ஆவாரை
ஆவாரை
பிரண்டை உப்பு Pirandai Salt
சீந்தில் சர்க்கரை Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி
1. மூலிகையின் பெயர் -: ஆவாரை.
2. தாவரப்பெயர் -: CACSIA AURICULTA.
3. தாவரக்குடும்பம் -: CAESALPINIACEAE.
4. பயன்தரும் பாகங்கள் -: இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் ஆகிய அனைத்தும் மருத்துவப் பயனுடையவை.
5. வளரியல்பு -: ஆவாரை தமிழகமெங்கும் அனைத்துவகை நிலங்களும் ஏற்றவை. எல்லா இடங்களிலும் தானே வளர்கிறது. வியாபார நோக்குடனும் பயிரிடுகிறார்கள். பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி, மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டைத் தோல் பதனிடப் பயன்படுகிறது. இது ஒரு வருடப் பயிர். வேர் எடுக்காவிட்டால் ஆண்டுக்கணக்கில் உயிருடன் இருக்கும். ஆவாரஞ்செடி பயிரிட முதலில் நிலத்தை நன்றாக உழுது உரமிட்டு நீள் பாத்திகள் அமைக்க வேண்டும். ஆவாரை விதைகளை நேரடி விதைப்பெனில் 15 கிலோவும், நாற்றங்கால் என்றால் 7.5 கிலோவும் தேவைப்படும். 45 நாட்கள் வயதுடைய நாற்றை நீள் பாத்திகளில் 1.5 அடிக்கு 1.5 அடி இடைவெளியில் நட வேண்டும். பயிர் தண்ணீருக்குப் பின் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாயச்ச வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இலைகளைப் பறிக்கலாம். ஒரு வருடத்தில் 2000 கிலோ இலைகள், 250 கிலோ பூக்கள், மற்றும் 500 கிலோ காய்கள் கிடைக்கும். பதப்படுத்த நிழலில் 5 நாட்கள் உலரவைக்க வேண்டும் இலைப்புள்ளி, இலைச்சுருட்டு நோய்கள் வராமல் இருக்க மருந்துக் கொல்லியைப் பயன் படுத்த வேண்டும். செலவு ஒரு வருடத்திற்கு ரூபாய் 12,000 வரவு ஒருவருடத்திற்கு 60,000 ஆக வருமானம் ரூ.48,000 இவை தோராயமானவை.
6. மருத்துவப் பயன்கள் -: ஆவாரை சதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல் படும். சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து. உடம்பின் சரும துர்வாடையைப் போக்குவதுடன் நிறமூட்டும்.
இதன் முக்கிய வேதியப் பொருட்கள் -: மரப்பட்டையில் டானின்கள் உள்ளன. பீட்டா ஸிஸ்டீரால் மற்றும் கெம்ப்பெரால் பூக்களில் உள்ளன. இலைகளில் 3 வகை கீட்டோ ஆல்கஹால்களும் சாமோடிக்கும் உள்ளன. இது தவிர கொரடென்சிடின் மற்றும் ஆரிகுளமாசிடின் உள்ளன.
“ சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேகநீ
ரெல்லா மொழிக்கு மெருவகற்று – மெல்லவச
மாவாரைப் பம்பரம் போல் லாட்டுத் தொழிலணங்கே
யாவாரை மூலியது.”
ஆவாரை செடியானது சர்வ பிரமேக மூத்திர ரோகங்களையும் ஆண்குறி எரிவந்தத்தையும் குணமாக்கும்.
முறை -: அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மட்கலயத்தில் போட்டு அரைப்படி சலம் விட்டு அடுப்பில் வைத்து சிறுக எரித்து வீசம் படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மதுமேகம், ரத்த மூத்திரம், பெரும்பாடு, தாகம் இவை போம். இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டி லேகியமாகவும், சூரணமாகவும் கியாழமாகவும் கொடுப்பதுண்டு.
பூச்சூரணத்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன்படுத்த மேகவெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வற்ட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.
ஆவாரையின் பஞ்சாங்க (வேர், இலை, பட்டை, பூ, காய்) சூரணம் 10 கிராம் வீதம் காலை, மதியம், மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம், மதுமேகம், மிகுதாகம், மிகுபசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் முழுதும் வேதனை, பலக்குறைவு, மயக்கம், மூச்சுத் திணறல், ஆகியவை தீரும். 45, 90, 135 நாட்கள் சாப்பிட வேண்டும்.
ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணையுடன் (ஆவாரைத் தைலம்) காய்ச்சி, தலை முழுகி மதுமேகம் உடையவருக்கு காணும் தோல் வெடிப்பு, வறட்சி, எரிச்சல் குணமாகும்.
20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போகுதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.
நன்றி: மூலிகைவளம்
மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...