பாவட்டை

பாவட்டை




பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி


1. மூலிகையின் பெயர் -: பாவட்டை.
2. தாவரப்பெயர் -: PAVETTA INDICA.
3. தாவரக்குடும்பம் -: RUBIACEAE.
4. பயன்தரும் பாகங்கள் -: இலை, தண்டு. காய், வேர் முதலியன.
5. வேறு பெயர்கள் -: Bride’s bush, Christmes bush.
6. வளரியல்பு -: பாவட்டை எப்பொழுதும் பச்சையாக இருக்கும் ஒரு புதர். தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் புதர் காடுகளிலும், பெருங்காடுகளிலும் தானே வளர்கிறது. மெல்லிய காம்புள்ள இலைகளை எதிரடுக்கில் கொண்ட குறுஞ்செடிப் புதர். கொத்தான வெண்ணிற மலர்களை உச்சியில் கொண்டது. இது நவம்பர் டிசம்பர் மாதங்களில் பூக்கும். இது 2 அடி முதல் 4 அடி உயரம் வரை வளரக்கூடியது. இலை 6-15 செ.மீ. நீளம் இருக்கும். இதன் வெண்மையான பூக்கள் பூச்சிகளைக் கவரும்.. பச்சையான காய்கள் முதிர்ந்து கருப்பு நிறமாக உருண்டையாக இருக்கும். இது 6 மி.மீ. விட்டத்தைக் கொண்டது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகமாகக் காணப்படும். இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
7. மருத்துவப் பயன்கள் -: பாவட்டை வேர் அல்லது இலை, கொன்றை, சிற்றாமுட்டி, வேலிப்பருத்தி இவற்றின் வேர், மிளகு, ஓமம் வகைக்கு10 கிராம் இடித்து 4 லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராகக் காயச்சி வடித்து வேளைக்கு 30 மி.லி யாக தினம் 3 வேளை கொடுத்து வர வாத சுரம் போகும்.
பாவட்டை வேர், பூலாப்பூ சமனளவு அரைத்துக் கனமாகப் பூச அரையாப்புக் கட்டிகள் கரையும்.
பாவட்டைக் காயை சுண்டைக் காய் போலக் குழம்புகளில் சேர்த்து உண்டு வர வாத, கப நோய்கள் விரைவில் குணமாகும்.
பாவட்டை இலையை வதக்கி வாத வீக்கம், வலி ஆகியவற்றிற்கு இளஞ்சூட்டில் வைத்துக் கட்ட அந்நோய்கள் குணமாகும்.
‘ வாத சுரந்தணியம் வாயரிசி யேகிலிடுஞ்
சீதக் கடுப்பகலுந் தேமொழியே-வாதபுரி
பித்தவதி சாரமொடு பேராக் கபமுமறு
முற்றபா வட்டங்காய்க்கு ’ .
பாவட்டக் காய்க்கு வாதசுரம், அரோசகம், சிதக் கடுப்பு, பித்தாதி சுரம், சிலேஷ்ம தோஷம் நீங்கும் என்க.
இந்த காய்க்கு முத்தோஷங்களையும் கண்டிக்கின்ற குணமுண்டு, இதனை வாத சுரங்களுக்குச் சித்தப்படுத்தும் படியான கியாழங்களில் சிறிது சேர்த்துப் பாகப் படுத்தலாம். இன்னும் பச்சைச் சுண்டக் காயை எப்படி குழம்புகளில் உபயோகப் படுத்துகிறார்களோ அப்படியே இதனையும் உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் கப சம்பந்தமான ரோகங்கள் வாத சம்பந்தமான ரோகங்கள் விரைவில் குணமடையும்.
‘ சீதவா தங்களறுந் தீபனமோவண்டாகும்
வாதங் கப்மொழியும் வார்குழலே-போதவே
ஆவட்டத் தாகடி மற்றுவடுந் தோஷம் போம்
பாவட்டைப் பத்திரிக்குப்பார். ’
பாவட்டை இலையால் சிலேஷ்ம வாதம், வாதகப தோஷம் ஆயாசம் தாபசுரம், திரி தோஷம் ஆகியவை போம். பசியுண்டாம் என்க.

நன்றி: மூலிகைவளம்

மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...