்றும் வீக்கம் சரியாகும்.

தோலில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்க
♥வாடாமல்லி விழுது ஒரு கப், தயிர் ஒரு கப் (தயிர் இல்லாத நேரத்தில் பாலை கூட பயன்படுத்தலாம்) எடுத்து, அதை நன்றாக குழைத்து, உடலில் மேற்பூச்சாக பயன்படுத்தினால் தோலில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்கலாம்.

தோல் பராமரிப்புக்கான தைலம் :
♥தேவையானப் பொருட்கள்:
தேங்காய் எண்ணெய், வாடாமல்லி.
#செய்முறை:
♥ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து, அதனுடன் சிறிதளவு வாடாமல்லி பூக்களின் அரைத்த விழுதைச் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
♥தினந்தோறும் குளிப்பதற்கு முன்பு தோலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்துவர தோல் சுருக்கம் மறையும்.

♥இது தலைமுடிக்கு நல்ல மருந்தாகிறது. இரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது. மேலும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை போக்கவும் உதவுகிறது.

#ஆஸ்துமாவைக் குணமாக்க :
♥ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் வாடாமல்லி இதழ் விழுது, இரண்டு சிட்டிகை சுக்குப் பொடி, இரண்டு சிட்டிகை மிளகுப் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ள வேண்டும்.

♥ பின் இதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு தேன் சேர்த்து மிதமான சூட்டில் பருகுவதன் மூலம் ஆஸ்துமா தொல்லையிலிருந்து விடுபடலாம்.

நன்றி: கல்கி

மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...