அருகம்புல்

அருகம்புல்




பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்              Bael Fruit

 

தெய்வீக மூலிகையாகப் போற்றப்பட்டாலும் அருகம்புல் மருத்துவ குணங்கள் ஆச்சரியப்படும் படியானது. நவீன மருந்துகளால் தீர்க்க முடியாத குறிப்பிட்ட நோய்களைத் தீர்த்து நல்ல பலனைத் தருகிறது.


இதயத்தின் பாதுகாவலனாக இருக்கிறது. பலவிதமான இதய நோய்களையும், ரத்தக் குழாய் அடைப்பையும், ரத்த ஓட்டத் தடைகளையும், ரத்தக் குழாய் பலவீனத்தையும் அருகம்புல் மூலமே தீர்த்துவிட முடியும்.



அருகம்புல் எங்கும் பயிராக்க கூடியது. நீர்நிலை ஓரங்களிலும், தோட்டக் கால்களிலும் எப்பொழுதும் கிடைக்கும். சிறுநீரக நோய்களையும், சிறுநீர்ப்பை நோய்களையும், பெண்களின் மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப் பெரும்பாட்டையும் அருகம்புல் நிவர்த்தி செய்கிறது. வயிற்றுப் புண்களை நிவர்த்தி செய்கிறது. குறிப்பாக டியோடினல் புண்ணை ஆற்றுவதில் நிகரற்றது.


வாதபித்த கபநோய்களைத் தீர்த்து சமநிலைப்படுத்துகிறது கண்நோய்களை நீக்குகிறது. மதுமேகம், தந்திமேகம், வெள்ளை, வெட்டை நோய்களை அருகம்புல்சாறு நிவர்த்திக்கிறது. அருகம்புல் சாறு தினசரி அருந்தி வந்தால் மேற்கண்ட நோய்கள் அனைத்துக்கும் பொதுப் பலன் கிடைக்கும். ஒரு மண்டலம் வரை தொடர்ந்து சாப்பிடலாம். ஒரு கைப்பிடியளவு அருகம் புல்லைச் சுத்தம் செய்து அம்மியில் அரைத்து 100 மில்லியில் கலக்கி வடிகட்டி காலையில் சாப்பிட்டு வந்தால் இரண்டு தினங்களில் நோயின் தீவிரம் குறைவதை தெரிந்து கொள்ளலாம். நோயின் தன்மைக்கு ஏற்ப 15_30 தினங்கள் சாப்பிடலாம்.


வெள்ளை, வெட்டை, மதுமேகம், தந்தி மேகம் குணமாக அருகம்புல்லை ஒரு கிலோ அளவிற்குச் சுத்தம் செய்து நன்கு அரைத்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும். அதை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி தெளிய வைத்து தெளிந்த நீரை மீண்டும் வடிகட்டி மூன்று பாகமாக்கி காலை, மாலை இரவு ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். இவ்வாறு சில தினங்கள் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்கள் தீரும்.


 குழந்தைகளின் கபம், சலதோஷம், நீங்க அருகம்புல்லை ஒரு கைப்பிடியளவு எடுத்து, துளசி இலைகள் 10 சேர்த்து சுடுநீரில் போட்டு மூடி இரவு வைத்திருந்து காலையில் இந்த தண்ணீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் கபம், சீதள நோய் நிவர்த்தியாகும். அருகம்புல் இரண்டு கைப்பிடியளவு துளசி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து இத்துடன் ஆடாதொடை இலை ஒரு கைப்பிடியளவு சேர்த்து மூன்றையும் நன்றாக மசிய அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை ஆடா தொடை இலையில் வைத்து மூடி ஆவியில் வேக வைத்து இதன் சாற்றைப் பிழிந்து தினம் மூன்று வேளை உணவுக்கு முன் சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு 5 வயது வரை ஒரு தேக்கரண்டியும், 10 வயதுவரை 2 தேக்கரண்டியும் 10 வயதுக்குமேல் 3 தேக்கரண்டியும் சம அளவு தேன் கலந்து குழைத்துக் கொடுத்தால் சலதோஷமும், கபநோய்களும் தீரும்.


அருகம்புல்லை வேருடன் சேகரித்துச் சுத்தம் செய்து இடித்து சாறு தயாரித்து 200 மில்லி சாற்றுக்கு இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால். இதயம் பலப்படும் இதயம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கும். வெண்தாமரை மலர் இதழ்கள் இரண்டு பூக்களில் சேகரித்து ஒரு கைப்பிடியளவு அருகம்புல்லையும் சேர்த்துச் சிதைத்து 300 மில்லி தண்ணீரில் போட்டு 100 மில்லியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி பாலில் கலந்து காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தநோய் சீராகும். இதயப் பிணிகள் நீங்கும். இதயம் வலிமையடையும். அருகம்புல்லை எடுத்துச் சுத்தம் செய்து 20 கிராம் அளவில் எடுத்து 100 மில்லி தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துச் சாற்றை வடிகட்டி அதிகாலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் குணமாகும். இதயம் சீராக இயங்கும். இதயம் வலிமை பெறும். இதயத்தில் சேரும் விஷத் தன்மையுடைய ரசாயனங்களை அழித்து விடும். இரத்தத்தில் தேவைக்கு அதிகம் உள்ள உப்புக்களை வெளியேற்றி இதயப்பாதுகாப்பிற்கு உதவும். தினசரி 100 மில்லியளவு அருகம்புல் சாற்றை 30 மில்லியளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தி உண்டாகும். இதயத்தைப் பலப்படுத்தும்.


அருகம்புல் ஒரு கைப்பிடியளவும், காணாம் வாழை இலை ஒரு கைப் பிடியளவும் எடுத்து இரண்டையும் நன்றாக அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து சில தினங்கள் சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் இருபாலாருக்கும் ஏற்பட்ட வெள்ளை ஒழுக்கு குணமாகும். அருகம்புல், காணாம் வாழை இலை, அசோக மரப்பட்டைத்தூள் தலா ஒரு கைப்பிடியளவு எடுத்து அம்மியில் நன்றாக அரைத்து ஏழு நெல்லிக்காய் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் பெண்களின் உதிரப் போக்கும், பெரும்பாடும் நின்று விடும். அருகம்புல், சிறு நெருஞ்சில் வேர் சமமாக எடுத்து 125 மில்லி தண்ணீரில் சேர்த்துக் காய்ச்சி பாதியாகத் தண்ணீர் சுண்டியதும் மருந்தைப் பிழிந்து வடிகட்டி தினசரி மூன்று வேளை 60 மில்லி வீதம் சாப்பிட்டால் மூன்று தினங்களில் நீர்க் கடுப்பும், ஆசனக் கடுப்பும் நீங்கிவிடும்.


அருகம் புல்லை வேருடன் கொண்டு வந்து சுத்தம் செய்து அரைத்த விழுதை ஒரு மண்டலம் சாப்பிட்டால் அஸ்தி வெட்டை, மூல வெட்டை நீங்கும். நரம்புகள் பலப்படும். ரத்தத்தில் சேர்ந்துள்ள சகல விஷத் தன்மையும் நீங்கி விடும். அருகம் புல்லை வேருடன் பிடுங்கி வந்து சுத்தம் செய்து இதற்குச் சமம் மிளகு சேர்த்து மை போல அரைத்து இரண்டு நெல்லிக்காய் அளவு, காலை மாலை 5_10 தினங்கள் சாப்பிட்டு வந்தால் வெள்ளை வெட்டை நோய்கள் நிவர்த்தியாகும். புளியில்லாப் பத்தியம் இருக்க வேண்டும். அருகம்வேர் ஒரு கைப்பிடியளவு எடுத்து இதில் 20 மிளகு சேர்த்து நசுக்கி 200 மில்லி தண்ணீரில் காய்ச்சி கஷாயமாகத் தயாரித்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மேகச்சூடு தணியும்.


அருகம்புல்லைக் காய வைத்து சூரணம் தயாரித்து இரண்டு சிட்டிகை சிறியவர்களுக்கும், 500 மில்லி கிராம் பெரியவர்களுக்கும் தினசரி காலை மாலை உணவுக்கு முன் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் எந்தப்பிணியும் வராமல் பாதுகாக்கும், நரை திரை மூப்புப் பிணிகள் தள்ளிப்போகும்.


அருகம்புல்லை வேருடன் பிடுங்கி வந்து சுத்தம் செய்து 100 மில்லியளவு சாறு எடுத்து 100 மில்லி பாலில் கலந்து ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும், மூலக்கடுப்பும், ரத்தம் வருதலும் நிற்கும். அருகம் வேர், மிளகு, சீரகம், அதிமதுரம், சித்தரத்தை, மாதுளம் பூ சமமாகச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி கஷாயமாகத் தயாரித்து வடிகட்டி கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் சகல விஷத் தன்மைகளும் நீங்கி விடும். வெட்டை நோய் தீரும். மூலச்சூடு தணியும்.


மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருந்தால் அருகம்புல் சாறு 100 மில்லி தயாரித்து சாப்பிட்டு வந்தால் மூக்கிலிருந்து ரத்தம் வருதல் நிற்கும். அருகம்புல்லில் நீர் தெளித்து இடித்துப் பிழிந்த சாறு ஒரு லிட்டர் சேர்ந்தால் தேங்காய் எண்ணெய் 350 மில்லி சேர்த்து வைத்துக் கொண்டு, தனியாக அருகம்புல்லை அரைத்த விழுது ஒரு எலுமிச்சங்காய் அளவு இத்துடன் சேர்த்துக் காய்ச்சினால் வண்டல் மெழுகு பதம் வரும். இந்தப் பதத்தில் எடுத்து வைத்துக் கொண்டு தீப்புண்கள் மீது தடவி வந்தால் தீப்புண்கள் ஆறிவிடும். சேத்துப் புண்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். எக்சீமாவுக்கு மேல் பூச்சாகப் பயன்படுத்தினால் படிப்படியாக எக்சீமா குணமாகும்.


அருகம்புல்லை தேவையான அளவு சேகரித்து இதில் பூண்டுப் பல் 5 ம், மிளகு 15ம் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொண்டு, நமைச்சல், சொறி, சிரங்கு, பூச்சிக் கடிகளுக்கு மேல்பூச்சாக பூசி வர வேண்டும். தினம் இரண்டு வேளை அருகம்புல் சாற்றையும் சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் 10_15 தினங்களில் நோய் நிவர்த்தியாகும். அருகம்புல்லும், புங்கம் பட்டையும் சேர்த்து அரைத்து மேல் பிரயோகமாகப் பூசி வந்தால் புண், புரைகள், படை, ஆறாத ரணங்கள் ஆறி விடும். சில நாட்கள் பயன்படுத்தினால் புண்களில் சீழ் பிடிக்காமல் ஆறிவிடும்.


அருகம்புல்லும், மஞ்சளும், பச்சைப் பயறும் சேர்த்து அரைத்து மேலுக்குப் பூசி, குளித்து வந்தால் தோல் நோய்கள் வராமல் பாதுகாத்து தோலின் பாதுகாவலனாகச் செயல்படும். உடலுக்கு நல்ல அழகைத் தரும். தேமல் நீங்கி விடும். தோலின் நிறம் மாறும்படியான தடிப்பு, சொறி, அலர்ஜியை நீக்கி விடும். அருகம்புல்லின் சாறு ஒரு லிட்டர் தயாரித்து 300 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்து இதில் 20 கிராம் அதிமதுரப்பொடியை சேர்த்துக் காய்ச்சி தைல பதத்தில் எடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் பொட்டு, பொடுகு, சுண்டுகள் நீங்கி விடும் சொறி சிரங்கு அரிப்புகள் மறைந்து விடும்.


அருகம்புல் வேரை ஒரு கைப்பிடியளவு எடுத்து சுத்தம் செய்து அரைத்த விழுதைத் தினசரி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். அருகம்புல் சாற்றை தினசரி 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் புத்தி மந்தம் விலகும். அறிவு துலங்கும். புத்தி தெளிவடைந்து பிரகாசம் அடையச் செய்வதில் தன்னிகரற்ற மூலிகையாகும்.


நன்றி: http://pettagum.blogspot.com/2011/03/blog-post_4728.html


 மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...  
To Buy the Herbals and also For Contact...